ரொம்ப ரொம்பப் பெருசா மதுரைல தயாராகிட்டு இருக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் இந்த பிரமாண்ட லைப்ரரிக்காக செலவு பண்ணியிருக்காங்க. 2.13 லட்சம் சதுர அடி ஆறு மாடிகள்னு இந்த நூலகம் கட்டப்பட்டிருக்கிறது.
2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுரைல பெரிய லைப்ரரி வைக்கப்படும்னு சொல்லியிருந்தாங்க. அதுக்கான திட்டங்கள் உடனடியா போடப்பட்டு ஜனவரி 2022ல கட்டிடம் கட்டும் பணி ஆரம்பமாச்சு. இப்ப கிட்டத்த முழுசும் முடிஞ்சிருச்சு. சீக்கிரமே இந்த லைப்ரரி திறக்கப்படும்.
ஒன்றரை லட்சம் தமிழ் புத்தகங்கள் இரண்டு லட்சம் தமிழ் புத்தகங்கள் ஆறாயிரம் டிஜிட்டல் புத்தகங்கள் இந்த லைப்ரரில இருக்குமாம். நாலரை லட்சம் புத்தகங்களை வைக்கிறதுக்கு இந்த லைப்ரரில வைக்கிறதுக்கு இடமிருக்கு.
மாற்றுத் திறனாளிகள் ஈசியா வந்துட்ட்டுப் போக தரை தளத்துல அவங்களுக்கான ஒரு லைப்ரரி அமைக்கிறாங்க. இதே தளத்துல ஒரு ஆர்ட் கேலரியும் வைக்கிறாங்க. கூடவே கூட்டங்கள் நடத்துவதற்கான சிறு அரங்கங்களும் அமைச்சிருக்காங்க.
முதல் தளத்துல முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகங்கள், சிறுவர்களுக்கான லைப்ரரி, சிறுவர்களுக்கான விளையாட்டு கூடம், அறியல் பொருட்கள் வைக்கப்படுகின்றன. இதே தளத்தில் தினசரிகள், வார, மாத இதழ்கள் படிப்பறையும் அமைக்கப்படுகிறது.
இரண்டாவது தளத்துல தமிழ் புத்தகங்கள். மூன்றாவது தளத்துல ஆங்கிலம் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பான புத்தகங்கள்.
ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கிறதுக்கு நான்காவது தளத்துல போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வச்சிருக்காங்க.
ஆறாவது தளம் நூலக நிர்வாகத்துக்கானது.
இந்த நூலகத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலையும் வைக்கப்படுகிறது.
மிகக் குறைந்த காலக் கட்டத்தில் மிகப் பிரமாண்டமாய் இந்த அறிவுக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.
சென்னைல இருக்கிற அண்ணாவு நினைவு நூலகம்தான் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமா இருக்கு. அதற்கடுத்து இந்த மதுரை லைப்ரரி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நூலகத்தை தமிழ்நாட்டின் தென் பகுதிக்கு கிடைத்த ஞானக் கொடை, அறிவுக் கொடை என்று பட்டிமன்ற நடுவர் – மதுரை மைந்தன் சாலமன் பாப்பையா குறிப்பிடுகிறார்.