No menu items!

’வாரிசு’ – துபாயில் விஜய்!

’வாரிசு’ – துபாயில் விஜய்!

விஜய் முதல் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது.

இந்தப் படத்தை மிகப்பிரம்மாண்டமான அளவில் ப்ரமோஷன் செய்ய அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டு இருக்கிறாராம்.

சமீபத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தின் ப்ரமோஷனை துபாயில் ஒரு கொண்டாட்டமாக நிகழ்த்தியிருந்தார் கமல்.

அதை விட மிகப் பிரம்மாண்டமாக ‘வாரிசு’ பட ப்ரமோஷனை அதே துபாயில் நடத்தும் பணிகளை அப்பட யூனிட் செய்து வருகிறது.

விஜய், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு, ஸ்ரீகாந்த் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியை டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில், கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களுக்கு முன்பாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

2023 பொங்கலை குறித்து வைத்து ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிட்டு ட்ரெண்ட்டிங் ஆக்கும் திட்டமும் இருக்கிறதாம்.


விக்ரம் படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ப்ரீயட் படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது.

ப்ரிட்டிஷ் காலத்தில் விடுதலைக்கு முன்பாக நடக்கும் கதைக்களம் என்கிறது அப்பட யூனிட்.

மிகப்பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்டில் விக்ரம் சம்பந்தபட்ட காட்சிகளை ஷூட் செய்து வருகிறார் பா. ரஞ்சித்.

’பொன்னியின் செல்வன்’ ப்ரமோஷனுக்காக விக்ரம் இரண்டு வாரம் ப்ரேக் எடுக்க, இப்பொழுது ‘சீயான் – 61’ ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது.

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக முதலில் கமிட்டானவர் ராஷ்மிகா மந்தானா.

ஆனால் இப்போது இப்படத்திலிருந்து ராஷ்மிகா வெளியேறியிருப்பதாக ஒரு கிசுகிசு அடிப்படுகிறது. காரணம் ‘புஷ்பா -2’.

’புஷ்பா – 2’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்ட தேதிகளில் ஆரம்பம் ஆகாமல் இரண்டு முறை மாறியதால் ராஷ்மிகாவின் கால்ஷூட்டில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் பேச்சு அடிப்படிகிறது.

மேலும் சமீப காலமாக விக்ரம் நடித்த ‘மகான்’, ‘கோப்ரா’ படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதாலும், பா.ரஞ்சித் படமெடுக்கும் பாணி கமர்ஷியலாக இருப்பதில்லை என்பதாலும், புஷ்பா-2 வை காரணம் காட்டி ராஷ்மிகா சீயான் – 61 படத்திலிருந்து விலகியதாகவும் ஒரு கிசுகிசு உலா வருகிறது.

இதனால் ராஷ்மிகாவுக்குப் பதிலாக ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.

தீபாவளிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் பா.ரஞ்சித் தயாராகி வருகிறார்.


ஹன்சிகா சினிமாவுக்கு குட்பை?

இன்னும் இரண்டு மாதங்களில் சினிமாவுக்கு குட்பை சொல்ல போகிறார் ஹன்சிகா மோத்வானி என பாலிவுட்டில் பரபர செய்திகள் கிளம்பியிருக்கின்றன.

காரணம் கல்யாணம்.

ஹன்சிகா மோத்வானி ஒரு மும்பை பிஸினெஸ் மேனுடன் சில மாதங்களாக டேட்டிங்கில் இருப்பதாகவும், இவர்கள் இப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் செட்டிலாகி இருக்கும் ஹன்சிகா 15 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

இதுவரை நடித்தது போதும். வாழ்க்கையில் செட்டிலாகும் எண்ணம் வந்துவிட்டதால் ஹன்சிகா திருமண முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

ஜெய்ப்பூரில் இருக்கும் 450 ஆண்டுகள் பழைமையான முந்தோடா கோட்டையில் டிசம்பர் மாதம் திருமணத்தை வைத்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெறுவது குறித்து இப்போது செய்திகள் கசிந்திருக்கின்றன.

திருமணம் கொண்டாட்டங்கள் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நட்சத்திர ஹோட்டலாக மாறியிருக்கும் முந்தோடா கோட்டையில் இருக்கும் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மும்பை மீடியாவில் செய்திகள் அடிப்படுகின்றன.

சமீபத்தில் தனது 30-வது பிறந்த நாளை மாலத்தீவில் ஒரு ப்ரைவேட் யாட்டில் தனது காதலருடன் ஹன்சிகா கொண்டாடினார். அந்த காதலர்தான் இப்போது ஹன்சிகாவின் கரம் பிடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...