No menu items!

திடீர் அம்மாவாகிய நயன்தாரா!

திடீர் அம்மாவாகிய நயன்தாரா!

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர் என்பது பொழுதுபோக்கு ஊடகங்களில் உலா வந்த வரலாற்று செய்தி.

சென்னை ஃப்ளாட்டில் லிவ்விங் டுகெதர் ஆகவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் – மனைவியாக வாழ்ந்தனர் என்பது அதன் பின் வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்.

’புலி வருது.. புலி வருது..’ என போக்கு காட்டிய இவர்களது திருமணம் ஒரு வழியாக ஜூன் 9-ம் தேதி 2022 அன்று உண்மையாகவே நடைபெற்றது. இதனால் இவர்களது திருமணம் ஒரு கொண்டாட்டமாக ஊடகங்களால் பார்க்கப்பட்டது.

தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட அவர்கள் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ‘க்ளப் ஹவுஸ்’ நட்சத்திர ஹோட்டலில்தான் சந்தித்தனர். இதற்கு பின்னணி ரகசியம் ஒன்றும் இருந்தது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதல் முறையாக சந்தித்த இடம் இந்த நட்சத்திர ஹோட்டல்தான். அந்த சென்டிமெண்ட்டை கூட விக்னேஷ் சிவன் விட்டு வைக்கவில்லை.

திருமணம் முடிந்த கையோடு, தேனிலவுக்கு சென்றவர்கள் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் ஜோடியாக நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக வேறு வழியில்லாமல் தேனிலவை ’பாதியிலேயே’ முடித்து கொண்டு சென்னை திரும்பினர்.

ஜூன் 9-ம் தேதி கல்யாணம். ஆனால் அக்டோபர் 9-ம் தேதி இரட்டை குழந்தைகளுக்கு அப்பா – அம்மா ஆகிவிட்டோம் என்று விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டார்.

அவ்வளவுதான். வாழ்த்து தெரிவித்தவர்களை விட, அது எப்படி இப்படி? நான்கு மாதத்திலேயே…என்று ஆராய்ச்சியில் இறங்கிய பொழுதுபோக்கு விஞ்ஞானிகள்தான் மிக அதிகம்.

கர்ப்பமாக இருந்தால் ஷாரூக்கான் படத்தில் எப்படி நடித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர்களும் பலர்.

இந்த யூகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நயன் – விக்கி ஜோடி. இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டது இப்போது தெரிய வந்திருக்கிறது.

ஏன் இந்த திடீர் முடிவு?

திருமணம் ஆனால் எப்பேர்பட்ட கனவுக்கன்னியாக இருந்தாலும் மார்க்கெட் காலியாகி விடும் என்பது சினிமா ட்ரெண்ட்.

இதை கணக்கில் வைத்து கொண்டே நயன் – விக்கி ஜோடி முடிந்தவரை தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்ட வந்தனர்.

மேற்கூறிய காரணத்தைத் தவிர்த்து மற்றொரு விஷயமும் பின்னணியில் இருந்தது. தான் பிரபலமானதைப் போலவே, விக்கியும் தனக்கென அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்பதில் நயன்தாரா பிடிவாதமாக இருந்தார் என்கிறார்கள்.

மற்றவர்களை நம்புவதை விட தானே களத்தில் இறங்கி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு மூன்று படங்கள் நடிப்பது அதன் மூலம் ஒரு விக்கிக்கு ஒரு மார்க்கெட் உருவாக்குவது என்று திட்டமிட்டதாகவும் கூறுகிறார்கள்.

இதனால்தான் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவுடன் கைக்கோர்த்தார் நயன். இதற்கு கைமேல் பலன். இப்போது அஜித்குமாரின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் கையில்.

அடுத்து, வயது நாற்பதை நெருங்குவதால் ஒரு சின்ன தயக்கமும் இவர்கள் இருவருக்கும் இருந்திருக்கிறது.

இந்த இரண்டு விஷயங்களைத் தாண்டி திருமணத்திற்கு பின்பு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது என்பது நயன் எடுத்த முடிவு.

ரவுடி பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து படம் தயாரிப்பது. படங்கள் கமிட்டாகாத நாட்களில் அதற்கான வேலைகளிலும் நயன் ஈடுப்படுவது என்பதை ஏற்கனவே இவர்கள் இருவரும் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்கிறது விக்கியின் டீம்.

இதனாலேயே உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக ஒரு பேச்சு அவர்களது திருமணத்தின் போதே அடிப்பட்டது. அது இப்போது நிரூபணமாகி இருக்கிறது.

ஜனவரி 2022 முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்று கொள்வதில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. அதனால் கடந்த ஆண்டு நவம்பர் ஜனவரியிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுகொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது இந்த நட்சத்திர தம்பதி. அல்லது வெளிநாட்டில் இருக்கும் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.

சினிமா கேரியர் சார்ந்த காரணங்கள் சில இருந்தாலும் உண்மையான காரணம் ஒன்று இருக்கிறதாம்.

அது நயன்தாராவால் மற்ற பெண்களைப் போல் குழந்தை பெற்றுகொள்ள முடியாது.

இந்த பிரச்சினை சினிமா மீது கொண்ட காதலால் வந்தது.

சினிமாவில் மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமென்றால் அசத்தும் அழகு முக்கியம். கண்களைக் கவரும் உடல்வாக்கு அவசியம்.

இந்த விஷயத்தில்தான் தெரிந்தே சிக்கிக்கொண்டார் நயன்தாரா. தனது வயிற்றை கச்சிதமாக வைத்து கொள்ள இயக்குனர் சிறுத்தை சிவா செய்து கொண்டதைப் போலவே சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதனால் அவரால் கருத்தரிப்பது என்பது கொஞ்சம் முடியாத காரியம்.

இது விக்னேஷ் சிவனுக்கும் தெரியும். குழந்தைப் பெற்று கொள்ள முடியாது என்று தெரிந்தே விக்கி நயனை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

‘ஐ லவ் யூ 2’ என்று ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட த்தில் பாட்டெழுதிய விக்னேஷ் சிவன் இப்போது நயனையும், இரண்டு பையன்களையும் பார்த்து ‘ஐ லவ் யூ 3’ என்று முணுமுணுக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...