No menu items!

இப்போதைக்கு NO அரசியல் – ஒதுங்கிய விஷால்

இப்போதைக்கு NO அரசியல் – ஒதுங்கிய விஷால்

அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று நடிகர் விஷால் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

விஜய்க்கு முன்பே அரசியலில் கால் வைத்தவர் விஷால். சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அப்போது அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இருந்தபோதிலும் சமூகம் சார்ந்த சில கருத்துகளை அவர் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். நடிகர் சங்கத்திலும் அவர் ஆக்டிவாக இருந்தார்.

இதனால் விஷால் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டது. அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பை இன்று காலை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புடையீர் வணக்கம்,

சமூகத்தில் எனக்கு இந்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் சுருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ’இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு’ என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று ” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என் கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் தன இயக்கத்தின் மூலம் தான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இப்போதைக்கு அரசியல் கட்சியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று நடிகர் விஷால் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...