No menu items!

சமந்தா Divorce – இந்த நடிகை காரணமா?

சமந்தா Divorce – இந்த நடிகை காரணமா?

த்ரிஷாவும், பிரபல தொழிலதிபர் வருண் மணியனும் டேட்டிங் போனார்கள். அந்த உறவு அவர்களது நிச்சயத்தார்த்தம் வரை சென்றது. ஆனால் நிச்சயத்தார்த்தம் முடிந்த சில வாரங்களிலேயே அதை இரு தரப்பிலும் ரத்து செய்துவிட்டார்கள்.

த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கு பிந்து மாதவிதான் காரணம் என்று அப்போது ஒரு சொல்லப்பட்டது.

ஆனால் பிந்து மாதவி அதை மறுத்து இருக்கிறார். த்ரிஷாவும் வருண் மணியனும் டேட்டிங் போன போது நான் இடையில் நுழையவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்ட பிறகுதான் நானும் வருணும் டேட்டிங் போனோம் என்று பிந்து மாதவி சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதே போல் பிரச்சினைதான் சமந்தாவின் வாழ்க்கையிலும் நடந்திருப்பதாக கூறுகிறார்கள்.

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோபியா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கு இடையே நெருக்கமான உறவு இருந்தது. அவர்கள் வெளிநாட்டுக்குப் போன போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தன.

இவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவுதான், சமந்தாவை குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி வர செய்தது என்று என்கிறார்கள்.

ஆனால் இதுநாள் வரையில் இது குறித்து சமந்தா எதுவும் கூறவில்லை. அதேபோல் சோபியா துலிபாலாவும் டேட்டிங் விஷயம் குறித்து பேசவும் இல்லை.

ஆனால் சோபியா ஊடகங்கள் துரத்திக்கொண்டே இருக்க, ‘நான் எதுவும் தப்பு பண்ணாத போது தேவையில்லாத விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை. அதுதவிர கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்றது என்னோட வேலை இல்லை’ என்று வேறுவழியின்றி பதில் சொல்லியிருக்கிறார்.

மறுபக்கம் நாக சைதன்யா, எனக்கும் சமந்தாவுக்கும் விவாகரத்து ஆனதற்கு காரணம் சோபியாதான் என்று சொல்வதை கேட்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

சினிமாவில் நட்சத்திரங்களுக்கு இடையேயான காதல் முறிவோ அல்லது திருமணமோ அல்லது விவாகரத்தோ நடக்கும் வரையில் இதேபோல் பல கிசுகிசுக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதே வரலாறு கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும். பொறுத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...