ஒரு வழியாக விஜய், தமிழக வெற்றி[க்] கழகம் கட்சியின் ஆரம்பம் மூலம் அரசியலில் அடியெடுத்து வைக்க தயாராகிவிட்டார்.
தற்போது நடிக்கும் கோட், அடுத்து ஒரு படம் அவ்வளவுதான். அதற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு, முழுக்கவனமும் அரசியலில்தான். இப்படி விஜய் தனது அறிக்கையில் கூறியதில் இருந்து, விஜயின் கடைசிப் படம் பற்றிய யூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
கோட் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவிருக்கும் பட த்தை தயாரிக்க இருப்பது, ஆஸ்கரில் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் படத்தயாரிப்பாளர்தானாம்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர் என அனைவரையும் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தயாரிப்பாளரைப் பற்றி பலருக்கு தெரியாது. காரணம் பல கோடி கொட்டி படமெடுத்தாலும், அவரை மற்றவர்கள் ஓரங்கட்டிவிட்டார்கள். அந்த தயாரிப்பாளரின் பெயர் டிவிவி தனய்யா.
இப்போது இவர்தான் விஜய் நடிக்கவிருக்கும் விஜய்69 படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரு தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.
விஜய் நடித்த வாரிசு மற்றும் வாரிசு படங்களின் மூலம் அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ பெரும் லாபம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜயை வைத்து படமெடுக்க டிவிவி தனய்யா தயாராக இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை அநேகமாக முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது.