No menu items!

40 நொடிகளில் பெரு நாசம் – துருக்கி பூகம்பம்

40 நொடிகளில் பெரு நாசம் – துருக்கி பூகம்பம்

துருக்கி பூகம்ப பூமியிலிருந்து வரும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

4,500 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டார்கள்.

பல குழந்தைகள் அனாதைகளாகியிருக்கிறார்கள்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

சிகிச்சை கொடுக்க போதிய மருத்துவர்கள் இல்லை.

மிகப் பெரிய அழிவை துருக்கியும் சிரியாவும் சந்தித்திருக்கின்றன.

அத்தனைக்கும் காரணம் நாற்பதே விநாடிகள் நீடித்த பூகம்பம்.

பிப்ரவரி 6 ஆம் தேதி விடியற்காலை நான்கு மணியளவில் சிரியா, துருக்கி எல்லையில் 7.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் நீடித்தது 40 நொடிகள்தாம். ஆனால் இத்தனை பெரிய அழிவு.

நான்கு மணிக்கு வந்ததுடன் பூகம்பம் நின்றுவிடவில்லை. மீண்டும் மதியம் ஒன்றரை மணிக்கு. இந்த முறை 7.5 ரிக்டர் அளவில்.

அதற்கடுத்து மூன்று மணிக்கு. கொஞ்சம் கருணையுடன் 6.0 ரிக்டர் அளவில்.

12 மணி நேரத்தில் மூன்று பூகம்பங்கள். ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டு சென்றுவிட்டது.

தாங்கி நிற்கும் நிலமே தாக்கும் நிலமாக மாறிவிட்டது.

7.8 ரிக்டர் அளவு என்பது மிகப் பெரிய பூகம்பத்தின் அளவு. துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தின் அதிர்வுகளை 4,374 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இங்கிலாந்தில் உணர முடிந்திருக்கிறது. அத்தனை பெரிய பூகம்பம். துருக்கி, சிரியா பகுதிகளில் எப்போதுமே பூகம்ப அபாயம் உண்டு. அப்படித்தான் அந்தப் பகுதி பூகோளம் அமைந்திருக்கிறது.

துருக்கி, சிரியா பகுதியில் பூமியின் மூன்றடுக்குகள் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்றன. இது போன்று அடுக்குகள் சந்திக்கும் நிலப் பரப்புகளில் பூகம்ப அபாயம் எப்போதும் உண்டு.

இந்தப் பகுதியில் அண்டோலியன் (Anatolian), அரேபியன் (Arabian), ஆஃப்ரிகன் (African) ஆகிய மூன்றடுக்குகள் அங்கு இருக்கின்றன. இவற்றில் அரேபியன் அடுக்கு வடக்கு நோக்கி – அதாவது ஐரோப்பாவை நோக்கி நகர்கிறது. இதனால் துருக்கி இருக்கும் அண்டோலியன் அடக்கு மேற்கு நோக்கி தள்ளப்படுகிறது. இந்த நகர்வினால் ஏற்படும் தீவிரமான அழுத்தங்கள் நிலப்பரப்பை அசைக்கின்றன. பூகம்பம் உருவாகிறது. அதிக அழுத்தங்கள் இல்லாதபோது அதற்கு தீவிரத் தன்மை இருக்காது. ஆனால் மிகக் கடுமையான அழுத்தங்கள் ஏற்படும்போது ரிக்டர் அளவில் உயர்ந்து பூகம்பம் பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படும்போது பின்விளைவுகளாக தொடர்ச்சியாக சிறு பூகம்பங்கள் உண்டாவது உண்டு. அப்படிதான் துருக்கியிலும் தொடர்ந்து பூமி அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

40 நொடிகளில் இத்தனை பெரிய சீரழிவு.

மனிதனால் இயற்கையை வெல்ல முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...