செக்ஸ் அதாவது உடலுறவை காமம், காதல், அன்பு, இனப் பெருக்கம் என்று சொல்லிய காலம் எல்லாம் கடந்துவிட்டது.
இப்போது செக்ஸ் ஒரு விளையாட்டு.
படுக்கை விளையாட்டு, பள்ளியறை விளையாட்டு என்று நமது கவிஞர்கள் பாடல்களில் எழுதுவது போன்ற விளையாட்டல்ல, கிரிக்கெட், ஃபுட்பால் போன்று ஒரு விளையாட்டு. அதற்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிக்கப்போகிறார்கள். இந்தப் போட்டிகளை நடத்தப் போவது ஏதோ ஒரு ஆபாச வெப்சைட் அல்ல. ஸ்வீடன் அரசு.
ஆமாம். ஸ்வீடன் அரசு செக்சை ஒரு விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. செக்சை விளையாட்டாக அங்கீகரித்திருக்கும் முதல் நாடு என்ற சரித்திர முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது ஸ்வீடன்.
விளையாட்டு என்று அங்கீகரித்துடன் நிற்கவில்லை. செக்ஸ்க்கா ஐரோப்பிய கோப்பை போட்டிகளை நடத்தப் போகிறது.
இப்படி செய்திகள் வர, வர உலகத்தின் கவனம் இப்போது ஸ்வீடன் பக்கம்தான். இவையெல்லாம் உண்மையா அல்லது வொட்சப் வதந்திகளா என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் உண்மைதான். ஸ்வீடன் நாடு செக்சை விளையாட்டாக அங்கீகரித்தது உண்மைதான். அதற்காக ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தப் போவதும் உண்மைதான்.
ஜூன் 8ஆம் தேதி இந்தப் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. ஆறு வாரங்கள் நடக்கப் போகிறது. நடத்தப் போவது ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரெஷன்.
இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறதே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இதைவிட ஸ்பெஷல் சங்கதிகளும் இந்தப் போட்டித் தொடரில் இருக்கப் போகிறது.
16 பிரிவுகளில் செக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகின்றன. மயக்குவது, முன் விளையாட்டுக்கள், தாக்குப் பிடிப்பது, வாய் நுட்பம்….இப்படி 16 பிரிவுகள். அத்தனை பிரிவுகளையும் எழுதினால் ஆபாச வெப்சைட்டாக மாறிவிடும்.
இந்தப் போட்டிகள் ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் நடக்கும். ஒத்தைக்கு ஒத்தை போட்டிகள் 45 நிமிடங்கள் வரை 1 மணி நேரம் வரை நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துக் கொள்வார்கள். மூன்று நடுவர்கள் இருப்பார்கள். அவர்கள் போடும் மதிப்பெண்கள் மட்டுமில்லாமல், பார்வையாளர்களும் மதிப்பெண்கள் அளிக்கலாம்.
பார்வையாளர்களா? நீங்கள் பதறுவது தெரிகிறது. போட்டி என்றால் பார்வையாளர்கள் இருப்பார்கள் அல்லவா? இந்தப் போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் உண்டு.
ஜோடிகளின் கெமிஸ்ட்ரி, தாக்குப் பிடிக்கும் நேரம், செக்ஸ் பற்றிய புரிதல் இப்படி பல அம்சங்களை கவனித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தியாவின் ஆதிகால காமசூத்திராவைப் பற்றி தெரிந்திருந்தால் போனஸ் பாயிண்டுகள் வழங்கப்படுமாம்.