No menu items!

lip-lock  சர்ச்சையில் ஸ்ரேயா

lip-lock  சர்ச்சையில் ஸ்ரேயா

ஸ்ரேயா [Shriya Saran] உற்சாகத்தில் இருக்கிறார்.

திருமணமாகிவிட்டது. ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ப்ரமோஷன் ஆகிவிட்டார். வயதும் நாற்பதை எட்டியிருக்கிறது. சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு தடையாக இருக்கும் இந்த சமாச்சாரங்களை எதிர்க்கொண்ட போதும் இவர் நடித்திருக்கும் இரண்டுப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இதுதான் அவரது உற்சாகத்திற்கு காரணம்.

அஜய் தேவ்கனுடன் நடித்த ஹிந்திப்படம் ‘த்ரிஷ்யம் 2’  பாக்ஸ் ஆபீஸில் வசூலை நிரப்பி கொண்டிருக்கிறது. இவர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

படங்கள் ஓடினால் மட்டும் வாய்ப்புகள் வந்து குவிந்துவிடாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் ஷ்ரேயா.

இதனால்தான் இளசுகளின் மனதில் சுனாமியை உண்டாக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து ஒய்வில்லாமல் வெளியிட்டப்படி இருக்கிறார். அடுத்து செய்திகளில் தன் பெயர் அடிப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் அவரது கணவர் ஆண்ட்ரே கோஷிவ் ஷ்ரேயாவுக்கு இதழில் முத்தமிட அந்த லிப்-லாக் பலரது இதயத்தை லாக் செய்திருக்கிறது. ஷ்ரேயா நினைத்ததைப் போலவே சர்ச்சைகளையும் கமெண்ட்களையும் கிளப்பியிருக்கிறது.

‘ஆண்ட்ரே என்னுடைய முக்கியமான தருணங்களில் முத்தம் கொடுப்பது என்பது ரொம்ப நார்மலான விஷயம். இதை ஏன் சர்ச்சையாக்குகிறீர்கள். ட்ரோல் செய்கிறீர்கள்’ என்று அப்பாவியைப் போல் எதிர்க்கேள்வி கேட்டப்படி தனது கால்ஷீட் டைரியை திறந்துவைத்திருக்கிறார்.

இந்த ஹிட்களை வைத்து அடுத்து செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிடலாம் என ஸ்பெயினில் கொஞ்ச நாள் செட்டிலாகி இருந்தவர் இப்போது தனது ஜாகையை மும்பைக்கு மாற்றியிருக்கிறார்.


தெலுங்கு சினிமாவில் ப்ரதீப் ரங்கநாதன்

’லவ் டுடே’ [love today] படத்தைப் பார்த்துவிட்டு ஒரு தெலுங்கு ரசிகர் அப்படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான  பிரதீப் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இப்பொழுது பிரதீப் ரங்கநாதனுக்கு தமிழ்நாட்டை விட ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் ஏகப்பட்ட மவுசு என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டுமென்பார்களே அதை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் [Pradeep Ranganathan]. விஷயம் இதுதான். ’சில காட்சிகள் தமிழில் சரியாக வொர்க் அவுட் ஆகல. ஆனால் இங்கே ரசிகர்கள் அதை ரொம்ப ரசிக்கிறாங்க. இங்கே தெலுங்கு ரசிகர்கள் எனக்கு கூஸ்பம்ப்ஸ் வர்ற அளவுக்கு கொண்டாடுறாங்க’ என்று மீடியாவிடம் பேசும் போது  கொஞ்சம் எடுத்துவிட்டிருக்கிறாராம்.

இந்த யுக்தி நன்றாகவே எடுப்பட்டிருக்கிறது. தமிழில் கிட்டதட்ட 300 ஸ்கிரீன்களில் மட்டுமே ரிலீஸான ‘லவ் டுடே’ இப்போது தெலுங்கில் ஏறக்குறைய 320 ஸ்கீரின்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் பிரதீப்பை வைத்து படமெடுப்பதற்காக வளைத்துப் போடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம். இப்படத்தை  தெலுங்கில் வெளியிட்ட ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூ பிரதீப் ரங்கநாதனை கமிட் செய்திருப்பதாகவும் பிரதீப்புக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

அநேகமாக பிரதீப் ரங்கநாதனின் அடுத்த இரண்டுப் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகலாம். இரண்டுக்குமே தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் என்றும் பேச்சு அடிப்படுகிறது.


Suriya 42 – திஷா படானியுடன் Fantasy

’சூர்யா 42’ படத்தின் ஷூட் படு வேகமாக போய் கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் மெல்லிடை பேரழகி  திஷா படானி [Disha patani] ஹீரோயினாக நடிக்கிறார்.

சிறுத்தை சிவா [Siruthai Siva] இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் 3டி [3D] படமாக வெளியிடப்படும் என்ற பேச்சும் அடிப்படுகிறது.

லேட்டஸ்ட் தகவல்கள் என்னவென்றால், இது ஒரு ப்ரீயட் டிராமாவாக வரவிருக்கும் ஃபேண்டஸி படமாம்.

இதில். அராத்தார், வெங்காடேர், மந்தாகர், முகாதர் மற்றும் பெருமனந்தர் [Arathar, Venkaater, Mandaakar, Mukaatar, Perumanathar] என சூர்யாவுக்கு 5 கேரக்டர்கள் என்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையாக திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

35 நாட்கள் கோவாவில் நடைபெற்ற முதல் ஷெட்யூலில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது நடக்கும் சம்பவங்களைப் போல் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒரு சில முக்கியமானவற்றை எடுப்பதற்காக சூர்யா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இலங்கையில் எடுக்க இருக்கும் காட்சிகளுக்கான ஷூட்டிங் மார்ச் – ஏப்ரல் 2023 முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் போர்க்களக் காட்சிகளும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...