1.இந்த விபத்துக்கு மிக முக்கியமான காரணம். கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலை மெயின் லைனிலிருந்து லூப் லைனுக்கு மாற்றிவிட்டது. அப்படி மாற்றியது யார்? ஆட்டோமடிக் சிக்னல் கோளாறு என்றால் அதை கவனிப்பதற்கு சரியான நெறிமுறை இல்லையா?
2.ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயவர்மா சின்கா செய்தியாளர்களிடம் பேசும்போது சிக்னலிங் பிரச்சினைகள் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். சிக்னலில் பிரச்சினை இருப்பதை விபத்துக்குப் பிறகுதான் அறிந்துக் கொள்ள முடியுமா? அதற்கு முன்பு நம்மால் கண்டுபிடிக்க இயலாதா? அதற்கு வசதிகள் இல்லையா?
3.இந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவில் இது போன்ற ஒரு விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி சம்பார்க் எக்ஸ்ப்ரஸ் ரயில் இது போன்று ஒரு விபத்தில் சிக்க வேண்டியது ஆனால் முன் கூட்டி நடவடிக்கை எடுத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தென் மேற்கு ரயில்வே மேனேஜர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த இண்டர்லாக்கிங் சிக்னல் முறை சரியாக வேலை செய்யவில்லை என்று. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்ன காரணமாக இருக்கும்?
4.இந்த இண்டர்லாக்கிங் எலக்ட்ரானிக் சிக்னல் முறை சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? அந்த முறையில் சிக்கல்கள் இருக்கிறதா? அது என்ன இண்டர்லாக்கிங் சிஸ்டம்?
5.விபத்துக்கான மூல காரணத்தை அறிந்துக் கொண்டோம். அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்துவிட்டோம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுக்கிறார். ஆனால் முழு விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இண்டர்லாக்கிங் சிஸ்டத்தை மாற்றியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் சதி என்று கூறலாமா? அதனை நோக்கிதான் போகிறதா?
6.சிபிஐ விசாரணை செய்யும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். ரயில் விபத்துக்கு சிபிஐ விசாரணை தேவையா?
7.’கவச்’ என்ற தொழில் நுட்பம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ரயில் மோதல்களை அது தடுக்கும் என்று கூறப்படுகிறது.ஆனால் மிகக் குறைந்த ரயில்களிலேயே அந்த தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. என்ன காரணம்?