No menu items!

World cup dairy: மெஸ்ஸி எழுதிய கடிதம்

World cup dairy: மெஸ்ஸி எழுதிய கடிதம்

அர்ஜெnடினா அணி உலகக் கோப்பையை வென்றதால் உற்சாகமாக இருக்கிறார் மெஸ்ஸி. மைதானத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்த மெஸ்ஸி, டிரெஸ்ஸிங் ரூமில் கையில் உலகக் கோப்பையோடு டேபிள் மீது ஏறி நடனமாடி இருக்கிறார். அத்துடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவையும் வாபஸ் பெற்றுள்ளார். உலக சாம்பியன் என்ற அடையாளத்துடன் உள்ள அர்ஜென்டினா அணிக்காக ஆட விரும்புவதாக கூறியுள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜென்டினா நாட்டு ரசிகர்களுக்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் மெஸ்ஸி. ”உலகின் சாம்பியனாகிவிட்டோம். பலமுறை இதைப்பற்றி நான் கனவு கண்டுள்ளேன். இந்த கோப்பையை வென்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு எனக்கு உறுதுணையாய் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி. அர்ஜென்டினா மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த வெற்றியின் மூலம் நிரூபித்துவிட்டோம். தனிப்பட்ட மனிதர்களின் ஆற்றலைவிட, அனைவரும் ஒன்றுபட்டு அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த கனவை நனவாக்க உழைத்ததே இந்த அணியின் வெற்றிக்கு காரணம். நாம் விரும்பியதை செய்து முடித்துவுட்டோம். விரைவில் நாம் நேரில் சந்திப்போம்” என்று அந்த கடிதத்தில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

எம்பாப்வேவுக்கு ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்

உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வெல்லும் என்ற நம்பிக்கையில், போட்டியை நேரில் காண வந்திருந்தார் அந்நாட்டு அதிபர் மெக்ரான். எம்பாபே கோல் அடித்தபோதெல்லாம் அவர் துள்ளிக் குதித்ததை கேமராக்கள் காட்டின. பெனாலிடி ஷாட்டை நோக்கி போட்டி சென்றதும் டென்ஷனாக இருந்த அவர், அதில் பிரான்ஸ் தோற்றதும் சிறிது நேரம் கவலையில் ஆழ்ந்தார்.

ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த கவலையை மறந்து மைதானத்துக்குள் நுழைந்த மெக்ரான், வருத்தத்தில் வாடிப் போயிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். குறிப்பாக தான் ஹாட்ரிக் அடித்தும் அணி தோல்வியடைந்ததால் வருத்தத்தில் இருந்த கிலியன் எம்பாபேவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். டிரெஸ்ஸிங் ரூமில் ப்ரான்ஸ் வீரர்கள் மத்தியில் பேசிய மெக்ரான், கடைசிவரை போராடியதற்காக அவர்களைப் பாராட்டினார். அப்படியே அர்ஜென்டினா வீரர்களுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

கூகுளின் புதிய சாதனை

அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையே நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது கோடிக்கணக்கான பேர் இப்போட்டியைப் பற்றி கூகுளில் தேஎடி இருக்கிறார்கள். கூகுளின் 25 ஆண்டு காலத்தில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் தேடிய விஷயமாக இப்போட்டி இருந்தது. கூகுளில் அதிக டிராபிக் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இந்த உலகமே இந்த போட்டியைத் தேடுகிறதோ என்ற எண்ணும் அளவுக்கு ஏராளமானோர் இதைத் தேடினார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கூகுள் பக்கத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை.

அர்ஜென்டினாவுக்கு கிடைத்த பரிசுப் பணம்

பிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு 347 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் தோற்ற பிரான்ஸ் அணிக்கு 248 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. இதேபோல் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 223 கோடி ரூபாயும், 4-வது இடம் பிடித்த மொராக்கோவுக்கு 206 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...