No menu items!

சீறிய ஹனி ரோஸ் கோடீஸ்வரர் கைது! – என்ன நடந்தது?

சீறிய ஹனி ரோஸ் கோடீஸ்வரர் கைது! – என்ன நடந்தது?

மலையாள சினிமாவில் தற்போதுதான் அமைதியான சூழல் நிலவி வந்தது. சில மாதங்களுக்கு முன் ஹேமா கமிட்டி அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சை பரவியது. இப்போது மீண்டும் நடிகை ஹனி ரோஸ் பிரபல தொழிலபதிபர் செம்பனூர் பாபி மீது பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் காந்தர்வன், சிங்கம் புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக அம்மொழ்யில் வெளியான ராணி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் வீரசிம்கா ரெட்டி என்ற திரைப்படத்தில் பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து நடித்ததால் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார்.

62 வயது பாலகிருஷ்ணாவிற்கு 36 வயது ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்தது கூட ஆச்சரியமில்லை. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக 31 வயது உடைய நடிகை அம்மாவாக இருப்பது தான் ஆச்சரியம்.

தெலுங்கு நடிகர் பாலைய்யாவுக்கு ஜோடியாக அம்மணி நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எனவே, அவர் தொடர்ந்து தெலுங்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் இதுதான் மார்க்கெட்டை பிடிக்க சரியான நேரம் என நினைத்த ஹனி ரோஸ் வாளிப்பான உடம்பை விதவிதமா காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனக்கு தெலுங்கு சினிமாவில் கிடைத்த மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள இந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டாலும், படத்தில் தெரிந்த அதிகபட்சமான கவர்ச்சிய ரசிகர்களை வேறு மாதிரி யோசிக்க வைத்தது. ஹனிரோஸ் தனது கவர்ச்சிக்காக உடல் பாகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் பரவி வைரல் ஆனது. ஆனால் நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வில்லை என்று சொல்லிப் பார்த்து, ஒருகட்டத்தில் தொட்டுப்பாருங்கள் என்கிற ரேஞ்சுக்கு கோபப்பட்டு பேசினார் ஹனி ரோஸ்.

ஆனாலும் ஹனிரோஸ் போகும் இடங்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. கேரளாவில் ஒரு பர்னிச்சர் கடையை திறந்து வைக்க வந்த ஹனிரோஸ் மீது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் பாய்ந்து விட்டனர். வேறு ஒரு நடிகையாக இருந்திருந்தால் ரசிகரை அடித்திருப்பார்கள். ஆனால் ஹனி ரோஸ் சமாளித்துக் கொண்டே சிரித்தபடி கையசைத்து விட்டு காரில் ஏறி பறந்தார்.

இவ்வளவு கிரேஸ் உள்ள ஹனிரோஸை எப்படியாவது தனது நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்க இருந்ததாகவும், அவரது நகைக்கடை விளமபரத்திற்கு விளம்பர தூதராக நியகிக்க விரும்பியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஹனிரோஸ் இதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை குறி வைத்து தொடர்ந்து தனக்காக ஆட்கள் மூலம் இணையத்தில் தொடர்ந்து ஆபாச கமெண்டுகளை பரவ விட்டதாகம் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ஹனிரோஸ் மறைமுகமாக இதற்கு எதிர்வினையாற்றினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஒரு நபர் இரட்டை அர்த்தத்தால் என்னை பேசி வருகிறார். அந்த நபர் என்னை விழாவிற்கு அழைத்தபோது, நான் போக மறுத்ததற்குப் பழிவாங்கும் விதமாக, அவர் வேண்டுமென்றே என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார். ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஹனி ரோஸின் பதிவிற்கு அவரை துஷ்பிரயோகம் செய்யும் அளவிற்கு கமெண்ட் வந்ததாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் கொச்சியை சேர்ந்த ஷாஜி என்பரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 30 நபர்கள் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சில நேரம் நடிகைகளுக்கு அவர்களது அழகே தொந்தரவாக அமைந்து விடுகிறது. இதற்கு தமிழ் சினிமாவிலேயே பல உதாரணங்களை கூற முடியும். ஒரு கட்டத்தில் இந்த தொந்தரவு அதிகமாகி சில நடிகைகள் மனம் பலவீனமாகி உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குப் போகிறார்கள். திவ்யபாரதி, ஷோபா, லட்சுமி ஸ்ரீ என்று பலர் இதற்கு சொல்லலாம். ஆனால் இதையெல்லாம் எதிர்கொண்டு சினிமாவில் வெற்றிபெற்றவர்களும் இருக்கிறார்கள். குஷ்பூ, ராதிகா சந்திக்காத பிரச்சனைகளா அவர்கள் இன்றைக்கு சினிமாவில் அடையாளமாக இருக்கிறார்கள். இதுபோல ஹனிரோஸ் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவார் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...