No menu items!

அயோத்தியில் இடம் வாங்கிய சூப்பர் ஸ்டார்!

அயோத்தியில் இடம் வாங்கிய சூப்பர் ஸ்டார்!

அயோத்தியில் ராமர் கோவில் ஆரம்பமாக இருப்பது குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், இந்த செய்தி. புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட தொலைவில், அயோத்தி விமான நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தொலைவில் இருக்கும் இடம் ஒன்றை ஒரு சூப்பர் ஸ்டார் வாங்கியிருக்கிறார்.

சுமார் 10,000 சதுர அடி பரப்பளவு இந்த இடத்தின் மதிப்பு சுமார் 14.5 கோடியாம். ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் கோயில் பிரதிஷ்டைக்கு முன்பாகவே இந்த இடத்தை வாங்கவேண்டுமென ஆர்வத்தோடு வாங்கிய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

உலகளாவிய ஆன்மீக தலைநகரத்தை உருவாக்கவேண்டுமென மேற்கொள்ளப்பட்டு வரும் ’த ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா’வின் முயற்சியின் அடிப்படையில்தான் அமிதாப் பச்சன் இந்த இடத்தை வாங்கி இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

‘இந்த அயோத்திக்கு என மனசுல ஒரு தனி இடம் இருக்கு. அயோத்தியின் காலம் கடந்தும் இருக்கும் ஆன்மீகம், கலாச்சாரம் ஒரு உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்கி இருக்கிறது. இது எல்லைகள் கடந்து தொடர்கிறது. இப்படியொரு அயோத்தியில் என மனப்பூர்வமான பயணம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இந்த உலகளாவிய ஆன்மீத தலைநகரத்தில் எனது வீட்டை கட்டுவதற்கு ஆர்வத்தோடு இருக்கேன்.

இன்னும் சொல்லப்போனால் என்னோட குடும்பம் உத்திரப்பிரதேசம் ப்ரக்யாராஜ்ஜில் [அலகாபாத்]தான் இருந்தது.’ என்று அயோத்தி பற்றி சிலாகித்து கூறியிருக்கிறார் அமிதாப் பச்சன்.

அயோத்தியில் அமிதாப் பச்சன் இடம் வாங்கியிருப்பதை அடுத்து தமிழ்நாட்டிலிருந்து சில சினிமா நட்சத்திரங்கள் இடம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...