No menu items!

அதிமுக பொதுக்குழு – Live Updates

அதிமுக பொதுக்குழு – Live Updates

23.06.2022 காலை 12.55 மணி

பொதுக்குழு நிறைவு பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.

23.06.2022 காலை 12.50 மணி

நிறைவுறையாற்றினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. “திமுக அரசுக்கு சாவு மணி அடித்து மீண்டும் கழகம் ஆட்சியமைக்கும்; முதல்வராக எடப்பாடியார் பதவியேற்பார்” எஸ்.பி.வேலுமணி பேச்சு

23.06.2022 காலை 12.45 மணி

மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 கூடும் என அறிவிப்பு.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

23.06.2022 காலை 12.40 மணி

ஓபிஎஸை தாக்க முயற்சி. பொதுக்குழு மேடையில் ஓபிஎஸ் நின்றிருந்த போது அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீச தொண்டர்கள் சிலர் முயற்சித்துள்ளனர்.

23.06.2022 காலை 12.30 மணி

“கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள், சதிகாரர்கள்” வைத்திலிங்கம் சாடல்

23.06.2022 காலை 12.20 மணி

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வெளிநடப்பு. சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று அறிவித்து சென்றனர்.

23.06.2022 காலை 12.10 மணி

மேடையில் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

23.06.2022 காலை 12.00 மணி

2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அவை தலைவருக்கான கடிதத்தை மேடையில் வாசித்தார் சி.வி.சண்முகம். அக்கடிதத்தில் இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தல். அடுத்த பொதுக்குழு தேதியை இன்றே முடிவு செய்யவும் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

23.06.2022 காலை 11.55 மணி

புறக்கணிக்கப்பட்ட அத்துனை தீர்மானங்களுடன் ஒற்றைத் தலைமை தீர்மானமும் பின்னால் நிறைவேற்றப்படும் என துணை-ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

23.06.2022 காலை 11.50 மணி

பொதுக்குழு மேடையில் திட்டமிட்டிருந்த 23 தீர்மானங்களையும் முன்மொழிந்து ஓபிஎஸ் பேசினார். எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.

இந்த பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் புறக்கணிக்கிறது என திடீரென மைக்கை பிடித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

23.06.2022 காலை 11.40 மணி

மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுக்கு, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

23.06.2022 காலை 11.30 மணி

பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ் , ஈ.பி.எஸ் இருவரும் அமர்ந்தனர். கூடியிருக்கும் தொண்டர்கள் தொடர்ந்து ஒற்றை தலைமை கோரி கோஷமிட்டு வருகின்றனர்.

23.06.2022 காலை 11.20 மணி

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவுக்குள் அதிகரித்த நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அது தொடர்பான விவாதம், ஆலோசனை நடைபெற உள்ளதால் இப்பொதுக்குழு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

23.06.2022 காலை 11.10 மணி

பொதுக்குழு நடக்கும் அரங்குக்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் மேடைக்கு வருவார் என்று தகவல்.

23.06.2022 காலை 11.00 மணி

ஓ.பன்னீர் செல்வம் மேடையில் ஏற கூடாது என தொண்டர்கள் முழக்கமிட்டனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்கள் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக குரல் கொடுத்ததால் மேடைக்கு கீழே முன் வரிசையில் ஓபிஎஸ் அமர்ந்துவிட்டார்.

23.06.2022 காலை 10.50 மணி

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உணவு தயாரிப்பு பணிகள் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

23.06.2022 காலை 10.40 மணி

கூட்ட அரங்கில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில் மேடையில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கீழே இறங்கினார்

23.06.2022 காலை 10.30 மணி

பொதுக்குழு அரங்கில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம். குவிந்துள்ள தொண்டர்களை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

23.06.2022 காலை 9.10 மணி

பொதுக்குழு நடைபெறும் அரங்குக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார்

23.06.2022 காலை 9.00 மணி

பொதுக்குழு நடக்கும் அரங்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும் இருக்கைகள் நிரம்பியதால் தொண்டர்கள் தரையில் அமர தொடங்கினர்.

23.06.2022 காலை 8.50 மணி

“ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” ஜெயக்குமார் தகவல்

23.06.2022 காலை 8.40 மணி

அப்பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளதாலும் வருகை தருவதாலும் வானகரம், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

23.06.2022 காலை 8.30 மணி

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் தனியார் திருமண மண்டபத்தை சுற்றி 2500 காவலர்களுக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்குப் பின்னர் மட்டுமே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...