No menu items!

விஜய்க்கே இது தெரியாது! – குடும்பத்தில் இப்படியொரு பிரச்சினையா?

விஜய்க்கே இது தெரியாது! – குடும்பத்தில் இப்படியொரு பிரச்சினையா?

விஜய்யின் ‘லியோ’ படம் பற்றிய பரபரப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே வருகின்றன.

இது அவரது சினிமா பயணத்தில் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் நடக்கும் வழக்கமான சம்பவங்களாகி விட்டன.

ஆனால் அவரது வாழ்க்கை பயணத்தில், மகன் ஜேசன் இயக்குநரானது கூட விஜய்க்கு தெரியாது என்று ஒரு தகவல் இப்போது கோலிவுட்டில் அடிப்படுகிறது.

பொதுவாக ஒரு படத்தில் இயக்குநர் ஒப்பந்தமானால், அதுபற்றிய தகவல் மட்டும்தான் வெளிவருவது வழக்கம். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநருக்கும் இடையில் கையொப்பமிடப்படும் அந்த ஒப்பந்தம் பற்றிய தகவல் எதுவும் வெளிவந்தது இல்லை. ஒப்பந்தம் பற்றிய புகைப்படங்களும் வெளிவருவதும் இல்லை.

ஆனால் முதல் முறையாக விஜயின் மகன் ஜேசன், லைகா ப்ரொடக்‌ஷனுக்காக இயக்கவிருக்கும் பட ஒப்பந்தம் குறித்த தகவலோடு, ஒப்பந்தம் பற்றிய புகைப்படமும் வெளியானது.

’என்ன புது பழக்கம்’ என்று தமிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் காதைக்கடித்து கொண்டார்கள்.

விஷயம் என்னவென்றால், ஜேசன் இயக்குநராகிறார். அது முடிவான ஒன்று. அதை சிலருக்கு தெரிவிப்பதற்காகவே இந்த மாதிரியான புகைப்படம் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள்.

அந்த சிலரில் ஒருவர், ஜேசனின் தந்தை விஜய்தான் என்று கிசுகிசுக்கிறார்கள். விஜய் குடும்பத்தில் நடப்பது விஜய்க்கே தெரியாதா என்று அதிர்ச்சியாகதான் இருக்கிறது.


என் பர்ஸனலை சொல்ல முடியாது – சுவாதி

சுவாதி ரெட்டி. இவருடைய தைரியமான பதில்தான் இப்போது வைரலாகி வருகிறது.

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் தெத்துப் பல் தெரிய சிரிப்பாரே. அதே சுவாதிதான். இவரை ‘கலர்ஸ்’ சுவாதி என்றால்தான் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.

சுப்ரமணியபுரம் படம் கொடுத்த மவுசினால், அடுத்தடுத்து நாலைந்து படங்கள் நடித்தார். ஆனால் சுவாதியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய சொந்த மொழியான தெலுங்கின் டோலிவுட் பக்கம் போய்விட்டார்.

தெலுங்கு சினிமாவிலும் சுவாதிக்கு இருக்கும் திறமைக்கேற்ற, படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் 2018-ல் விகாஷ் என்ற உதவி இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக போன திருமண வாழ்க்கையில், நட்சத்திரங்களுக்கு உண்டாகும் அதே விவாகரத்து பிரச்சினை சுவாதிக்கும் வந்துவிட்டது என கிசுகிசு கிளம்பியது.

காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களுக்கு இடையே மன முறிவு. இதனால் திருமண முறிவை சுவாதி கையிலெடுக்க இருக்கிறார் என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

இப்படியொரு சூழலில்தான் சுவாதி நடித்திருக்கும் ‘மன்த் ஆஃப் மது’ தெலுங்குப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அந்த சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் சுவாதியிடம், ‘உங்களுக்கு விவாகரத்து ஆகப் போகுதாமே’ என்று கேள்வி கேட்டார்.

இந்த மாதிரி ஒரு சூழலில், அந்த கேள்வியை எதிர்கொள்ளும் நட்சத்திரம் ‘நோ கமெண்ட்ஸ்’ என்றோ, சிரித்தபடியே நழுவுவதோ அல்லது அடுத்த கேள்விக்கு தாவுவதோதான் நடக்கும். ஆனால் சுவாதி, ‘இந்த கேள்விக்கும் இந்த ப்ரஸ்மீட்டுக்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய பர்சனல் லைஃப்பை பத்தி இங்கே நான் பேச விரும்பவில்லை’ என்று மிக தைரியமாக பதிலளிக்க தெலுங்கு பத்திரிகையாளர்கள் ஒரு விநாடி அரண்டுப் போனார்கள்.

இதுபோல் யாரும் இப்படியொரு பதில் சொன்னது இல்லை என்பதால்தான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இப்படியொரு அதிர்ச்சி.

சுவாதி சொன்ன பதிலுக்கு இப்போது தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...