ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். நகர்ப்புற நக்சல் சிந்தனை, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலிகளைக்கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார். ‘காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம்’ என்ற பிரதமர் பேச்சு வருத்தமளிக்கிறது என பத்திரிகையாளர் மாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, ‘நேற்று ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை வியப்பளிக்கவில்லை. ஆனால், வருத்தமளிக்கிறது. அந்த உரை கண்டனத்திற்குரியது.
வியப்பளிக்கவில்லை என நான் சொல்லக் காரணம், பிரதமரோ முதல்வரோ பேரவைத் தலைவரோ அவர்கள் யாராயினும் அரசியல்வாதிகளே. அதுவும் தேர்தல் நேரத்தில் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாகவே ஆகிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கம் வாக்கு, வாக்கு மட்டுமே.
அந்தப் பேச்சை மக்கள் நம்பத் தொடங்கினால் அது மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும்; நல்லிணக்கத்தை பாதிக்கும். அது இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்செல்ல உதவாது என்பதால் கண்டனத்திற்குரியது. மதம், ஜாதி, மொழி, பிராந்தியம் என்ற எந்த அடிப்படையிலும் இந்திய சமூகத்தில் பிளவு ஏற்படுத்துகிறவர்கள், அவர்கள் யாராயினும், கண்டனத்திற்குரியவர்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எந்த இடத்திலும் தனியாரது செல்வம் கையகப்படுத்தப்பட்டு மறுவிநியோகம் செய்யப்படும் என்று சொல்லியிருக்கவில்லை. அது தகவல் பிழை. எனவே, மகளிரது தங்கத்தைப் பற்றிய கருத்து, மன்மோகன் சிங் கூறியதைப் பற்றிய கருத்து இரண்டும் தேவையற்றது. பிழையானது.
2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்தின் வளர்ச்சி விகிதம் அதே காலகட்டத்தில் இந்து சமூகம் கண்டிருக்கும் வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு. இந்தக் காலகட்டத்தில் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதப் புள்ளிகள் குறைந்தது. இந்து சமூகத்தின் வளர்ச்சி 3.1 சதவீதப் புள்ளிகள் குறைந்தது.
உலக அரங்கில் வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேற வேண்டுமானால் நிலையான அரசு தேவை. அதை இன்றைய சூழலில் மோடியால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களை ஆதரிக்கிறோம். வாக்களிக்கிறோம். ஆனால்,