No menu items!

Thalaivar 17. – வெளியேறிய சிபி, எண்ட்ரீ ஆன லோகேஷ்

Thalaivar 17. – வெளியேறிய சிபி, எண்ட்ரீ ஆன லோகேஷ்

ரஜினிகாந்த் கைவசம் இரண்டுப் படங்கள் உள்ளன. ஒன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’. அடுத்து ரஜினி மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கும் ’லால் சலாம்’

உண்மையில் ‘லால் சலாம்’ படம் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே ரஜினி லைகாவுக்கு இரண்டுப் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதற்காக அவர் 250 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் ஒரு கிசுகிசு உலா வந்தது.

ரஜினி அரசியல் விஷயத்தில் இதுவரையில் பெரும் குழப்பத்தில் இருந்ததைப் போலவே, தனது அடுத்தப்பட விஷயத்திலும் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

இதனால் லைகா தயாரிக்கும் அந்த இரண்டாவது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி இருந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘DON’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ரஜினிக்கு ஒரு கதை சொல்லியதாகவும், ரஜினி அந்த கதைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாகவும், அந்தப் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கலாம் என்றும் பேச்சு அடிப்பட்டது.

ஆனால் இப்போது சிபி சக்ரவர்த்தி அந்த ப்ராஜெட்டில் இல்லை என்கிறார்கள். சிபி சக்ரவர்த்தி ரஜினியிடம் ஒரு ஆக்‌ஷன் காமெடி கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த முறை ரஜினி ஆக்‌ஷன் வேண்டாம். வேறு ஏதேனும் கதை இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்.

இனி ஆக்‌ஷன் வேண்டாம், தனது வயதுக்கேற்ற மெச்சூர்டான கமர்ஷியல் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கதை விஷயத்தில் ரஜினி திடீரென இப்படி சில மாற்றங்களை சொன்னதால், அது சரிப்பட்டு வராது என சைலண்ட்டாக சிபி சக்ரவர்த்தி கழன்று கொண்டார் என்கிறார்கள்.

இப்படியொரு சூழலில்தான் இப்போது ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று ஒரு புது தகவல் வெளிவந்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் ரஜினியைச் சந்தித்தார். அப்போது நடந்த சில நிமிட பேச்சில் இது முடிவாகி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். விஜயுடன் இணைந்திருக்கும் ‘லியோ’ முடிந்ததும் இப்படம் தொடங்கலாம் என சொல்கிறார்கள். ஆனால் லியோவுக்கு அடுத்து ’கைதி 2’ படம் பற்றி லோகேஷ் கூறியிருப்பதால், ரஜினியுடன் இணைவது சாத்தியமா அல்லது ரஜினி ப்ராஜெக்ட் ஓகே ஆனால் அதற்கு பிறகு ’கைதி 2’ எடுக்கப்படுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.


சமந்தா – யாரு கூட யார் டேட்டிங் போனால் எனக்கென்ன?

சமந்தா, தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவுக்கும் நாக சைதன்யவுக்கும் இடையில் இருந்த அந்த காதல் கல்யாணமான நான்கு வருடங்களிலேயே தனது ஆதரவை இவர்களிடமிருந்து வாபஸ் பெற்றுகொள்ள, அக்டோபர் 2021-ல் திருமணம் விவாகரத்தில் முடிந்து போனது.

திருமண முறிவு ஆன வேகத்திலேயே ‘புஷ்பா’ படத்தில் ’ஊ சொல்றீயா மாமா ஊ சொல்றீயா’ என்ற பாடலில் சூடேற்றும் நடன அசைவுகளில் ஆட்டம் போட்டு நாகார்ஜூனா குடும்பத்திற்கு டென்ஷன் ஏற்றினார்.

மறுபக்கம் வெளிநாட்டுக்குப் போன இடத்தில் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலானது.

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தாரே, ராட்சஸ மாமனே பாடலில் கயிறு கட்டி ஆடுவாரே அவரேதான் இந்த சோபிதா துலிபாலா.

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என்ற கிசுகிசு தொடர்ந்து வந்தாலும், இதுபற்றி சமந்தா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ‘என் வாழ்க்கையில் அது ஒரு கஷ்டமான தருணம். நான்கு வருட திருமண வாழ்க்கையில் மனசளவுல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்’ என்று பட்டும்படாமல் சொல்லியபடி பேச்சை முடித்து கொண்டார்.

இப்படி விவாகரத்து, நாக சைதன்யா – சோபிதா டேட்டிங் பற்றி யார் கேட்டாலும் கமெண்ட் எதுவும் அடிக்காமல், நழுவிக்கொண்டிருந்த சமந்தா இறுதியில் மாட்டிக்கொண்டார். அவர் நடித்து வெளியாக இருக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் ப்ரமோஷனுக்காக சமந்தாவை வளைத்து வளைத்து பேட்டி எடுத்தார்கள்.

அப்போது மீண்டும் நாக சைதன்யா – சோபிதா உறவு பற்றிய கேள்வியைக் கேட்டுவிட்டார்கள்.

இந்த முறை என்ன சொல்வதென்று யோசித்த சமந்தா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘யாரோடு யார் டேட்டிங் போனா எனக்கென்ன. எதைப் பத்தியும் எனக்கு கவலை இல்ல’ என்று ஒரே வரியில் கமெண்ட் அடித்து, நாக சைதன்யா தன்னுடைய கடந்த காலம் என்று சொல்லியிருக்கிறார்.

சமந்தாவுக்கு நெருங்கிய நண்பர்கள், ‘யார் யாரோடு ரிலேஷன்ஷிப்புல இருக்காங்க என்கிறதுல எனக்கு கவலை இல்ல. காதலை மதிக்க தெரியாதவங்க, எத்தனை பேர் கூட டேட்டிங்குல் இருந்தாலும், கடைசியில கண்ணீரோடுதான் இருக்கணும். குறைந்தபட்சம் அந்த பெண்ணாவது சந்தோஷமா இருந்தால் சரி. அவர் தன்னோடு நடத்தையை மாத்திக்கிட்டார்னா, அந்தப் பெண்ணை காயப்படுத்தாமல் இருந்தார்னா, அது எல்லோருக்கும் நல்லது’ என்று சமந்தா மனம் திறந்து பேசியதாக சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...