No menu items!

ரஷ்யாவில் அஜித்தின் குட் பேட் அக்லி

ரஷ்யாவில் அஜித்தின் குட் பேட் அக்லி

‘விடாமுயற்சி’ படத்தின் ஷுட்டிங்கை எப்படியாவது தொடர வேண்டுமென, லைகா ப்ரொடக்‌ஷன் விடாமுயற்சியுடன் திட்டமிட்டு வருகிறது. அதுவரைக்கும் ஏன் ஷூட்டிங் போகாமல் இருக்கவேண்டுமென அஜித், கால்ஷீட் கொடுத்தப்படம் ‘குட் பேட் அக்லி’.

இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதனால் இசையமைப்பாளராக அந்நிறுவனத்தின் ஆதரவு பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘மார்க் ஆண்டனி’ மாதிரி ஒரு பெரிய படம் இயக்க காரணமே நம்ம தலதான் என்று தல புராணம் பாடும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் என்பதால், பெரும்பான்மையான காட்சிகளை ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் எடுக்கும் வகையில்தான் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ் வாடை இருக்க வேண்டுமென்பதற்காக சில காட்சிகளை சென்னையில் எடுக்க இருக்கிறார்கள்.

ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்ததும், அஜித் மற்றும் குட் பேட் அக்லி படக்குழுவினர் ரஷ்யாவிற்கு பறக்கிறார்கள். அங்கு ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்கும் திட்டமிருக்கிறதாம். விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கோட்’ பட ஆக்‌ஷன் காட்சிகளும் ரஷ்யாவில்தான் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தயாரிப்பு நிறுவனம் பரபரவென எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறதாம். காரணம் இந்த ஷெட்யூல் முடிந்ததுமே, ரஷ்யா கிளம்பவில்லை என்றால், விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் கேட்டால் அது அடுத்தடுத்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கும் என்ற முன்னெச்சரிகை நடவடிக்கையாம்.

மேலும் அஜித் படம் இதுவரை பல மொழி திரைப்படமாக ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது அதிகமில்லை. ஆனால் குட் பேட் அக்லியை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியிடுவதற்கான வேலைகளையும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.

அஜித் நெட்டிவ்வான, வில்லதனமான கதாபாத்திரத்தில் நடித்தால், அந்தப்படம் நிச்சயம் ஹிட் என்ற சென்டிமெண்ட்டே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். அடுத்த பொங்கலை குறிவைத்து வெளியிடும் வகையில் ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடக்கிறது என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.


அஞ்சலியை கோபமாக தள்ளிவிட்ட பாலய்யா – பின்னணி என்ன?

’நான் முடிவு பண்ணிட்டா, அகேஷனும் பாக்க மாட்டேன். லோகேஷனும் பாக்க மாட்டேன்’ இப்படியொரு பவர்ஃபுல்லான பஞ்ச் டயலாக்கை வைக்குமளவிற்கு கெத்து உள்ளவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அது உண்மைதான் என பாலகிருஷ்ணா நிரூபித்திருக்கிறார்.

‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற தெலுங்குப் படத்தின் படவெளியீட்டுக்கு முந்தைய விழா நடைபெற்றது. இதற்கு தலைமை விருந்தினர் பாலகிருஷ்ணா. இப்படத்தில் நடித்த விஷ்வக் சென், அஞ்சலி, நேகா, இயக்குநர் கிருஷ்ண சைத்தன்யா என எல்லோரும் கலந்து கொண்டனர்.

பாலய்யா சோபாவில் உட்கார்ந்திருக்கும் போது அவரது கால் அடியில் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. அதில் சின்ன பாட்டிலில் கொஞ்சம் மதுபானம் இருப்பது போல் க்ளோஸப் காட்சிகள் ரீல்களாக சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

பாலய்யாவுக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருக்கலாம். அதற்காக இப்படியா ஒரு விழாவில் மதுபானம் அடிப்பது என்ற கமெண்ட்கள் தாறுமாறாக வெளிவர ஆரம்பித்தன.

இந்த ரீல்கள் வெளியான கொஞ்ச நேரத்திலேயே மேடையில் ஒவ்வொருவராக ஏறினர். தலைமை விருந்தினரான பாலய்யா மேடை ஏறியதும், தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த அஞ்சலியை வேகமாக தள்ளிவிட, அஞ்சலி அந்த சூழலைச் சமாளிக்க சிரிக்கார். ஆனாலும் பாலய்யா அஞ்சலியைப் பற்றி ஏதோ கமெண்ட் அடிக்க, கூட்டமும் அஞ்சலியுடன் சேர்ந்து சிரித்தது.

பாலய்யா எவ்வளவு பெரிய மூத்த நடிகராக இருந்தாலும், மேடையில் ஒரு சக நட்சத்திரத்திடம், ஒரு நடிகையிடம் இப்படி நடந்து கொள்ளலாமா. அவர் மதுபானம் குடித்துவிட்டு போதையில் இப்படி செய்திருக்கிறார் என்று சர்ச்சை வெடித்தது.

உண்மையில் நடந்தது என்ன? பிரச்சினையின் பின்னணி என்ன என்று ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க, ’கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தயாரிப்பாளர் நாக வம்சி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை வைக்குமளவிற்கான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.

பாலய்யா காலுக்கு அருகில் இருந்த பாட்டிலில் மதுபானம் இருப்பது போல் வைரலான வீடியோவில், கம்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் ஏதோ செய்திருக்கிறார்கள். நாங்கள்தான் விழாவிற்கு ஏற்பாடு செய்ந்திருந்தோம். விழாவின் நம்பகத்தன்மையை எங்களால் உறுதி செய்ய முடியும் என்று படபடத்திருக்கிறார்.

ஆனால் இந்த பிரச்சினையை அப்படியே விட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தயாராக இல்லை என்கிறார்கள். தெலுங்கு தேச கட்சியின் பாலகிருஷ்ணா மீண்டுமொரு முறை முறை பெண்ணிடம் மரியாதை இல்லாமல் நடந்திருக்கிறார். அவர் மதுபானம் குடித்துவிட்டு, திரைப்பட விழாவில் முறை தவறி நடந்திருக்கிறார். இப்படிதான் தெலுங்கு தேசம் பெண்களை நடத்துமா? என்று சமூக ஊடகத்தில் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இதுதான் இப்போது சர்ச்சையை பெரிதாக்க வைத்திருக்கிறது.

மறுபக்கம், பாலய்யாவுக்கு மது பழக்கம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் அடிக்கடி கோபத்துடன் நடந்து கொள்வார் என்று சமூக ஊடகங்களில் பலர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி தெரியவேண்டும். டீப் ஃபேக் முறையில் மதுபானம் இருப்பது போல் யாராவது விஷமத்தனம் செய்திருக்கிறார்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டுமென குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு பாலய்யாவின் ரசிகர்கள், அந்த பாட்டிலில் இருந்தது மதுபானம் அல்ல. ஆப்பிள் ரசம் என முட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...