No menu items!

சூர்யா – ஜோதிகா ஜோடியின் சொத்து மதிப்பு

சூர்யா – ஜோதிகா ஜோடியின் சொத்து மதிப்பு

கோலிவுட்டில் ரஜினி, விஜய், அஜித், கமல் இந்த நான்கு பேரும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என இந்த வரிசை தொடர்கிறது.

இப்படி ஒரு பட்டியல் இருந்தாலும், பணக்கார கோலிவுட் ஜோடி யார் என்று பார்த்தால் சூர்யா – ஜோதிகா ஜோடிதான் அதிக சொத்து உள்ள நட்சத்திர ஜோடியாக இருக்கிறதாம்.

ஜோதிகா மற்றும் சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு, என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன, எதில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் உலா வருகின்றன,

ஜோதிகா ஆரம்பத்தில், அதாவது 1998-ல் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ’டோலி சஜாக்கே ரக்னா’ என்ற ஹிந்திப் படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டி, மருமகளாகவும் அரவணைத்து கொண்டது தமிழ்நாடுதான். 1999-ல் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இந்தப் படமே அவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது.

தமிழ், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தவர் சூர்யாவுடன் காதலில் விழுந்தப் பிறகு, சில வருடங்களிலேயே நடிப்பிற்கு டாடா சொல்லிவிட்டு, 2006 செப்டெம்பர் 11-ம் தேதி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். பொதுவாகவே நடிகைகளுக்கு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலானாலும், சில வருடங்களிலேயே மீண்டும் கேமரா முன் நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை. இதற்கு ஜோதிகாவும் விதிவிலக்கல்ல.

தமிழ்ப் படங்களில் ரீ-எண்ட்ரி கொடுத்தவர், அடுத்து மம்மூட்டியுடன் ‘காதல் – த கோர்’ படம் மூலம் மலையாளத்திலும் நடித்திருக்கிறார். இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தியிலும் நடிக்கிறார். அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் இவர் நடித்திருக்கும் படம் ‘சைத்தான்’.

இப்படி ஜோதிகாவின் நட்சத்திரப் பயணம் தொடர்வதால் அவர் இப்பொழுதும் சம்பாதித்து கொண்டிருக்கிறார். ஹிந்தியில் நடிப்பதற்கு 5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஜோதிகாவின் சொத்து மதிப்பைப் பற்றி குறிப்பிடுகையில், 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு என்கிறார்கள். இவருடைய வருடாந்திர வருமானம் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சினிமா மட்டுமில்லாமல் முக்கிய ப்ராண்ட்களின் விளம்பரங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார். இதன் மூலமும் இவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

மறுபக்கம், சூர்யா 2013-ல் தொடங்கிய தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார். சொந்தப் படத்தில் நடித்தாலும் இவரது சம்பளம் என்பது 30 கோடி என்கிறார்கள்.

இப்படியாக இவர்கள் இருவரும் இதுவரை நடித்து சம்பாதித்த பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சூர்யா – ஜோதிகா நட்சத்திர ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 537 கோடி என்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு தங்கள் ஜாகையை மாற்றியிருக்கும் சூர்யா – ஜோதிகா ஜோடி வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 70 கோடியாம். 9000 சதுர அடியில் அசத்தலாக இருக்கும் இவர்களது வீட்டில், கார்கள் நிறுத்த பல ஸ்பாட்கள் இருக்கின்றன. மனதை லேசாக மாற்றும் தோட்டமும் முன்பக்கம் இருக்கிறது. பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதியில் கடலின் அழகை ரசித்தப்படியே வாழ்க்கையைக் கழிக்கும் வகையில் இந்த ஆடம்பரம் வீடு அமைந்திருக்கிறது.

தங்களது குழந்தை தேவ் மற்றும் தியாவின் படிப்பிற்காகவும், தனிமனித சுதந்திரத்திற்காகவும் மும்பைக்கு மாறியிருக்கிறோம் என்று சொன்னாலும், ஜோதிகா ஹிந்திப் படங்களில் ஆர்வம் காட்டுவது, அவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பையும் காட்டுகிறது. இப்போது ஒடிடி-யில் வெளியாகும் வெப் சீரிஸிலும் நடிக்கிறார் ஜோதிகா. ‘டப்பா கார்டெல்’ என்ற வெப் சீரிஸ் வெகுவிரைவிலேயே நெட்ஃப்ளிக்ஸில் வெளிவர இருக்கிறது.

இதனால் ஜோதிகாவும் தொடர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதால் இவர்களது சொத்து மதிப்பு இன்னும் எளிதில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 331 கோடியாம். அதாவது சூர்யா – ஜோதிகா ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் ஜோதிகாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 61.63%.

சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 206 கோடி என கூறப்படுகிறது. ‘கங்குவா’ படத்தில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 30 கோடி என்கிறது கோலிவுட் வட்டாரம். இவரது சொத்து மதிப்பு மட்டும் கடந்த 10 வருடங்களில் 60% அதிகரித்து இருக்கிறது.

சூர்யாவைப் பொறுத்தவரையில் ஆடம்பர சொகுசு கார்கள் என்றால் ரொம்பவே ப்ரியம். இவரிடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730 எல்டி சொகுசு கார் இருக்கிறது . இதன் விலை சுமார் 1.38 கோடி. இவருடைய கார் கலெக்‌ஷனில் காஸ்ட்லியான கார் இதுதான்.

மேலும், 80 லட்சம் மதிப்புள்ள ஒளடி க்யூ7, 60.91 லட்சம் மதிப்பிலான மெர்சிடீஸ் பென்ஸ் என இந்த இரண்டு கார்களுடன் 1.10 கோடி மதிப்புள்ள ஜாக்குவார் எக்ஸ்ஜே எல் காரும் சூர்யாவிடம் இருக்கின்றன.

சூர்யா சென்னையில் 2009-ல் புதிய வீட்டை கட்டினார். இவர் வசிக்கும் வீடு சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக பிரமிக்க வைக்கிறது.

தமிழ்ப்படங்களில் நடிக்கும் சூர்யா இப்போது ஹிந்திப் படத்திலும் நடிக்க இருக்கிறார். அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சர்ஃபிரா’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் மூலம் ஹிந்திப் பட தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

சூர்யா – ஜோதிகா இருவரும் தங்களது சம்பாத்தியத்தை ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்திருக்கிறார்களாம். ஜோதிகாவுக்கு மும்பையில் இருக்கும் தொடர்புகள் மூலம் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் கால் பதித்து இருப்பதாக கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...