No menu items!

276 கோடி வசூலில் ’வாரிசு’

276 கோடி வசூலில் ’வாரிசு’

பொங்கல் கொண்டாட்டமாக வெளியான ‘வாரிசு’ ரிலீஸாகி 19 நாட்கள் ஓடிவிட்டன.
டிவி சிரீயல் போல இருக்கிறது என்ற எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தும் வசூலில் நன்றாகவே போய் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 19 நாட்கள் வசூல் நிலவரம்

தமிழ்நாடு: 125.60 கோடி

தெலுங்கானா & ஆந்திரா: 27.00 கோடி (தமிழ் வாரிசு ரிலீஸையும் சேர்த்து)

கர்நாடகா 14.30 கோடி

கேரளா 11.85 கோடி

இந்தியாவின் பிறபகுதிகள் 14.00 கோடி

ஒவர்சீஸ் 83.25 கோடி

மொத்த வசூல் : 276.00 கோடி (இதில் ஷேர் 140.80 கோடி)


மார்பக அறுவை சிகிச்சை அவசியமா- சமீரா ரெட்டி

துணிச்சலான ஒரு சில தமிழ் நடிகைகளில் ஒருவர் ’செக்ஸி சாம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சமீரா ரெட்டி.

பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் போதே, பட்டென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

சினிமாவுக்குதான் டாட்டா காட்டினாரே தவிர கேமராவுக்கு காட்டவில்லை.

இப்பொழுதெல்லாம் சோஷியல் மீடியாவில் சமீராவும் அவரது குழந்தைகளும் மாமியாரும் அப்லோட் செய்யும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு.

பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமாச்சாரங்களையும், பேசத் தயங்கும், வெட்கப்படும் விஷயங்களையும் கூட அவ்வப்போது பேசி வருகிறார் சமீரா ரெட்டி.

திருமணமாகி குழந்தைப் பெற்ற பிறகு சிக்கென்று இருந்த சமீரா, கொஞ்சம் எடை கூட, எக்கச்சக்கமான நெகட்டிவான மெசேஜ்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். சமீரா இதிலிருந்து மீண்டு வரவே நீண்ட காலம் பிடித்துவிட்டது.

எனக்கே இப்படியென்றால், ஒரு சாதாரண பெண் இதை எப்படி சமாளிக்க முடியும் என்று யோசித்தவர், தன்னைப் போல் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதையும் உற்சாகப்படுத்துவதையும்தான் செய்து வருகிறார்.

‘’நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, நீ ஏன் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யக்கூடாது’ன்னு நிறைய பேரு எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க. ஆனால் நான் அந்த முடிவை கடைசி வரை எடுக்கல.

பத்து வருஷத்துக்கு முன்னாடி, எல்லோருக்கும் ப்ளாஸ்டிக் சர்ஜரி மேல் மோகம் இருந்துச்சு. மூக்கை மாத்துறது, எலும்பு அமைப்பை மாத்துறது, மார்பகத்தை எடுப்பாக காட்டுறதுன்னு பல சர்ஜரிகள். நடிக்கும் போது என்னோட மார்பகத்தை எடுப்பாக காட்ட பேட் யூஸ் பண்ணுவேன், இதனால் என்னோட மார்பகத்தை எடுப்பாக காட்டுறதுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண ஐடியா கொடுத்தாங்க.

ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாமா வேண்டாமான்னு எனக்குள்ள பல யோசனைகள். ஒரு நடிகையா மார்பகத்தை அழகாக்க சர்ஜரி பண்ணலாம்னு தோணூச்சு. ஆனால் கடைசியில் பண்ணல. கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்.

ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிறது ஒவ்வொருத்தரோட விருப்பம். அதை தப்பு சொல்ல.’’ என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சமீரா ரெட்டியின் பாட்காஸ்ட்டுக்கு எக்கச்சக்க ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.


சீனியர் ஹீரோக்களின் டார்லிங் -ஷ்ருதி ஹாஸன்

கமலின் மகள் ஷ்ருதி ஹாஸன் நடிக்க வருகிறார் என்றதுமே ஏகப்பட்ட எதிர்பார்பு இருந்தது.
ஆனால் படங்களில் கமிட்டானதை விட காதல், லிவ்விங் டு கெதர் கிசுகிசுக்களில் அதிகம் கமிட்டானார்
இதனால் ஷ்ருதியை கமிட் செய்ய இங்கேயுள்ள ஹீரோக்கள் தயக்கம் காட்ட, மும்பைக்குப் பறந்தார்.
அங்கே அம்மாவின் ஆதரவு இருந்தும், ஹிந்தியிலும் நினைத்த மாதிரி படங்கள் கிடைக்கவில்லை..

அப்படி இப்படி ஒரு ரவுண்ட் அடித்தவர் இப்போது செட்டிலாகி இருப்பது தெலுங்கு சினிமாவில். ஆரம்பத்தில் அங்கே இளம் ஹீரோக்களுடன் நடித்தவர் இப்பொழுது சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மும்முரம் காட்டுகிறார்.

அங்கே சங்க்ராந்திக்கு வெளியான இரண்டு முக்கியப்படங்களிலும் ஹீரோயின் ஷ்ருதி ஹாஸன்தான். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என அறுபதை தொட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இரண்டுப் படங்களுமே ஹிட் என்பதால் ஷ்ருதிக்கு மவுசு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் தெலுங்கு சினிமாவில், ‘சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தால், சம்பளம் அதிகம் கிடைக்கும், ஷூட்டிங் நாட்கள் கம்மியாக இருக்கும், அதான் சீனியர் ஹீரோக்கள் படங்களில் கமிட்டாகும் ரகசியம்’ என்கிறார்கள்.

இந்த இரண்டுப் படங்களுக்கும் தலா 2.5 கோடி சம்பளம், வாங்கியிருக்கிறாராம் ஷ்ருதி ஹாஸன்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...