விஜய்யுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியின் தற்போதைய எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு யார் நலத்திட்டங்களை செய்தாலும் நல்ல விஷயம்தான். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்துத் தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேக்கப் போட்டு வந்திருக்கீங்களா? – வாக்காளர்களிடம் கேட்ட கதிர் ஆனந்த்
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம், பி.கே.புரம் ஆகிய இடங்களில் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டார்.
அபோது மக்களிடம் பேசிய அவர், “என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க… எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா… ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா.. உங்க முகத்தை பார்க்கும் போது பிரகாசமா இருக்கு.
நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு… அது உண்மைதானா? நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சதும் எல்லா மகளிருக்கும் மாதம் ரூ.1,000 கிடைக்க ஏற்பாடு செய்வோம்” என்றார்.
டார்ச் லைட் சின்னத்தை நிராகரித்த மன்சூர் அலிகான்
டார்ச் லைட் சின்னத்தை தனக்கு வழங்குவதாக தேர்தல் கமிஷன் கூறியதாகவும், ஆனால் அந்த சின்னத்தை தான் நிராகரித்ததாகவும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.
இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.