No menu items!

நயன்தாராவின் திருமணச் செலவு ரூ.2 கோடி

நயன்தாராவின் திருமணச் செலவு ரூ.2 கோடி

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷயங்களில் ஒன்று நயன்தாராவின் திருமணம். பல நாட்களாக தள்ளிப் போய்க்கொண்டு இருந்த இவர்களின் திருமணம் ஒருவழியாக வரும் 9-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமணத்தைப் பற்றி  9 விஷயங்கள்:

மணமக்களின் ஆடைகளை மும்பையைச் சேர்ந்த ஷாதி ஸ்குவாட் (shaadi squad) என்ற குழுவினர் வடிவமைக்கிறார்கள். இவர்கள் காத்ரினா கைஃப் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களின் உடைகளை வடிவமைத்துள்ளனர்.

திருமண ஜோடி மட்டுமின்றி அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ரவுடி பிக்சர்ஸ் டீமுக்கும் இந்த குழுவினர்தான் ஆடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளனர்.

திருமணம் 9-ம் தேதிதான் என்றபோதிலும் அதற்கான கொண்டாட்டங்கள் இன்றே தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று மாலையில் மெகந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்ப உறுப்[பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு  மட்டுமே அனுமதி என்று ஸ்டிரிக்டாக சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திருமணம் என்பதால்,  வினேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் போல தங்கள் திருமணத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் நயன்தாரா. இதனால் இயக்குநர் கவுதம் மேனன்தான் இந்த திருமணத்தை இயக்கி ஓடிடியில் வெளியிடுகிறார்.

மூன்று நாட்கள் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரின் பேட்டிகளோடு சேர்த்து ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

திருமண செலவுக்காக ரூ. 2 கோடியை ஒதுக்கியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

திருமணம் முடிந்து 3  நாட்களுக்குப் பிறகு ஜூன் 11-ம்  தேதி பத்திரிகை மற்றும் இணையதள செய்தியாளர்களை சந்திக்க நயன்தாரா – வினேஷ் சிவன் ஜோடி திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...