No menu items!

விஜயின் பர்சனல் 10! – தெரியாத 10 விஷயங்கள்

விஜயின் பர்சனல் 10! – தெரியாத 10 விஷயங்கள்

’’விஜய் சார் சொல்லிதான் ரஜினி சாருக்கு கதை சொன்னேன். ‘ஜெயிலர்’ ஷூட்டிங்க்கு போயாச்சா என்று விஜய் சார் போன் பண்ணினார்.’’ – நெல்சன்

‘’விஜய்ணா இல்லைன்னா ’ஜவான்’ பண்ணியிருக்க மாட்டேன்’’ – அட்லீ.

இப்படி விஜயை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அல்லது படமெடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விஜயுடன் நடித்தால் மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என நினைக்கும் நடிகைகள் என ஆளாளுக்கு விஜயைப் பற்றி சொன்னவைதான் இப்பொழுது இணையத்தில் வைரலாக இருக்கின்றன. அல்லது மூத்த பத்திரிகையாளர்கள் யூட்யூப், இன்ஸ்டாக்ராமில் சொல்லும் சில சம்பவங்கள்தான் தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் விஜய், தனிப்பட்ட வாழ்க்கையில் வேற மாதிரி. திரையில் நாம் பார்க்கும் விஜய்க்கும், அவரது உண்மையான கேரக்டருக்கும் இடையே அவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் விஜய் பர்சனல் தொடர்பான சில அருமையான குணங்களை இங்கே சொல்கிறோம்.

ஷுட்டிங் எத்தனை மணிக்கு ஆரம்பித்தாலும், முன் கூட்டியே சொல்லிவிட்டால் சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாகவே வந்து, மேக்கப் போட்டுக்கொண்டு தயாராகிவிடுவார் விஜய். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் வைப்பதை பெரும்பாலும் விஜய் விரும்புவது இல்லை. காட்சிக்கு தேவைப்பட்டால், முக்கியமான காட்சிகள் என்றால் மட்டுமே 6 மணிக்கு மேல் நடிப்பார். இரவு 2 மணி என்றாலும் நடித்துவிட்டு செல்வது இன்றும் தொடர்கிறார் விஜய்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போய் டைனிங் டேபிளில் உட்கார்ந்தால் செல்ஃப் சர்வீஸ்தான். பதினைந்து வயதிலிருந்தே இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. சாப்பாட்டு தட்டில் முதல் முறை வைக்கும் அளவு மட்டும்தான். அதற்கு பிறகு கூடுதலாக உணவு எடுத்து வைத்து சாப்பிடும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் அரை வயிறு சாப்பாடுதான். இதுதான் அவரது ஸ்லிம்மான உடல் வாக்குக்கு காரணம்.

விஜயின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று ஒவ்வொரு பாடலிலும் டான்ஸ் மாஸ்டர் வைத்திருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்களை ரசித்தபடியே, ரசிகர்களும் ரசிக்கும்படி ஆடுவது. சில பாடல் வரிகளுக்கு கடினமான டான்ஸ் மூவ்மெண்ட்கள் இருந்தாலோ அல்லது, ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்தாலோ ஷூட்டிங் முடிந்ததும் நேராக வீட்டிற்கு போய் வெறும் தரையில் தலையணை கூட இல்லாமல் படுத்து கொள்வார் விஜய். . இப்படிதான் உடல் வலிகளிலிருந்து ரிலாக்ஸ் செய்துக் கொள்ளவது வழக்கம்.

சாப்பாட்டைப் பொறுத்தவரை விஜய்க்கு விதவிதமான உணவு வகைகள் வேண்டுமென்ற கட்டாயமில்லை. சிம்பிளான ஏதாவது ஒரு மெனு இருந்தால் போதுமானது. இருப்பதை வைத்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுவார். சாப்பாட்டு விஷயத்தில் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. முன்பெல்லாம் விஜய் ரிலாக்ஸ் ஆக இருந்தால், நேராக சமையலறைக்குச் சென்று மொறு மொறு தோசை சுடுவது வழக்கம்.

