‘வாத்தி’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா, மலையாள சினிமாவில் அறிமுகமானவர். மலையாளத்தில் சில படங்கள் நடித்தாலும், இவரால் அங்கே முன்னணி வரமுடியவில்லை. இதுதவிர மலையாளப் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரிய சம்பளமும் அங்கே கொடுக்கப்படுவதில்லை. இதனால்தான் சம்யுக்தா இப்பொழுது தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ‘பூமராங்’ என்னும் மலையாளப் படத்தில் நடித்திருக்கும் சம்யுக்தா, அப்படத்தின் ப்ரமோஷனுக்கு வராமல் கட் அடித்தது மலையாள சினிமாவுலகில் சர்ச்சையாகி இருக்கிறது.
’பூமராங்’ படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர், ‘சம்யுக்தா பெரிய கமர்ஷியல் படங்களில் நடிப்பதால், இந்தப் பட ப்ரமோஷனுக்கு வர நேரமில்லை என்று சொல்லியிருக்கிறார். நான் இனி மலையாளப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முதலில் சொன்னார். அடுத்து, அவர் நடித்திருக்கும் பெரிய பட்ஜெட் படம் இதே நாட்களில் ரிலீஸாக இருப்பதாகவும், அவர் நடித்துகொண்டிருக்கும் படத்தின் பட்ஜெட் 35 கோடிக்கும் மேல். அதனால் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சொன்னார். இப்பொழுது என்னுடைய சினிமா கேரியரை நான்தான் பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் சம்யுக்தாவுடன் நடித்திருக்கும் ஷைன் டாம், ‘சம்யுக்தா தன்னுடைய பெயரில் இருந்த மேனனை நீக்கியிருக்காங்க. அது. ஓகேதான். ஆனால் அவங்க கமிட் பண்ணிய படத்தின் ப்ரமோஷன் வேலையை முழுமையா முடித்து கொடுக்கவேண்டுமே. அதுதானே முக்கியம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவராக இருப்பதைவிட மனுஷங்களை மனுஷனாகவே நினைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
இதற்கு சம்யுக்தா தரப்பிலிருந்து எந்தவித ரியாக்ஷனும் இல்லை என்பதுதான் ஹைலைட்.
#vathi, #dhanush, #samyuktha, #sir, #samyukthamenon,
கன்டென்ட்டில் கலக்கும் மலையாள சினிமா!
பிரம்மாண்டமான பட்ஜெட், பல நட்சத்திரங்கள் நடிக்கும் மல்ட்டி ஸ்டார் படம், பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எங்கேயோ பயணித்து கொண்டிருக்க, மலையாள சினிமா சத்தமில்லாமல் லோ பட்ஜெட்டில் அட்டகாசமான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கடந்த 4 நான்கு மாதங்களில் வெளியான 3 மலையாளப் படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இப்படங்கள் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை இல்லை. பெரிய கமர்ஷியல் நடிகர்கள் நடிகைகள் நடிக்கவில்லை. ஆனாலும் மோகன்லால் மம்மூட்டி நடித்தப் படங்களை விட ஹிட் அடித்திருக்கின்றன.
இந்த பட்டியலில் இருக்கும் முதல் படம், ’விபின் தாஸ் இயக்கி இருக்கும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. ’ஹ்ருதயம்’ படத்தில் நடித்த தர்ஷனா ராஜேந்திரன், டைரக்டர் பசில் ஜோசப் இருவரும் நடித்திருக்கும் இப்படம் பெண்களுக்கு அவசியமான உரிமையை நகைச்சுவையாக காட்டியிருக்கிறது. இதன் கன்டென்ட்டும் காமெடியும் பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்ப வைத்திருக்கின்றன.
அடுத்து, ’மாளிகப்புறம்’.. உன்னி முகுந்தன், தேவ நந்தா, ஸ்ரீபத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரு சிறுமி, சபரிமலைக்குப் போக விரும்புகிறாள். ஆனால் கெட்ட சக்திகள் அவளுடைய பயணத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி அவள் எப்படி சபரிமலைக்குப் போகிறாள் என்பதே கதை. ஆன்மீகத்தையும், உணர்வுப்பூர்வமான சம்பவங்களையும் வைத்து கலகலப்பான படமாக கொடுத்திருக்கிறார் இதன் இயக்குநர் விஷ்ணு சசி ஷங்கர்.
மூன்றாவது படம் ‘ரோமஞ்சம்’. அறிமுக இயக்குநர் ஜிது மாதவன் இயக்கியிருக்கும் ஹாரர் காமெடிபடம் இது. பேச்சிலர்கள் சில பேர் ஆன்மாக்களுடன் பேசும் ஓஜோ போர்டை வைத்து முயற்சிக்க, என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையோடு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். பாக்ஸ் ஆபீஸிலும் புகுந்து விளையாடி இருக்கிறது இப்படம்.
இந்த மூன்றுப் படங்களும் கன்டென்ட்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன.
#mollywood, #darshanarajendran, #basiljoseph, #jayajayajayajayahey, #mallikappuram, #romansam,
தீபாவளிக்கு களமிறங்கும் ’இந்தியன் 2’
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிக்கும் ’ஆர்சி 15’ என இரு படங்களின் ஷூட்டிங்கையும் மாற்றி மாற்றி எடுத்து வருகிறார் ஷங்கர்.
எப்படியாவது இந்த இரு படங்களையும் வேகமாக முடித்துவிட்டு, அடுத்து ‘வேள்பாரி’ திரைக்கதைக்கான டிஸ்கஷனில் அமரவேண்டுமென ஷங்கர் வேகம் காட்டி வருகிறார்.
கியாரா அத்வானி. திருமணமான கையோடு மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார். இதனால் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
அப்படியானால்தான் மே மாதத்திற்கு பிறகு கமலின் ’இந்தியன் 2’ முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்பதால்தான் இந்த முடிவாம்.
இந்த இரு படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை ஒரே நேரத்தில் முடித்துவிட்டால் இந்த இரண்டுப் படங்களின் ரிலீஸையும் அடுத்தடுத்து வைத்துவிடலாம் என்று ஷங்கர் தரப்பு யோசிக்கிறதாம்.
இதில் ’இந்தியன் 2’ படத்தை தீபாவளிக்குக்கும், ராம் சரண் பட த்தை பொங்கலுக்கு வெளியிடும் திட்டமிருக்கிறதாம்.
இதனால் வரும் தீபாவளிக்கு அஜித், விஜய் படங்கள் வெளியானால் கமலும் களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#director, #Shankar, #KamalHaasan, #RamCharan, #KiaraAdvani. #Indian2,