விஷயம் இதுதான். இந்திய சினிமாவைக் கிறங்கடித்த முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் மூத்த வாரிசு ஜான்வி கபூர். இவர் இப்போதுதான் தென்னிந்திய சினிமா பக்கம் வந்திருக்கிறார்.
அவரது அம்மாவைப் போல் இந்திய நட்சத்திரமாக பெயரெடுக்கும் முன்பே காதலின் வேகத்தில் சறுக்கி விழுந்திருக்கிறார். இந்தளவிற்கு ஜான்வியைக் காதல் வயப்படுத்தி இருப்பவரின் பெயர் ஷிகர் பஹரியா என்கிறார்கள்.
ஜான்வி தனது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஊடகங்கள் மோப்பம் பிடித்துவிட்டன.
ஜான்வியும், ஷிகரும் அடிக்கடி ஒன்றாக தென்பட்டிருக்கிறார்கள். மதிய நவு, இரவு விருந்து என இவர்கள் ஜோடியாக போக வர, ஊடகங்களின் ரேடாருக்குள் இந்த ஜோடியை குறித்து வைத்து கொண்டன மும்பை ஊடக வட்டாரம். ஜான்வியின் தங்கை குஷியின் பிறந்த நாளுக்கு ஷிகர் யாருக்கும் தெரியாமல் தலையைக் காட்டியதும், மாலத்தீவியில் விடுமுறையை ஒன்றாக கொண்டாடியது பற்றிய தகவல்கள் கசிந்துவிட்டன. ஜான்வியின் சித்தாப்பா அனில் கபூர் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் ஷிகர் வந்து போக, காதல் உறுதி என்று அடித்து சொல்கிறார்கள்.
இந்தளவிற்கு எல்லா கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளுமளவிற்கு ஷிகர் பெரிய தலையா என்றால், ஆமாம். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன்தான் இந்த ஷிகர் பஹரியா.
பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஷிகருக்கு சினிமா வட்டாரத்திலும் எல்லோரும் பரீட்ச்சயம். அதுமட்டுமில்லாமல் போனி கபூர், அனில் கபூர், அர்ஜூன் கபூர் என கபூர் குடும்பத்துடன் ரொம்ப நெருக்காமாக இருக்கிறார் ஷிகர்.
ஆனால் ஜான்வி கபூர் நான் இன்னும் சிங்கிள்தான் என்று எல்லோரிடமும், பேட்டிகளிலும் கூறி வருகிறார். மற்றொரு விஷயம் என்னவென்றால், ஜான்வி கபூர் இதுவரையில் மூன்று பேருடன் மட்டும்தான் டேட்டிங் போய் இருக்கிறேன் என்றும் சொல்கிறார்.