No menu items!

லியோவில் விஜய் அப்பா

லியோவில் விஜய் அப்பா

விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் ‘லியோ’ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற டிஜிட்டல் போஸ்டர்கள் வெளியான போதே, விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

த்ரிஷா, மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், மன்சூரலிகான் என நட்சத்திரப் பட்டாளங்கள் லியோவில் இணைந்த போதே யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்ற கருத்து பரிமாற்றம் இணையத்தில் சூடுப்பிடித்தது.

மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் கொடைக்கானலில் எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஒட்டுமொத்த லியோ படக்குழுவும் கொடைக்கானலுக்கு சென்ற பிறகுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்குள்ள வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் ஷூட் செய்ய அனுமதி மறுத்தி விட்டனர். இதனால் மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீரில் ஷூட் செய்தனர். இதில் மிஷ்கின் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார் என்ற செய்தி பரவியது.

இப்படம் பான் – இந்தியா படமாக வியாபாரம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் பாலிவுட்டின் முன்னா பாய் சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்தது லியோ படக்குழு.

சஞ்சய் தத்தை லியோவில் நடிக்க ஒப்பந்தம் செய்ய காரணம் இருந்தது. சஞ்சய் தத் வில்லனாக நடித்த கே.ஜி.எஃப் -2 பான் – இந்தியா படமாக வசூலை அள்ளிக்குவித்தது. இதை கூட்டிக்கழித்துப் பார்த்தே மீண்டும் சஞ்சய் தத்தை லியோவில் கமிட் செய்திருந்தனர்.

சஞ்சய் தத் இதிலும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் இப்போது கசிந்திருக்கிறது.

லியோவில் சஞ்சய் தத், விஜயின் அப்பாவாக நடிக்கிறாராம். அதிலும் அசுரத்தனமான ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரமாம். அப்பாவைப் போலவே மகன் விஜயும் இதில் ஒரு கேங்ஸ்டராக அதிரடி காட்ட இருக்கிறாராம்.

விஜய்க்கு நாற்பதுகளில் இருக்கும் வயது. தனது அப்பாவின் அடிதடி கும்பலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார். இதனால் காஷ்மீரில் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி, அங்கே குடிபெயருகிறார். அங்கே ஒரு சாக்லேட் ஃபேக்டரியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய்க்கு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்களாம். சாக்லேட் ஃபேக்டரியில் அமைதியாக இருக்கும் ஸ்வீட் விஜய் ஒரு கேரக்டர். கொஞ்சம் உரசினால் பட்டென பத்திக்கும் ப்ளடி டேஞ்சர் விஜய் இன்னொரு கேரக்டர். இதைதான் ’ப்ளடி ஸ்வீட்’ என்று டீசரில் காட்டியிருக்கிறார்கள். விஜயின் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் அதிரடி படத்தில் சரவெடி ஆக்‌ஷனாக இருக்கும் என்கிறார்கள்.

மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் என லியோவில் ஒரு பெரிய வில்லன்கள் டீமே இருந்தாலும் விஜய்க்கு வில்லன் யார் என்பதுதான் ஹைலைட். கதையில் விஜய்க்கு வில்லன் விஜய்தானாம். இதில் வில்லன் விஜய் கேரக்டர் மாஸ் கேரக்டராக இருக்கும் என்கிறார்கள். ஆக ப்ளட்டிக்கும் ஸ்வீட்டுக்கும் இடையே நடக்கும் ஆட்டம்தான் இந்த ’லியோ’

ஜூலை மாதம் ஷூட்டிங்கை முடிக்கும் வகையில் லியோ குழுவினர் ஷூட்டிங்கை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...