No menu items!

’வாரிசு’ அப்டேட்

’வாரிசு’ அப்டேட்

விஜய் முதன்முதலாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங்குக்கு இப்போது ப்ரேக் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் – ராஷ்மிகா சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

ஆனால் ராஷ்மிகாவுடன் விஜய் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும் இரண்டு பாடல்கள் இன்னும் ஷூட் செய்யப்படாமல் இருக்கிறது.

அதேபோல் தெலுங்கு ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக இருக்கும் வகையில் சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு சண்டைக்காட்சிகள் இன்னும் ஷூட் செய்யப்படாமல் இருக்கிறது.

ஆனால் திட்டமிட்டப்படி படத்தை வெளியிட வேண்டுமென்பதில் விஜய் தீர்மானமாக இருப்பதால். ஷூட்டிங்கை உடனடியாக தொடங்க தயாராகி விட்டது ‘வாரிசு யூனிட்
‘வாரிசு’ ஃபேமிலி சென்டிமெண்ட் உடன் கூடிய ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறது விஜய் வட்டாரம்.


களரியில் கலக்கும் காஜல் அகர்வால்

பரபரப்பாக போய் கொண்டிருந்த ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங்குக்கு தற்போது வெளியே தெரியாத காரணத்தால் ஒரு சின்ன ப்ரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷூட்டிங் இல்லாவிட்டாலும், காஜல் அகர்வால் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

தினமும் யோகா, உடற்பயிற்சி என உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க காஜல் ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் என்கிறது பட யூனிட். இதற்கு காரணம் இந்தியன் – 2 படத்தில் காஜலுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

மற்றுமொரு விஷயம் என்னவென்றால், பண்டைய தற்காப்புக் கலையான களரியிலும் களமிறங்கி இருக்கிறார் காஜல் அகர்வால். தினமும் அரைமணி நேராமாவது களரி பயிற்சி செய்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளாக களரியில் பயிற்சி எடுத்துவரும் காஜல், ஒரு தேர்ந்த களரி வீராங்கனையாகவே மாறியிருக்கிறார்.

களரி ஒரு தற்காப்புக் கலையாக இருந்தாலும், உடலை அழகாக, எடுப்பாக வைத்திருக்க மிகச் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது என்று குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கும் களரியை பரிந்துரை செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.


கோவாவில் சூர்யாவுடன் திஷா பதானி

நிமிர்ந்த நன்னடை, நேர்க்கொண்ட பார்வை, மெல்லிய இடை, கொஞ்சமாக உடை என பார்ப்பவர்களை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க வைக்கும் பாலிவுட் அழகி திஷா பதானி

இப்போது நம்மூர் பக்கம் ரவுண்ட் அடித்தபடி இருக்கிறார்.

காரணம் இயக்குநர் சிவா.

சூர்யாவை வைத்து படம் இயக்கிவரும் சிவா, சூர்யாவுக்கு யாரை ஜோடியாக திஷா பதானியை நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் விறுவிறுவென போய்கொண்டிருக்கிறது.

சூர்யா – திஷா இருவருக்குமான காதல் காட்சிகளை கோவா அழகுடன் சேர்ந்து ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சூர்யாவுடன் ரொம்பவே நெருக்கம் காட்டி நடித்து வருகிறார் திஷா என்கிறது அப்பட யூனிட்.

திஷாவுக்கு காஸ்ட்யூமாக துண்டைக் கொடுத்தால், துண்டு எதற்கு கர்சீஃப் போதுமே என்று சிவாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம். இதனால் கிளாமரை கொஞ்சம் தூக்கலாக வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் சூர்யா பாடல்களில் மட்டும் கவர்ச்சி இருக்கட்டும் என்று சொன்னதாகவும், ஆனால் திஷா கவர்ச்சியில் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...