விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு இது 68-வது படம். இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லேட்டஸ்ட் டிரெண்டான பல நட்சத்திரங்களை கமிட் செய்து ஒரு ஃப்ரேமிலும் மாஸ் காட்டுவதை வெங்கட் பிரபுவும் செய்யவிருக்கிறார். இதற்காக இப்படத்தில் பிரஷாந்த், மோகன், பிரபுதேவா, யோகிபாபு, பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், ஜெயராம், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
சென்னையில் பரபரப்பாக நடந்து வரும் ஷூட்டிங்கில், விஜயுடன் பிரஷாந்த் கலந்து கொண்ட காட்சியை எடுத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு அரசு 5 நாட்கள் விடுமுறை கொடுக்க, இவர்களோ ஒரேயொரு நாள் மட்டும் விடுமுறை கொடுத்துவிட்டு ஷூட்டிங்கை உடனடியாக தொடங்கிவிட்டார்கள்.
இதுக்கு காரணம் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு துரிதமாக முடிக்க சொல்லி விஜயிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறதாம். அதாவது வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஷுட்டிங்கை முடித்துவிட வேண்டுமென விஜய் தரப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.
இதையடுத்து விஜயுடன் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் காட்சிகளை மளமளவென முடிக்கும் வகையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறதாம்.
அப்படியொரு காட்சியாக, விஜயும் பிரஷாந்தும் சேர்ந்து ஆடுவதும் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரபுதேவாவின் நடன அமைப்பில் மூவரும் இணைந்து ஆடும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் பிரபுதேவா டான்ஸில் மாஸ்டர். விஜய் நன்றாக ஆடுபவர். பிரஷாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் ஆடுவதால் எப்படி ஆடுவார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்திருக்கிறது. இப்படி எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழ மற்றுமொரு காரணம், பிரஷாந்தின் தற்போதைய தோற்றம். முன்பைவிட கொஞ்சம் உடல் எடை கூடியிருப்பதால் அவரால் இவர்கள் இருவருக்கும் போட்டியாக ஆடமுடியுமா என்ற குழப்பத்திலேய் இருந்திருக்கிறது அப்பட யூனிட்.
ஆனால் அந்த பாடல் காட்சியை எடுக்க ஆரம்பித்ததும்தான் அப்பட யூனிட் ஆச்சர்யத்தில் அமைதியாகிவிட்டது என்கிறார்கள். பிரஷாந்த் ஆடிய ஆட்டம் ஒரு கட்டத்தில் விஜயைப் பின்னுக்கு தள்ளுவது போல இருந்ததாம். இதனால் பிரஷாந்தின் டான்ஸை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான விஜய் வழக்கம் போல் தனது புன்னகையை தவழ விட்டதைப் பற்றி தான் இப்போது அப்பட யூனிட்டில் பேச்சு அடிப்படுகிறது..
தனுஷின் புது பார்மூலா
பொங்கல் பந்தயத்தில் ’கேப்டன் மில்லரை’ ’அயலான்’ அப்படியே கொஞ்சம் ஓவர் டேக் செய்திருப்பதில் தனுஷூக்கு கொஞ்சம் வருத்தமாம். இதனால் தெலுங்கு டப்பிங்கை அங்கே ப்ரமோஷன் செய்ய ஒரு குழுவாக இங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். காரணம் தெலுங்கில் தனுஷூக்கு என்று மார்க்கெட் இருக்கிறது. மேலும் கேப்டன் மில்லர் அங்கே எடுப்படும் என கேப்டன் மில்லர் குழு நினைக்கிறதாம்.
ஹைதராபாத்திற்கு தனுஷ், அருண் மாதேஸ்வரன் உட்பட கேப்டன் மில்லர் குழு கிளம்பி போய்விட்டது. ஐந்து நாட்கள் வரை ப்ரமோஷன் வேலைகளைப் பார்க்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கிளம்பிவிட்டாராம். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். பெரும் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டு இருக்கும் இப்படம் பான் – இந்திய வெளியீடாக இருக்கும்.
தனுஷின் பரிந்துரையின்படி இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.
தமிழ்ப்படங்களை மட்டுமே நம்பியிராமல், ஹிந்தி, தெலுங்குப் படங்களிலும் நடிக்க தனுஷ் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். தனது மார்க்கெட்டை இந்தியா முழுவதிலும் விரிவடைய செய்வதுதான் தனுஷின் நோக்கமாம். அதேபோல் தமிழ், தெலுங்கு என மாறி மாறி அங்குள்ள இயக்குநர்களுடன் கைக்கோர்க்க தனுஷ் விரும்புகிறாராம்.