அஜித்தின் 62-வது படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாகதான் முதலில் முடிவாகி இருந்தது.
ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில், க்ளைமாக்ஸ்தான் ஹைலைட். அதை ஷூட் செய்ய அதிக நாட்கள் தேவைப்பட்டது. மேலும் அதை இன்னும் சிறப்பாக மாற்ற திரைக்கதைக்கு நேரம் அதிக ஒதுக்க வேண்டியிருந்ததால் அப்படம் விக்னேஷ் சிவனிடமிருந்து கை நழுவிப் போனது.
ஒரு வழியாக ’அஜித்62’ படம் இப்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற பெயரில் எடுக்கப்படவுள்ளது.
இதில் யார் கதாநாயகி என்ற பேச்சு எழுந்தபோது, நயன்தாராவையே நடிக்க வைக்கலாம் என்று முதலில் யோசித்து இருக்கிறார்கள். ஆனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராக இருந்த படம் என்பதால், நயன்தாராவுக்கு மனவருத்தம் இருக்கிறது. அதனால் அவரை நடிக்கக்கூப்பிட்டால் அது சரியாக இருக்காது. அவரை காயப்படுத்த வேண்டாம் என அஜித் கூறியதாக தெரிகிறது.
இதன் பிறகே இப்படத்திற்கான கதாநாயகியைத் தேடும் வேட்டையில் மகிழ்திருமேனி குழு களமிறங்கியது. காத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய், கங்கனா ரனவத் என பல பெயர்கள் அடிப்பட்டாலும், இப்பொழுது த்ரிஷாவையே கமிட் செய்யலாம் என பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
’ஜி’ [2005], ‘கிரீடம்’ [2007], ‘மங்காத்தா’ [2011], ‘என்னை அறிந்தால்’ [2015] என நான்குப் படங்களில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவும் ‘விடாமுயற்சி’ பட த்தில் நடிப்பது பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை. படத்தை தயாரிக்கும் லைகாதான் இதுபற்றி சொல்லவேண்டும் என்று ஒரேவரியில் கூறி இந்த விஷயத்தில் இருந்து நழுவி இருக்கிறார்.