No menu items!

சரிந்து விழுந்த ராஷ்மிகா மார்கெட்!

சரிந்து விழுந்த ராஷ்மிகா மார்கெட்!

உச்சத்திற்கு போன அதே ஜெட் வேகத்தில் கீழே பாதாளத்தில் விழுந்தால் எப்படியிருக்கும்?

இப்போது ராஷ்மிகாவுக்கு எப்படியிருக்கிறதோ அப்படிதான் இருக்கும்.

‘கீதா கோவிந்தம்’, ‘புஷ்பா’ என இரண்டுப் படங்கள்தான். கூகுள் ராஷ்மிகாவை ‘நேஷனல் க்ரஷ்’ என்று தூக்கி வைத்து கொண்டாடியது. தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ், ஹிந்தி சினிமாவிலும் ராஷ்மிகாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

ஆனால் ராஷ்மிகா சினிமா கேரியரில் அடுத்தடுத்து ப்ளாப் படங்கள். தெலுங்கில்தான் ராஷ்மிகா நடித்தப் படங்கள் ஓடவில்லை என்றால், ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் நடித்த ‘குட்பை’, ஓடிடி-யில் வெளியான ‘மிஷன் மஞ்சு’, தமிழில் விஜயுடன் நடித்த ‘வாரிசு’ என அடுத்தடுத்து ப்ளாப் அல்லது கலவையான விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்திருக்கின்றன.

விஜயின் ’வாரிசு’ வசூலில் நன்றாக இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அடுத்து அவர் நடித்த ’சீதா ராமம்’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பாராட்டப்பட்டாலும், அதில் ராஷ்மிகாவுக்கு கெஸ்ட் ரோல்தான்.

இதனால் இவர் ஹீரோயின் நடித்தப் படங்கள் எல்லாமே ப்ளாப் ஆக அமைந்திருக்கின்றன.

இதனால் பரபரவென எகிறிய ராஷ்மிகா மந்தானாவின் மார்க்கெட் அடுக்கி வைத்த சீட்டுக்கட்டைப் போல பொலபொலவென சரிய ஆரம்பித்திருக்கிறது.

#Pushpa, #AadavalluMeekuJohaarlu, #SitaRamam, #Telugufilms, #Hindifilms, #Tamilfilms, #Varisu ,#Vijay, #GoodBye, #AmitabhBachchan, #SiddharthMalhotra, #OTT #Animal, #RanbirKapoor, #rashmika, #raashmikamandanna, #thalapathy #ranjithame,


ட்ரெண்ட் செட்டர் ஆன அஜித்

சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு ட்ரெண்ட் உருவாகும். அந்த ட்ரெண்ட் ஒன்றிரண்டு வருடங்கள் தாக்குப்பிடிக்கும்.

உதாரணத்திற்கு ‘பருத்திவீரன்’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றதும், அடுத்தடுத்து கிராமத்து கதைகளைப் படமெடுப்பது இங்கே ட்ரெண்ட் ஆனது. அதேபோல் பேய் படம் ஓடினால், அடுத்து விதவிதமான பேய் படங்கள் வெளியாகி ரசிகர்களை திகிலில் அலற வைத்தன.

அந்த வகையில் கொஞ்சம் முன்பு வரை ட்ரெண்டாக இருந்தது ’சீக்வல்’ வகையறா படங்கள். ஒரு படம் வெற்றிப்பெற்றதும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த பட்டியலில், ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘விக்ரம்’ மாதிரியான படங்கள் அடங்கும். இவை தவிர ‘பிரம்மாஸ்திரா’, புஷ்பா’ போன்ற படங்கள் சீக்வல் பாணியில் ஷூட் செய்யப்பட உள்ளன.

இப்போது ‘சீக்வல்’ ட்ரெண்ட்டையும் தாண்டி, ‘ப்ரீக்வல்’ படங்களுக்கு மாற ஆரம்பித்திருக்கிறது இந்திய சினிமா.

