No menu items!

கமலை மிரட்டவில்லை – உதயநிதி ஸ்டாலின்

கமலை மிரட்டவில்லை – உதயநிதி ஸ்டாலின்

Kamal நடித்த Vikram திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருப்பதால் மற்ற ஊடகத்தினருக்கு கடுமையான கெடுபிடிகள். விழாவில் என்ன நடந்து? வாவ் தமிழாவுக்காக.

விழாவின் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், சூர்யா ஆஜர் ஆகவில்லை. ரஜினிகாந்துக்காக இருக்கை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.

விக்ரம் திரைப்படத்தில் இறுதி கட்டத்தில் சூர்யா இணைந்து நடித்துக் கொடுத்திருந்தார். அதனால் சூர்யா விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் வரவில்லை.

விழாவில் பல இளம் இயக்குநர்கள் கலந்துக் கொண்டார்கள்.

அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் பேசும்போது, “டைம் மெஷின் இல்லாம எதிர்காலத்துக்கு கூட்டிச் சென்றவர் கமல் சார். நான் இயக்குநாரானதற்கு அவர்தான் காரணம்” என்று குறிப்பிட்டார். இப்படி பல புகழ்மாலைகள் கமலுக்கு வந்து சேர்ந்தன.

கமல் அடுத்து பா.ரஞ்சித் படத்தில் நடிக்க இருப்பதும் உறுதியானது. மதுரை பின்னணியில் எடுக்கப்படும் படம் என்று பா.ரஞ்சித் பேசும்போது குறிப்பிட்டார்.

அவர் பேசும்போது, ‘சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க. அப்படி எதுவும் கிடையாது. ‘விக்ரம்’ அது எல்லாத்தையும் உடைச்சு பெரிய வெற்றிபெறும்னு நம்புறேன். பழைய விக்ரம் அருமையான படம்.’ என்று குறிப்பிட்ட ரஞ்சித், “மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. விருமாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்” என்று கூறி கமலுடன் இணையப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விழாக்களில் அதிகம் தலை காட்டாத சிம்பு வந்திருந்தார். கமலை திரைத் துறை குரு என்றார். “அப்பா என் வாழ்க்கைல எப்படியோ அது மாதிரி கமல் சார் எனக்கு திரைப்பட குரு. விஸ்வரூபம் படம் பிரச்னையின் போது, கமல் சார் கூடவே இருந்தேன்.

ஒவ்வொருமுறை கமல் சார் படம் வரும் போது என்னை கூப்பிடுவாரு, ஒரு தடவை ‘படம் நல்லா இருக்கு,ஆனா ஓடுமான்னு தெரியல’ எனச் சொன்னேன். இன்னொரு தடவ ‘எனக்கு படம் பிடிக்கல. ஆனால் சூப்பர் ஹிட் ஆகும்னு’ சொன்னேன்.

கமல் சார் சிரிச்சாரு. இந்த படத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்னு சொல்றேன். கடுமையா வேலை பார்க்கிற ஒருத்தர், லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்துல அவர் உழைப்பு தெரியும். இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் வச்சுட்டு படம் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. விஜய் சேதுபதி கூட செக்க சிவந்த வானம் படத்துல நடிச்சு இருக்கேன். மலையாளத்துக்கு பஹத் எப்படியோ அப்படி தமிழுக்கு விஜய் சேதுபதி. சிறப்பா நடிக்கிற மூன்று பேர் இந்தப் படத்தில் இருக்காங்க” .” என்றார் சிம்பு

”பழைய விக்ரம் படத்தில் நடித்த விக்ரமுக்கும் இந்த விக்ரமுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். தாடி வெள்ளையாகியிருக்கிறது. அவ்வளதுதான். மத்தபடி அதே சுறுசுறுப்பு. அதே உழைப்பு” என்று கமலைப் புகழ்ந்தார் சந்தானபாரதி.

“13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில. அடுத்து கமல் டைரக்‌ஷன்ல நடிக்கணும் அதுதான் என் ஆசை” என்று தன் ஆசையை தெரிவித்தார் விஜய்சேதுபதி.

“கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போல தான் இந்த படத்தில் கடைசியில் இணைந்தேன். நிறைய பேர் என்னிடம் கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கி விட்டீர்களா என்று கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும் தான் தெரியும். கட்சி தொடங்கி சிறப்பாக செயல்படுறிங்க கமல் சார். ஆனா ஒரு ரெக்வஸ்ட், வருசத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க சார் . ரெட் ஜெயன்ட்ல பல சின்ன படங்கள் தயாரிக்கும் போது பெரிய பலமா கமல் சார் இருப்பாரு. நானும் அவரோட பெரிய ரசிகன்..

இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு ” என்றார் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் விக்ரமை வெளியிடுகிறது.

“இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போய் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு தேவைப்பட்ட காட்சி ஒன்றுக்கு 26 புஷ் அப்கள் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். படம் வெளியானதும் மேக்கிங் வீடியோவாக முதலில் அதை தான் வெளியிடுவேன். இந்த வயதில் கொரோனாவுக்கு பிறகு கமல் சார் உழைப்பை பார்க்கும் போது நாம் பார்ப்பதெல்லாம் வேலையே இல்லை என்று தான் தோன்றுகிறது. இந்த படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதற்கு நன்றி. ஏன் அந்த நன்றி என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்” என்றார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

“உயிரே உறவே வணக்கம்”.. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய படத்தின் விழா நடக்கிறது .தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன்.

நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை. நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் வெளியில் எல்லாம் சென்று நின்றிருக்கிறேன்.

அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரிதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்று வரை நீங்கள் தோளிலிலிருந்து இறக்கவில்லை.

மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால் தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது.

இதுக்கிடையிலே எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்த போது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்த போது எதிர் குரல் கொடுத்தவன் நான்.

ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய் தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார். இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு தான் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். ஏன் நானும் ரஜினியும் திரையில் இருந்தாலும் நண்பர்களாக இல்லையா. இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.

இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்து கொடுத்த சூர்யாவுக்கு நன்றி” என்று அரசியல் சினிமா என்று கலந்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...