தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பட்டாசு வெடித்ததால் சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது. இதில் 4 இடங்களில் மிக கடுமையான காற்று மாசு ஏற்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவாலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பட்டாசுகளை வெடித்து இந்த பண்டிகயை மக்கள் கொண்டாடுவது வழக்கம். மக்கள் பட்டாசுகளை வெடிப்பதால் ஆண்டுதோறும் தீபாவளி சமயத்தில் காற்று மாசு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 1 வாரமாக மக்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டதால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வந்த்து.
தீபாவளி தினத்தன்று, காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இதையும் மீறி பலரும் நாள் முழுக்க பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசின் அளவு அதிகமாக இருந்த்து. குறிப்பாக இரவில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் காற்றின் கலந்துள்ள மாசுபாடு அடிப்படையில் காற்றின் தரம் அளவிடப்படுகிறது. அந்த வகையில், காற்றின் தரக்குறியீடு 50-க்கு கீழ் இருந்தால், சிறப்பாக இருக்கிறது என்றும், 51-100 இருந்தால், திருப்திகரமாக இருக்கிறது என்றும், 101-க்கு மேல் சுமார் என்றும், 201-க்கு மேல் போனால் மோசம் என்றும் அளவிடப்படுகிறது. நேற்று தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்ததில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.
நாடு முழுவதும் காற்றின் கலந்துள்ள மாசுபாடு அடிப்படையில் காற்றின் தரம் அளவிடப்படுகிறது. அந்த வகையில், காற்றின் தரக்குறியீடு 50-க்கு கீழ் இருந்தால், சிறப்பாக இருக்கிறது என்றும், 51-100 இருந்தால், திருப்திகரமாக இருக்கிறது என்றும், 101-க்கு மேல் சுமார் என்றும், 201-க்கு மேல் போனால் மோசம் என்றும் அளவிடப்படுகிறது. நேற்று தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்ததில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது. இதில் பெருங்குடியில் காற்றின் தரம், 262 ஆகவும், ஆலந்தூர் 258, அருகம்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்று காற்றின் தரக்குறியீடு மோசன நிலையில் உள்ளது. அதேபோல் சென்னையின் எந்த பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பானதாக இல்லை என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ராயபுரத்தில் மோசம் என்ற நிலையில் இருந்த காற்றின் தரக் குறியீடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது ஒட்டுமொத்தமாக சென்னையில் காற்றின் தரக்குறியீடு 163 என்ற மிதமான அளவில் பதிவவாகியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டியது. இதில் பெருங்குடியில் காற்றின் தரம், 262 ஆகவும், ஆலந்தூர் 258, அருகம்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்று காற்றின் தரக்குறியீடு மோசன நிலையில் உள்ளது. அதேபோல் சென்னையின் எந்த பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பானதாக இல்லை என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.