வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், கூடவே விஜய் சேதுபதியும் நடிக்கும் ‘விடுதலை’, அடுத்து சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’, இந்த இரண்டு படங்களும் வெளீயாக இருக்கின்றன.
படவெளியீட்டுக்கு முன்பாக சென்சார் செய்ய வேண்டியது கட்டாயம். அதனால் இந்த இரண்டுப் படங்களையும் சென்சார் போர்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த இரண்டுப் படங்களையும் பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகளுக்கு வெடுக்கென அதிர்ச்சி.
காரணம், இந்தப் படங்களில் இடம்பெற்ற சில காட்சிகளும், வசனங்களூம்தான்.
சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இப்படம் ஒரு மணிநேரம் 52 நிமிஷம் 21 ஓடுகிறது. படம் பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகள் ஒன்பது இடங்களில் கத்திரியைப் போட்டிருக்கிறார்கள்.
’*த்தா’, ’புத்தி’.
‘பூ..’, ’வக்ளி’
‘Fck’ ‘Sucup’
இப்படி தமிழ், ஆங்கில கெட்டவார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளை சில இடங்களிலும், சில இடங்களில் மியூட்டும் செய்திருக்கிறார்கள். மேலும் 3 நிமிட காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார்கள்.
’பத்து தல’ படத்தின் நிலை இதுவென்றால் ‘விடுதலை’ கதை இதைவிட கலவரமாக இருக்கிறது.
இந்தப்படம் ஒரு மணி நேரம் 45 நிமிஷம் 37 விநாடிகள் ஓடுகிறது.
‘புட’ ‘பூ” ’சப்பி” ‘ங்கொ’
‘சு**”’
இப்படியாக தமிழில் இருக்கும் உச்ச கெட்டவார்த்தைகள்தான் அதிக இடம்பெற்று இருக்கின்றன.
அந்த இடங்களில் மியூட் செய்தே ஆகவேண்டுமென சென்சார் கெடுபிடி செய்திருக்கிறது.
இப்படத்தின் கதையில் காவல் துறைக்கும் நக்ஸ்லைட்களை போன்ற போராளிகளுக்கும் இடையே நடக்கும் கடும் சண்டையும் போராட்டமும் இடம்பெற்று இருப்பதாக சொல்கிறார்கள். இந்த காட்சிகளில் காவல்துறை பிடிக்கும் மக்களை விசாரிக்கும் இரண்டு இடங்களில் அவர்களின் அந்தரங்க உறுப்பைக் காட்டும் காட்சியும் இருக்கின்றன. இதை மறைக்கும் வகையில் மொசைக் செய்ய சொல்லி இருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்.