No menu items!

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்

சினிமாவில் அறிமுகமாகி இருபது ஆண்டுகள் ஆனாலும் தாக்குப்பிடித்திருப்பதில் தனக்கென்று இடத்தை தக்க வைத்தவர்களில் த்ரிஷா அடக்கம்.

படங்களே இல்லாத சூழலில், திருமணம் கூட செய்து கொள்ளாமல் ஒரு ஹிட்டுக்காக காத்திருந்தவர் த்ரிஷா.

அதற்கேற்ற மாதிரி அமைந்தது ‘பொன்னியின் செல்வன்’.

பிஎஸ்1 படம் கொடுத்த மவுசு இப்பொழுது விஜயுடன் த்ரிஷாவை நடிக்க வைத்திருக்கிறது.

’தளபதி 67’- ல் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிப்பட்டது. ஆனால் சமீபத்தில் கிளம்பியிருக்கும் கிசுகிசுக்களுக்கு தீனிப் போட்டது போல் ஆகிவிடுமென்பதால், கீர்த்திக்கு கல்தா கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

த்ரிஷா நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் மெச்சூர்டான ஒன்று. அதனால்தான் இப்போது த்ரிஷாவை கமிட் செய்திருக்கிறார்கள். மேலும் ’கில்லி’ சென்டிமெண்ட் இப்படத்திலும் வொர்க் அவுட் ஆனால் நல்லதுதான் என்று விஜயும் ஓகே சொன்னதாக தளபதி 67 படக்குழுவுக்குள் ஒரு பேச்சு.


கமலின் மகனாக நடிக்கும் விக்ரம்!

‘விக்ரம்’ படம் கமலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

மீண்டும் பரபரப்பாக திரைப்படங்களில் நடிக்க முழுவீச்சில் கமல் தயாராகிவிட்டார். அதேபோல் அவரது ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் படத்தயாரிப்புகளில் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

அந்தவகையில் ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க இருக்கும் படமான ’விக்ரம் 3’-ல் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

ஆனால் இப்போது கோலிவுட்டின் புது கிசுகிசு என்னவென்றால், கமல் முன்பே அறிவித்த ‘தலைவன் இருக்கின்றான்’ படம் மீண்டும் உயிர்ப்பெற இருக்கிறது என்பதுதான்.

’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருக்குமாம்.

’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வயதான கமலின் மகனாக விக்ரம் நடிக்க இருப்பதாகவும், நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

விஜய் சேதுபதி ‘விக்ரம்’’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பே இப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டாராம்.

’தலைவன் இருக்கின்றான்’ படத்தை அநேகமாக லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

இதெல்லாம் தமிழ் சினிமாவில் அடிப்படும் கிசுகிசுதானே தவிர ‘தலைவன் இருக்கின்றான்’ படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

லோகேஷ் கனகராஜ் இப்பொழுது விஜய் படத்தில் பிஸியாக இருப்பதால் இன்னும் கொஞ்ச நாட்களில் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் பற்றி தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கலாம்.


திரை விமர்சனத்திற்கு ஒரு லட்சமா?

’பதான்’ படம் வசூலில் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கானுக்கு ஒரு மெகா ஹிட் கிடைத்திருக்கிறது.

திரையரங்குகளில் கூட்டம் இருப்பதால், பதானை தூக்கி வைத்து கொண்டாடுகிறது பாலிவுட்.

காரணம் கோவிட்டுக்கு பின் சரியான படங்கள் இல்லாததால், வசூலும் இல்லை. ஹிட்டும் இல்லை என பாலிவுட் பாதாளத்திற்கு போயிருந்தது.

இப்படி ஒரு பின்னணி இருப்பதால் ’பதான்’ பற்றி பாஸிட்டிவான செய்திகள் ஒரு பக்கமிருக்க, இப்போது ஒரு புது சர்ச்சை வெடித்திருக்கிறது.

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை அடித்துவிடுவதில் பிரபலமானவர் கே.ஆர்.கே. என்னும் கமால் ஆர் கான். இவர்தான் இப்பொழுது பதான் படக்குழுவினர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

’’பதான்’ படத்திற்கு விமர்சகர்கள் பாஸிட்டிவான ரிவியூ கொடுக்கவேண்டுமென்று, அப்படக்குழுவினர் விமர்சகர்கள் ஒவ்வொருவருக்கும் 1 முதல் 2 லட்சம் வரை கொடுத்திருக்கிறது. #OneImpression என்ற கம்பெனியிலிருந்து என்னை தொடர்பு கொண்டார்கள், பதானுக்கு நீங்கள் ப்ரமோஷன் செய்ய வேண்டுமென்றார்கள். உங்களை மாதிரி க்ரிட்டிக் மற்றும் இன்ப்ளூயன்ஸர்களுக்கு பணம் கொடுக்க சொல்லி தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது என்றார்கள். உடனே நான் ஒரு கோடி வேண்டுமென்றேன். ஷாக்கான அவர்கள் தரப்பிலிருந்து ஒரு லட்சம் முதல் 2 லட்சம் தான் கொடுத்திருக்கிறோம் என்று பதில் வந்தது.’’ என்று சொல்ல பாலிவுட்டில் புது கலகம் உருவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...