No menu items!

சரத்பாபு – ரஜினியின் எதிரி ஜெயலலிதாவின் ஜோடி

சரத்பாபு – ரஜினியின் எதிரி ஜெயலலிதாவின் ஜோடி

கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ராஜாவின் இசையில், ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ என்ற பாடலைக் கேட்கும்போதே மனத்திரையில் ஜீப் ஓட்டும் சரத்பாபு நினைவுக்கு வந்துவிடுவார். அப்படியொரு மேஜிக்கை நிகழ்த்தியது அந்தப் பாடல். ‌‌ மிகையில்லாத அளவான நடிப்புக்கு சொந்தக்காரர்.

சரத்பாபு 1951-ல் ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார். அவரது இயற் பெயர் நாராயணன் தீட்சித். சரத்பாபுவின் தந்தை ஹோட்டல் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த மகனை, தனக்கு உதவியாக ஹோட்டல் பிசினஸ்க்கு அழைத்தார் தந்தை. சரத்பாபுவுக்கு போலீஸ் அதிகாரியாவதில்தான் விருப்பம் இருந்தது.

சரத்பாபுவை சினிமாவுக்கு கொண்டுவந்தது அவரது கல்லூரி நண்பர்கள்தான். ‘நீ ஹீரோ மாதிரி அழகா இருக்கே. பேசாம சினிமாவுக்குப் போ. சினிமால நீ பெரிய ஆளா வந்துடுவே” என்று நண்பர்கள் அவரை உசுப்பேற்ற, சினிமாவில் வாய்ப்பு தேடினார். முதல் முறையாக 1973-ல் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் சரத்பாபு. அன்றிலிருந்து அவருடைய திரைப் பயணம் ஆரம்பமானது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இவரும் இயக்குனர் சிகரம்.கே.பாலசந்தரின் அறிமுகம்தான். 1977- ல் வெளியான ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் சரத்பாபு. அடுத்ததாஅக பாலச்சந்தர் இயக்கிய ‘ நிழல் நிஜமாகிறது’ படத்தின் மூலம் பெரிதாக கவனிக்கப்பட்டார். இதைத்தொடந்து அடுதடுத்து படங்கள் வர ஆரம்பித்தன ஹீரோ. வில்லன். குணச்சித்திரம் என்று ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாத ஒரு நடிகராக இருந்த அவர் அனைத்துவித பாத்திரங்களிலும் நடித்தார்.

சிவாஜிவுடன் ‘கீழ்வானம் சிவக்கும்’, கமலுடன் ‘சட்டம்’, ‘ஆளவந்தான்’, ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’, ரஜினிவுடன்’ முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மகேந்திரனின் ’ நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘உதிரிப்பூக்கள்’ போன்ற படங்கள் அவருக்கு வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது. மணிரத்னத்தின் ‘பகல் நிலவு’ படம் அவரது போலீஸ் கனவை நனவாக்கியது.

அண்ணாமலை படத்தில் ரஜினியின் நண்பராக ஆரம்பித்து ரஜினி சவால்விடும் எதிரியாக மாறுவார். அண்ணாமலை சரத்பாபுவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம். ரஜினியுடன் அவர் நடித்த முத்து திரைப்படமும் அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக, ‘நதியை தேடி வந்த கடல்’ படத்திலும் அவர் நடித்துள்ளார்.

திரையுலகில் வெற்றிகரமான கலைஞராக இருந்த சரத்பாபுவுக்கு, நிஜவாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை, அவர் செய்த இரு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன. அவர் மணமுடித்த நடிகை ரமாபிரபா, சினேகலதா நம்பியார் இருவரும் சில ஆண்டுகள் மட்டுமே அவரோடு அவரோடு வாழ்ந்தனர்.

19 81-ல் நகைச்சுவை நடிகை ரமா பிரபாவை மணந்தார் சரத்பாபு. இந்த ஜோடி 1988-ல் பிரிந்தது. “என் பெயரைச் சொல்லித்தான் சரத்பாபு பட வாய்ப்புகளை பெறுகிறார். என் கணவர் என்பதால்தான் அவருக்கு சான்ஸ் கிடைக்கிறது என்று ரமா பிரபா பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். இதற்கு பதிலளித்த சரத்பாபு, “அவர் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம். அவருக்கு முன்பே நான் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தேன்” என்றார்.

தன் வீட்டை அபகரித்ததாக ரமா பிரபா புகார் சொல்ல, “என் பூர்வீக நிலத்தை விற்று நான் அவருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரிடம் என்ன பெரிய சொத்துக்கள் இருந்தன நான் ஏமாற்றுவதற்கு?” என்று கிண்டலடித்தார் சரத்பாபு.

இந்த திருமணம் முறிந்த நிலையில் சினேகலதா நம்பியார் என்ற தனது தோழியை 1990-ல் மணந்தார் சரத்பாபு. சில காலம் கழித்து, “அவரால் (சரத்பாபு) தனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. மன ரீதியாக என்னை துன்புறுத்துகிறார் எனவே அவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும். அவருடைய 20 கோடி ரூபாய் சொத்தில் இருந்து என் பங்கை பெற்றுத்தர வேண்டும்” என்று வழக்கு தொடுத்தார் சினேகலதா நம்பியார்.

சரத்பாபுவுக்கு ஹைதராபாத்தில் சொந்த வீடு இருந்தாலும், அவர் சென்னை தியாகராஜ நகரில் பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசனின் வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வந்தார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் ‘கீழ்வானம் சிவக்கும்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தார். அந்த வகையிலும். ஒரே தெருவாசி என்பதாலும் முக்தா சீனிவாசனின் நல்ல நண்பராக இருந்தார். முக்தா சீனிவாசனை அடிக்கடி சந்தித்து பேசுவார்.

வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார். வீட்டின் எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பைப்பில் தண்ணி வரவில்லை என்றால் அவரே ரிப்பேர் செய்து கொண்டிருப்பார். இனிமையான மனிதர் . மென்மையான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேச மாட்டார். அவர் எந்த கதாபாத்திரத்திற்கும் ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டார்” என்கிறார் முக்தா சீனிவாசனின் மகன் முக்தாரவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...