தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரப்படி, ரசித்து ஆடுவதோடு ரசிக்கும்படி ஆடும் ஒரே நடிகை என்றால் அது சாய் பல்லவி [Sai Pallavi] தான் என்று சினிமாவை கண்டுபிடித்த எடிசன் மீது சத்தியம் செய்யலாம்.
ஆட்டம்தான் தூக்கல் என்றால் நடிப்பிலும் கலக்கல் என்பதுதான் சாய் பல்லவியின் ஸ்பெஷாலிட்டி.
ஆனால் ஒரே பஞ்சாயத்து, சாய் பல்லவி கொஞ்சம் கெடுபிடியான ஆள். கமிட் ஆகும் போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பார். பத்து வாய்ப்புகள் வந்தால் அதில் ஒன்றை மட்டும்தான் தேர்ந்தெடுப்பார்.
இப்படி சாய் பல்லவியைப் பற்றி சொல்லும் போதே ஏதாவது வில்லங்கமா என்று யோசிக்க தோன்றலாம்.
ஆமாம். சினிமாவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, படித்த டாக்டர் [Doctor] படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டியபடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்யலாம் என்று சாய் பல்லவி யோசித்து வருகிறாராம்.
ஜார்ஜியாவில் [Georgia] டாக்டருக்கு படித்தவர் சாய் பல்லவி. படங்களில் பெரிதாக நடிப்பது இல்லை என்பது ஒரு பக்கம். வயதும் ஏறிக்கொண்டே போவதால், ஒரு டாக்டராக செட்டிலாகிவிடலாம் என்று யோசனை இருக்கிறதாம்.
கோயம்புத்தூரில் சொந்தமாக ஒரு மருத்துவமனையைக் கட்டி, அங்கே டாக்டர் தொழிலைப் பார்க்கலாம் என்பதுதான் திட்டமாம்.
சாய் பல்லவிக்கு வரும் கதைகளை முதலில் படித்து இது ஒகே அது தேறாது என ஃபில்டர் பண்ணும் தங்கை பூஜா மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனிக்கப்பார் என்கிறார்கள்.
Sai Pallavi, Doctor, Georgia
‘வாரிசு’ லேட்டஸ்ட் அப்டேட்
விஜய் [Thalapathy] நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு குத்துப் பாட்டு இருக்கிறதோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நிச்சயம் இருக்கும்.
‘வாரிசு’ [Varisu]வும் அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் சேர்ந்துவிட்டது. ஆனால் ஒரு வழியாக ‘வாரிசு’ ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என தெரிகிறது.
ஆனால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால்
ஜருகண்டி ஜருகண்ட்டி’ என தனது டீமை முடுக்கிவிட்டு கொண்டிருக்கிறார் இயக்குநர் வம்சி படிபள்ளி [Vamsi Padipalli].
இப்படத்திற்கு விஜய் கொடுத்த கால்ஷூட் மொத்தம் 80 நாட்கள். பொதுவாக தனது படங்களுக்கு விஜய் 60 முதல் 80 நாட்கள் கால்ஷீட் கொடுப்பது வழக்கம்.
தனது படங்களைப் பார்ப்பதற்கு பகட்டாக எடுப்பதில் வம்சி ரொம்பவே கவனமாக இருப்பார். அதன் ரிசல்ட்டாக இந்தப் படத்தில் ஷுட்டிங் நாட்கள் திட்டமிட்டதை விட அதிகமாகி இருக்கிறது.
விஜயும் கொடுத்த 80 நாட்களைத் தாண்டி கூடுதலாக நடிக்க வேண்டியதாயிற்று. இதனால் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் விஜய்.
அடுத்து தயாரிப்பாளரிடம் ஸ்கிர்ப்ட் சொல்லும் போது சொன்ன பட்ஜெட்டைவிட 20 சதவீதம் கூடுதல் பட்ஜெட்டை இயக்குநர் இழுத்துவிட்டிருப்பதாக கிசுகிசுக்கிறது பட யூனிட்.
இதையெல்லாம் விஜய் மூலம் இங்கே கல்லா கட்டிவிடலாம் என தயாரிப்பாளர் தில்லாக இருக்கிறாராம்.
Varisu. Vijay, Vamsi Padipalli, Thalapathy
சம்பளத்தில் ரூட்டை மாற்றிய ஷங்கர்
பிரம்மாண்டமான இயக்குநர் என இந்தியாவில் ஆறேழு வருடங்களுக்கு முன்பு வரை கொண்டாடப்பட்ட ஷங்கருக்கு [Shankar] அப்போது அப்படி படமெடுப்பதில் பெரிய போட்டி இருந்தது இல்லை.
ஆனால் எஸ்.எஸ். ராஜமெளலியும் [Rajamouli], பிரஷாந்த் நீலும் [Prashanth Neel] வந்தப்பிறகு ஷங்கருக்கு இந்தோனேஷியாவில் அசால்ட்டாக வந்து போகும் நிலநடுக்கத்தின் ரிக்டர் ஸ்கேல் அளவை விட அதிக அதிர்வு உருவாகி இருக்கிறது.
ஆனால் ராஜமெளலியின் வெற்றி ஷங்கருக்கு ஒரு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
’ஆர்’ஆர்.ஆர்’ [RRR] படத்தின் மூலம் ராம் சரணுக்கு கிடைத்திருக்கும் பான் – இந்தியா ஸ்டார் என்ற அங்கீகாரத்தையும், பிஸினெஸ்ஸையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
இதனால் தற்போது இயக்கிவரும் ராம் சரண் [Ram Charan] படத்தில் தனது சம்பளமாக பெரிய தொகை வேண்டுமென கேட்காமல் ஒரு குறிப்பிட்ட தொகை போதும் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் படம் வெளியாகி தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கொடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்க, டீல் இப்போது ஓகேவாகி இருக்கிறதாம்.
இந்த டீல் ஒரு பக்கமிருந்தாலும், வழக்கம் போல் இந்தப் படத்திற்கு திட்டமிட்ட பட்ஜெட்டைவிட கொஞ்சம் அதிகம் எகிறி இருக்கிறதாம்.
Shankar, Rajamouli, RRR, Prashanth Neel, Ram Charan