No menu items!

த்ரிஷா Ex Boy Friend – பிந்துமாதவி Dating!

த்ரிஷா Ex Boy Friend – பிந்துமாதவி Dating!

வருண் மணியன் பிரபல தொழிலதிபர். இவரது குடும்பத்தின் ரேடியன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் ப்ரீமியம் வகை குடியிருப்புகளை கட்டுவதில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.

அடுக்கும் மாடி குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருந்த இவருக்கு சினிமா மீதும் ஆர்வம் எழுந்தது. இதனால் கோலிவுட் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார் வருண் மணியன்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் வருண் மணியனும், த்ரிஷாவும் அறிமுகமானார்கள். பிறகு சினிமாவுக்கு அப்பாற்பட்டு இவர்களுக்குள் நெருக்கமான நட்பு உருவானது.

இந்த நட்பு த்ரிஷாவும், வருண் மணியனும் டேட்டிங் போகுமளவிற்கு இன்னும் அதிகம் நெருக்கமானது. த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையே ஒரு புரிதல் வந்த பிறகே, நிச்சயத்தார்த்தம் வரை இடையேயான உறவு வளர்ந்தது.

2015-ல் த்ரிஷாவிற்கும், வருண் மணியனுக்கும் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயத்தார்த்தம் நடந்த வேகத்திலேயே கேன்சல் ஆனது.

இதற்கு பிறகு வருண் மணியன் சினிமாவை ஓரங்கட்டிவிட்டு, ரியல் எஸ்டேட் பிஸினெஸ்ஸில் மறுபடியும் பிஸியானார்.

2017-ல் வருண் மணியனும், பிந்து மாதவியும் மாலத்தீவில் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படம் வைரல் ஆனது. இதனால் வருண் மணியன் நான் பிந்து மாதவியுடன் டேட்டிங் போகவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று சிம்பிளாக முடித்து கொண்டார்.

ஆனால் இப்போது பிந்துமாதவி ஒரு புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

‘த்ரிஷாவின் எக்ஸ் பாய் ஃப்ரெட்ண்டுடன் நான் டேட்டிங் போனது நிஜம்தான். ஆனால் த்ரிஷாவும் வருண் மணியனும் டேட்டிங் போன அதே நேரத்தில், நானும் வருணுடன் டேட்டிங் பண்ணவில்லை. த்ரிஷாவுக்கும், வருணுக்கும் இடையே ப்ரேக் அப் ஆன பிறகே நான் டேட்டிங் போனேன். இரண்டும் வேற வேற காலக்கட்டம்’ என்று ஒரு திரைப்பட ப்ரமோஷனில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிந்து மாதவி.

வருண் மணியனுடனான ப்ரேக் அப்பிற்கு பிறகு இதுநாள் வரை த்ரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் அதிகம் வரவே சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா.


Two Piece Bikini – ரகுல் ப்ரீத் சிங்கின் -15 டிகிரி குளியல்

ரகுல் ப்ரீத்சிங் உறைய வைக்கும் சமாச்சாரம் ஒன்றை செய்திருக்கிறார்.

டூ பீஸ் பிகினியில், உறைய வைக்கும் மைனஸ் 15 டிகிரி குளிரில், சில்லிட வைக்கும் ஐஸ் தண்ணீரில் இறங்கி மூழ்கி எழுந்திருக்கிறார்.

கொஞ்சம் அசந்தால், அப்படியே உறைந்து போய்விடும் அபாயம். ஆனாலும் தைரியமாக இப்படியொரு குளியலைப் போட்டிருக்கும் ரகுல் ப்ரீதிசிங் இதை ‘க்ரையோதெரபி’ [Cryotherapy] என்று குறிப்பிடுகிறார்.

இப்படி மைனஸ் டிகிரியில் உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலவிதமான தசை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்குமாம். மெடிக்கல் தெரபியில், ஐஸ் பேக்குகளை வைப்பது, ஐஸ் கட்டிகளைப் போட்டுக்கொண்டு அதில் மூழ்கி எழுவது, குளிர வைக்கும் சாம்பர்களில் சிறிது நேரம் இருப்பது இப்படி பல ட்ரீட்மெண்ட்கள் இதில் அடங்கும்.

ஆனால் ரகுல் ப்ரீத்சிங், க்ரையோதெரபி என்று குளித்திருப்பது, பார்ப்பவர்களை வெடவெடக்க வைக்கிறது.


Vijay செய்த Hair Transplant

சமீபகாலமாகவே விஜயின் ஹேர் ஸ்டைல் பற்றி எக்கச்சக்க விமர்சனங்கள்.

ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் ஒரு நடிகர் இப்படியொரு ஹேர் ஸ்டைலில் பொதுவெளியில் வரலாமா.. கலைந்திருக்கும் அவரது முடி, அவரது இமேஜை பாதிக்கும் என ஆளாளுக்கு விஜயின் ஹேர்ஸ்டைலை பற்றி கமெண்ட் அடித்தப்படி இருக்கிறார்கள்.

பொதுவாகவே விஜய் தனது ஹேர் ஸ்டைலில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டார். ஹேர்ஸ்டைலில் பெரிய மாற்றமும் பண்ணவிட மாட்டார். அவரது முந்தையப் படங்களைப் பார்த்தாலே அது புரியும்.

ஆனாலும் பரம்பரை பிரச்சினையாக இருக்கும் முடி உதிர்வு பிரச்சினை விஜய்க்கும் ஏற்பட்டிருக்கிறது.

இதை சமாளிக்க ஹேர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்திருக்கிறாரம் விஜய். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதற்கான சிகிச்சை நடைமுறைகளை பக்காவாக செய்திருக்கிறார் விஜய்.

அதனால் இனி விஜயை திரையில் இதுபோன்ற ஹேர் ஸ்டைலில்தான் பார்க்கமுடியும். முன்பு இருந்தது போன்ற ஹேர் ஸ்டைலில் பார்க்க முடியாது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...