விஜய் யாரையும் கோபத்தில் கடிந்து பேசுவது இல்லை. தன்னுடைய வீட்டில் வேலைச் செய்பவர்களை திட்டினாலும் விஜய்க்குப் பிடிக்காது. எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும், யாராவது தப்பு பண்ணினாலும் கூட அவர்களை நாலு பேர் முன்னிலையில் அவர்கள் செய்த தப்பைச் சொல்லி அவர்களை காயப்படுத்தக் கூடாது என்பார். எந்த பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை தனியாக அழைத்து மெதுவாக சொல்லவேண்டும் என்பது விஜயின் பாலிஸி.

மிஸ்டர். கூல் ஆக விஜய் இருந்தாலும், எப்பொழுதாவது டென்ஷன் ஆனாலோ, மூட் அவுட்டானாலோ விஜய் செய்யும் முதல் காரியம் டிவியில் காமெடி காட்சிகளை பார்க்க ஆரம்பித்துவிடுவார். இந்த காமெடி கலாட்டாக்கள்தான் விஜய்க்கு ரிலாக்ஸ் அளிப்பவை. வீட்டிலும் சரி, தனது காரிலும் சரி காமெடி காட்சிகளின் கலெக்‌ஷன் கட்டாயம் இருக்கும். குறிப்பாக கவுண்டமணி- செந்தில் காமெடி கலாட்டாக்களை ரசிப்பது விஜய்க்குப் பிடித்த விஷயம்.

விஜய்க்கு பொசுக்கென்று கோபம் வருவது இல்லை. ஆனால் கோபம் வந்தால் மிஸ்டர். கூல் செம ஹாட்டாகி விடுவார். மனதில் இருப்பதை எல்லாம் மளமளவென கொட்டிவிடுவார். இந்த கோபம் எல்லாம் கொஞ்சம் நேரம்தான். நெருக்கமான நண்பர்கள் என்றால், கோபம் தணிந்ததும், எந்த தயக்கமும் இல்லாமல் ஸாரி கேட்டுவிடுவார்.

விஜய்க்கு லேட்டஸ்ட் கார்கள் மீது செம லவ். மார்க்கெட்டில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் கார்களை ஆர்வத்துடன் ரசிப்பது விஜயின் பழக்கம். மார்கெட்டிற்கு வரும் லேட்டஸ்ட் கார்களை விரும்பி வாங்கினாலும் அவருடைய ஃபேவரிட் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள்தான். ஷூட்டிங் செல்லும் போது, ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்டால், மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாறியபின் அவரே காரை ஓட்டுவது வழக்கம், விஜய் பக்காவான கண்ட்ரோலுடன் கார் ஓட்டுவார். விஜய்க்கு கருப்பு நிற கார்கள்தான் ஆல் டைம் ஃபேவரிட்ஸ். தன்னுடைய எல்லா கார்களுக்கும் நினைவில் இருப்பது மாதிரியான ஃபேன்ஸி நம்பர்களைதான் விரும்பி வாங்குவார்.

இப்போது விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தினால், அவர் அதிகம் வெளியே செல்ல விரும்புவதும் இல்லை. முடிந்தவரை அவர் படங்கள் பார்க்க திரையரங்குகளுக்கு செல்வதும் இல்லை. ஆனால் ஆரம்பத்தில் அதாவது கில்லி படத்திற்கு முன்பு வரை புதுமுகங்கள் நடித்தப் படங்களின் ப்ரிவியூ காட்சிகளுக்கு அழைப்பு வந்தால் மறுக்காமல் ப்ரிவியூ தியேட்டகளுக்கு சென்று பார்ப்பார். படம் சுமாராக இருந்தாலும் கூட குறைகளைச் சொல்லாமல் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பாஸிட்டிவான விஷயங்களை மட்டும் சொல்விட்டு கிளம்புவார்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விஜய்க்கு படிப்பு விஷயத்தில் பெரும் ஆர்வம் இருந்தது இல்லை. சுமாரான மாணவர்தான். இதனால் அவருக்கு படிப்பு, கல்வி என்றால் மரியாதை உண்டு. இதன் வெளிப்பாடே சமீபத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மாணவிகளை சென்னைக்கு வரவழைத்து உற்சாகப்படுத்தினார். நன்றாகப் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி தேவை என செய்தித் தாள்களில் செய்திகள் வந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவது விஜயின் நல்ல பழக்கங்களில் முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...