No menu items!

சமந்தாவை டிக் செய்த ஷாரூக்கான்

சமந்தாவை டிக் செய்த ஷாரூக்கான்

சினிமாவில் பரபரவென முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமந்தா வாழ்க்கையை மையோசிடிஸ் வியாதி வந்து புரட்டி போட்டு விட்டது. இப்பொழுது சமந்தா உடல் நலம் ஓரளவுக்கு தேடினாலும், அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் யாரும் தயாராக இல்லை. இதனால் சமந்தா ரொம்பவே மனநோக்கி போயிருக்கிறார்.

ஒரு பக்கம் சினிமாவில் நடிக்க புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் எப்படியாவது சினிமாவிலே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். ஆனால் அந்நிறுவனம் அறிவித்தபடி இன்னும் ஷூட்டிங் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதனால் சமந்தா ரொம்பவே அப்செட் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்நிலையில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சமந்தாவை டிக் செய்து இருக்கிறார் என்று பாலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் உடன் ஷாருக்கான் இணையவிருக்கும் புதிய படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ஷாருக் ஓகே சொல்லி இருக்கிறாராம்.

இது எப்படி நடந்தது?

சமந்தா பேட்டி ஒன்றில் தனது மனதில் இருந்த எல்லாவற்றையும் பற்றி மனதிறந்து பேசியிருக்கிறார். அதில் ஒரு கேள்வி நீங்கள் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை கேட்டதுமே சமந்தா பட்டென்று, ’மகேஷ் பாபு, ஷாருக்கான், சூர்யா’ என இந்த மூன்று நட்சத்திரங்களின் பெயர்களைக் கூறியிருக்கிறார்.

இப்போது சமந்தா ஆசைப்பட்டது போலவே ஷாருக்கான் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை ஷாருக்கான் சமந்தாவின் பேட்டியைப் பார்த்திருப்பாரோ என்ற கமெண்ட்கள் அதிகம் எழ ஆரம்பித்து இருக்கின்றன.

பொதுவாகவே ஷாருக்கான் தென்னிந்திய நடிகைகளை தன்னுடைய படங்களை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் இந்த முறை அவர் சமந்தாவை மனதில் வைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்
ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இணையும் படம் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்குமாம்.

விடாமுயற்சி – புதுத் தகவல்

‘விடாமுயற்சி’ என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அந்த படத்தின் சூட்டிங் முடிப்பதற்கு ’விடாமுயற்சியுடன்’ செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது லைகா.
தயாரிப்பு நிறுவனம் நிதி பிரச்சனையில் தத்தளிப்பதாக கூறப்பட்ட வந்த நிலையில், விடாமுயற்சியின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி இருக்கிறது. மீண்டும் ஆக்ஷன் காட்சிகளைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்ததன.

அஜித் மற்றும் மாஃபியா சம்பந்தப்பட்ட கார் சேசிங், சண்டைக்காட்சிகளை மட்டும் இங்கேஎ 30 நாட்கள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்குப் பிறகு இந்தியாவில் சூட்டிங் நடைபெற இருக்கிறது. குறிப்பாக ஹைதராபாத்தில் பத்து நாட்கள் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இங்கு ஆக்ஷன் காட்சிகளுக்கு முந்தைய டாக்கி பகுதியை எடுக்க இருக்கிறார்களாம்.

ஹைதராபாத் ஷெட்யூலுக்கு பிறகு படம் முழுமையாக முடியும் அடைந்து விடும்.. இதனால் அடுத்த கட்ட வேலையாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடுக்கிவிட திட்டமிட்டு இருக்கிறது லைகா. முடிந்த வரை இந்த படத்தை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட வேண்டும் என லைகா மும்முரம் காட்டி வருகிறது

’புஷ்பா 2’ தள்ளிப் போக பவன் கல்யாண் காரணமா?

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ’புஷ்பா தி ரூல்’ படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு இன்னும் மூன்றரை மாதங்கள் தள்ளிப் போகிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பின்னணியில் பவன் கல்யாண் என்கிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடுக்கு இடையேயான போர் போல இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. சந்திரபாபு நாயுடு உடன் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கூட்டணி வைத்தார்.

தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பரப்புரை நிகழ்ந்த போது நந்தியால் சட்டமன்றத் தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தனது மனைவியுடன் அவரது வீட்டுக்கு சென்றார். இந்த செய்தி காட்டுத்தீயைப் போல பரவ, அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரவிந்தர் கிஷோர் வீட்டின் முன் திரண்டனர். அப்போது ரவீந்தர் கிஷோரின் கையைப் பிடித்து உயர்த்தி காட்டினார் அல்லு அர்ஜூன்.

ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அல்லு அர்ஜுனுக்கு மாமா முறை. இந்நிலையில் அவர் பெத்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகையில், அல்லு அர்ஜுன் செய்த செயலால் இப்போது சிரஞ்சீவி குடும்பத்திற்கும் அல்லு அரவிந்த் குடும்பத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்கிறார்கள்.
இப்படி பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்க, புஷ்பா-2 படத்தில் துணை முதலமைச்சர் வில்லன்களில் ஒருவராக இருப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த படம் வெளியானால் தற்போது ஆந்திராவின் முதல் துணை முதலமைச்சர் ஆகியிருக்கும் பவன் கல்யாணை குறிப்பது போல் இருக்கும் என அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கும் தெலுங்கு சினிமாவின் முக்கிய புள்ளிகள் சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் அந்த துணை முதலமைச்சர் கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு கதாபாத்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக மீண்டும் இந்த காட்சிகளை ஷூட் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் தேவைப்படுகிறதாம். இதுதான் புஷ்பா 2 வெளியீடு தாமதமாவதற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...