பாலா – சூர்யா கூட்டணியில் திட்டமிடப்பட்ட ‘வணங்கான்’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட கீர்த்தி ஷெட்டி பண்ணும் அலம்பல்கள்தான் இப்போது ஊடகங்கள் மத்தியில் பரபரப்பான சமாச்சாரமாகி இருக்கிறது.
சமீபத்தில் இவர் நாகார்ஜூனாவின் வாரிசு நாக சைதன்யாவுடன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘கஸ்டடி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பேட்டி கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார்.
கீர்த்தி ஷெட்டியை பேட்டி எடுக்க உற்சாகமாக சென்ற பத்திரிகையாளர்கள், டிவி சேனல்கள், இணைய தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு எல்லாம் ஒரே அதிர்ச்சி.
காரணம் கீர்த்தி ஷெட்டியுடன் ஒரு இளம் பெண் கூடவே அமர்ந்து கொண்டு, இந்த கேள்விதான் கேட்கவேண்டும். இந்த மாதிரி எந்த கேள்விகளும் வேண்டாம். கேமரா ஆங்கிள் இப்படி இருக்கவேண்டும். ரொம்ப கேள்வி கேட்டு கீர்த்தியை டென்ஷனாக்காதீர்கள் என பேட்டி எடுக்க வந்தவர்களை எல்லாம் படுத்தி எடுத்துவிட்டார்.
விசாரித்தப்பின்புதான் தெரிந்தது அந்த இளம் பெண், விஜயின் வலதுக்கை, இடதுக்கை என சகலமுமாக இருக்கும் ஜெகதீஷ் நடத்தும் ஒரு பரமோஷன் கம்பெனியை சேர்ந்தவராம்.
கீர்த்தியின் அலட்டல்களை தாங்க முடியாமல் எப்போது வந்த வேலை முடியுமென காத்திருந்த மீடியா மக்கள் ஓட்டம்பிடித்தனர்.