ப்ரீக்வல் என்பது ஒரு படம் வெற்றியானதும் அதற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து, பாக்ஸ் ஆபீஸ், பிஸினெஸ் என இரண்டிலும் கல்லா கட்டும் வகையில் எடுக்கப்படுவை.

இந்த ப்ரீக்வல் வகையில் ‘காந்தாரா 2’ படத்தை எடுக்க இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதேபோல் ஷங்கர், கமல்ஹாசன் இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’, பா. ரஞ்சித் ஆர்யா இணையவிருக்கும் ’சார்பட்டா 2’, இவை இரண்டும் கூட ப்ரீக்வல் வகை படமாக இருக்கும் என்கிறார்கள்.

ப்ரீக்வல் பற்றி இப்போது பேசப்பட்டாலும் கூட அதில் பல ஆண்டுகளுக்கு முன்பே சக்ஸஸ் காட்டியவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடித்த ‘பில்லா’ ரீமேக்கில் அஜித் நடிக்க, அந்தப் படம் அவரது சினிமா கேரியரில் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது. அதனால் அடுத்தும் ’பில்லா 2’ எடுத்தார்கள். ’பில்லா 2’ என்பது பில்லா எப்படி ஒரு பெரிய டான் ஆனார் என்று சொல்லும் ப்ரீக்வலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ப்ரீக்வல் ட்ரெண்ட்டில் முன்னோடியாக இருக்கிறார் அஜித்.

#Sequels, #Prequels, #ak #ajith, #billa ,#kgf, #kantara ,#bramashtra, #sarpatta,2 #indian, #indian2 ,#pusha,


ஆஸ்கர் விருதிற்காக 80 கோடியா?

’ஆஸ்கர் விருதை எப்படியாவது வாங்கியே ஆகவேண்டுமென ‘ஆர் ஆர் ஆர்’ படக்குழுவினரும், ராஜமெளலியும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆஸ்கர் விருதை வாங்குவதற்காக இவர்கள் செய்திருக்கும் ப்ரமோஷன் செலவு மட்டும் 80 கோடி. இந்த பணத்தில் குறைந்தது 8 அல்லது 10 படங்கள் எடுத்திருக்கலாம்’ என்று ராஜமெளலி, ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்பட அனைவரையும் பற்றியும் வெளிப்படையாக கமெண்ட் அடித்திருக்கிறார் தெலுங்கு சினிமாவின் சீனியர் டைரக்டர் தம்மா ரெட்டி.

இவரது கமெண்ட் தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

2023 ஆஸ்கர் விருதுகளில் ’சிறந்த பாடல் பிரிவுக்கு’ ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது மேடையில் லைவ்வாக பாடப்படவும் இருக்கிறது.

இந்நிலையில் தம்மா ரெட்டியின் கமெண்ட்டுக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லை.

ஆனால் மற்றொரு சீனியர் இயக்குநரான ராகவேந்திரா ராவ், தம்மா ரெட்டியை வெளுத்து வாங்கியிருக்கிறார். ’ஆஸ்கர் விருது ப்ரமோஷனுக்காக 80 கோடி செலவு செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே அந்த செலவுக்கான கணக்கு விவரங்கள் ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா. இல்லை இந்தப் படத்தைப் பாராட்டிய ’அவதார்’ டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன், ஹாலிவுட்டின் சூப்பர் டைரக்டர் ஸ்பீல் பர்க் இருவரும் பணம் வாங்கிக்கொண்டு புகழ்ந்து பேசினார்கள் என்று சொல்கிறீர்களா’ என்று பதிலடி கொடுக்க, தெலுங்கு சினிமாவில் இப்போது ஏக ரணகளம்.

#Telugudirector, #TammareddyBharadwaj, #RRR, #80crore, #Oscarscampaign, #NaatuNaatu, #JamesCameroon, #Steven Spielberg, #avatar,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...