No menu items!

மகன் ஜேசன் இயக்கும் படத்தில் தளபதி விஜய்

மகன் ஜேசன் இயக்கும் படத்தில் தளபதி விஜய்

இன்னைக்கு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி டாக் ஒண்ணே ஒண்ணுதான்.

இளைய தளபதி, தளபதி., சூப்பர் ஸ்டார் இப்படி பல பட்டங்களையும் ரசிகர்களின் ஒட்டு மொத்த அன்பையும் வைத்திருக்கிறது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருப்பதுதான். ஒப்பந்தம் செய்திருப்பது லைகா நிறுவனம். லைகா தயாரிப்பு என்பதால் பிரமாண்டமாய் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

வெறும் வாரிசாக மட்டும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவுக்குள் நுழையவில்லை. அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுதான் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் விஜய்யின் செல்ல மகன்.

லண்டனில் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பற்றி பட்டம் படித்தவர். சினிமா தயாரிப்பு பற்றி கனடா டொரோண்டோவில் கற்றுத் தேர்ந்தவர். குறும்படங்களை இயக்கியவர்.

அப்பா விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர். தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் பல நம்பர் ஒன் நடிகர்களை இயக்கிய சூப்பர் ஹிட் இயக்குநர். இந்தப் பின்னணி இருந்தும் தடாலடியாக தமிழ் சினிமாவுக்குள் நுழையவில்லை ஜேசன்.

அப்பாவை மாதிரியேதான் மகன் ஜேசனுக்கும் சினிமா ஆசை. பள்ளிப் படிப்பில் இருக்கும்போதே விஜய்க்கு சினிமாவின் மீது ஆசை இருந்தது. அவரது அப்பா எஸ்.ஏ.சி.க்கும் விஜய்யை சினிமாவில் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் ஆசை இருந்தது.

ஜேசன் விஷயத்தில் அப்படி இருந்ததாக தெரியவில்லை. சினிமாவுக்குள் நுழைய ஆசை இருந்தால் மட்டும் போதாது. நிறைய கத்துக்கணும், அப்புறம் சினிமாவுக்கு வரலாம் என்று விஜய் சொன்னதாக தகவல் இருக்கிறது.

அப்பா சொல்லைத் தட்டாத ஜேசன் சினிமா படிப்பு படித்து முடித்தார். குறும்படங்களை இயக்கினார். அப்பா விஜய்க்கு மகனின் சினிமா ஆசை புரிந்ததும் எதுவும் தடை சொல்லவில்லை. வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜய்யுடன் மகன் சஞ்சய் ஆடிய நடனம் இன்று வரை எல்லோர் மனதிலும் இருக்கும்.

அப்பாவுடன் பாடலுக்கு ஆடினாலும் ஜேசன் சஞ்சய்க்கு ஆரம்பத்திலிருந்தே திரையில் தோன்றுவதில் அத்தனை ஆர்வம் இல்லை. பின்னணியிலிருந்து இயக்குவதுதான் அவரது ஆசை. அவரது நெருங்கிய நண்பர் பட்டாளமும் சினிமா ஆசை உடையவர்கள்தான். அதனால் ஜேசன் இயக்கப் போகும் படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்கள் அவர் குறும்படத்தில் பணியாற்றிய நண்பர்கள்தான் என்று கூறப்படுகிறது.

சரி, ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் ஹீரோ யார்? ஹீரோயின் யார்?

லைகா நிறுவனம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

ஹீரோ விஜய் சேதுபதி என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹீரோயின் புதுமுகம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் ஒரு சின்ன ஆனால் முக்கியமான ரோலில் விஜய் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்திருக்கிறது.

மகன் ஜேசன் இயக்கத்தில் அப்பா விஜய் நடிக்கப் போவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...