No menu items!

திடீர் கிஸ் – டெட்டாலால் வாய் கொப்பளித்த நடிகை!

திடீர் கிஸ் – டெட்டாலால் வாய் கொப்பளித்த நடிகை!

டெட்டாலை வைத்து வாயைக் கொப்பளிக்க முடியுமா?

இப்படியெல்லாம் சந்தேகம் வரவே வேண்டாம். நான் அப்படியொரு முறை செய்திருக்கிறேன் என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் சீனியர் நடிகை ஒருவர்.

முன்பொரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை. தனது நடிப்பிற்காக தேசிய விருது வென்றவர். இப்படி சொல்லிவிட்டு அவர் பெயரை உச்சரித்தால் கூட பலருக்கு அவர் யார் என்று தெரியாது.

ஆனால் 90-களின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டையை சுழற்றுவதில் ஒரு அசுரனாக இருந்த வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் நெருக்கமாக இருந்த நடிகை என்றால் பட்டென்று அவர் ‘நீனா குப்தா’ தானே என்று பதில் வரும்.

அதே நீனா குப்தாதான் இப்போது இப்படியொரு பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு, நீனா குப்தா ‘தில்லாஹி’ என்ற டிவி சிரீயலில் நடித்திருந்தார். அந்த சிரீயலில் நீனா குப்தாவுக்கு ஜோடி திலீப் தவான்.

அப்பொழுதெல்லாம் கிஸ் என்ற வார்த்தையை பொதுவெளியில் சொல்லவே கூச்சப்படும் மக்கள்தான் அதிகம். ஆனால் டிவி சிரீயலில் ஒரு லிப் லாக் காட்சியை வைக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள்.

இந்தியாவிலேயே டிவி சிரீயலில் இடம் பெறும் முதல் முத்தக்காட்சி இதுதான் என்பதால் ரொம்பவே பதட்டமாகி இருக்கிறார் நீனா குப்தா.

‘உண்மையில் அந்த முத்தக்காட்சியில் நடிக்க நான் மனதளவில் தயாராகவே இல்லை. ரொம்ப பதட்டமாக இருந்தது; ஷூட்டிங்கிற்கு முந்திய இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.


எப்படி அப்படி நடிக்கப் போகிறோம் என்று யோசனையாக இருந்தது. வேறுவழியில்லாமல் அதை ஒரு சவாலாகவே எடுத்து கொண்டேன். ஒரு வழியாக ஷூட் செய்ததும், ஓடிப்போய் டெட்டாலால் வாயைக் கொப்பளித்தேன்’ என்று மனம் திறந்து கூறியிருக்கிறார் நீனா குப்தா.
ஆனால் இப்படி எடுத்த அந்த முத்தக்காட்சியை, எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த டிவி சிரீயலில் இருந்தது வெட்டி எறிந்து விட்டார்கள் என்பது வேறு கதை.

இப்போது நீனா குப்தா, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்- 2’ வெப் சிரீஸில் நடிக்கிறாராம். அதில் என்ன செய்யப்போகிறார் என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


அடம்பிடிக்கும் ஸ்ரீதேவி வாரிசு!

நம்ம ஊரில் இருந்து ஹிந்தி சினிமாவிற்கு போன ஸ்ரீதேவியை, கவர்ச்சி தேவதையாக பாலிவுட் கொண்டாடியது. ஸ்ரீதேவி இறக்கும் வரையிலும் அவருக்கு இருந்த அந்த மவுசும், அடையாளமும் மாறவே இல்லை.

ஆனால் அம்மாவின் அந்த ‘அபாரமான’ அடையாளத்தை வைத்து களமிறங்க நினைத்த அவரது வாரிசு ஜான்வி கபூருக்கு இப்போது பெருத்த ஏமாற்றம்.

ஸ்ரீதேவியின் வாரிசு என்பதற்காக யாரும் அசந்து போய் நிற்கவும் இல்லை. வலிந்து கொண்டு போய் வாய்ப்புகளைக் கொடுக்கவும் இல்லை.

ஆனாலும் அசராத ஜான்வி கபூர், தினமும் ஷூட்டிங்கில்தான் இருந்திருக்கிறார். சினிமா வாய்ப்புகள் இல்லை. அப்புறம் என்ன ஷூட்டிங் என்ற கேள்வி எழலாம். அந்த ஷூட்டிங் எல்லாம் சோஷியல் மீடியாவில் போட்டு லைக்குகளை அள்ளுவதற்காகவே விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோ எடுக்கும் போட்டோ ஷூட்தான்.

ஜான்வியை கமிட் செய்தால் குறைந்தப்பட்சம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகும் என்று நினைத்து அவரைத் தேடிப் போனவர்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் திரும்பி அனுப்பிவிட்டது ஜான்வி கால்ஷீட்டை கவனிக்கும் ஏஜென்ஸி.

’நடித்தால் டாப் 5 கமர்ஷியல் ஹீரோக்களுடன்தான் மேடம் நடிப்பாங்க. தேவையில்லாமல் தொந்தரவு பண்ணாதீங்க. மேடம் இந்த விஷயத்துல ரொம்பவே தெளிவா இருக்காங்க’ என்று ஒரு டெம்ப்ளேட் பதிலை வைத்திருக்கிறது அந்த ஏஜென்ஸி.

ஜான்வி கபூரின் இந்த பிடிவாதத்தினால்தான் இதுவரையில் அவரால் தமிழில் ஒரு படம் கூட நடிக்க முடியாமல் போயிருக்கிறது.

ஒருவழியாக தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடித்துவரும் ஜான்வி அடுத்து தமிழில் அஜித், விஜய்தான் முதல் சாய்ஸ். அது இல்லையென்றால் அவர்கள் இருவருக்கும் அடுத்து மார்க்கெட் உள்ள இளம் ஹீரோக்களுடன் நடிக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்திருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...