அட்லீயின் முதல் படம் ‘ராஜா ராணி’. இந்தப் பட த்தில் ஆர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், நயன்தாராவுக்கு அட்லீயிடம் நல்ல நட்பு இருந்தது.
உண்மையில், ’ராஜா ராணி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதாகதான் முடிவாகி இருந்தது. விஜய் டிவியின் நிர்வாகி மகேந்திரன் இப்படத்தயாரிப்பில் இருந்ததால், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயனை கமிட் செய்திருந்தார்கள்.
ஆனால் இடையில் ஏற்பட்ட சில குழப்பங்களால், ஆர்யாவை அப்படத்தில் நடிக்க வைக்கும் வேலைகள் தொடங்கின. இந்த ப்ராஜெட்டுக்குள் வந்த ஆர்யாவும் எனக்கு ஜோடியாக நயன் தாராவை நடிக்க வைக்கலாம். அவரை இப்படத்தில் கமிட் செய்ய வைப்பது என் பொறுப்பு என்று சொன்னார். அவ்வளவுதான் சிவகார்த்திகேயனை தூக்கிவிட்டு ஆர்யாவை கமிட் செய்துவிட்டார்கள். ஆர்யா சொன்னது போலவே நயன்தாரா கால்ஷீட்டையும் வாங்கி கொடுத்துவிட்டார். படம் ஹிட்.
இந்த பின்னணியினால்தான் பாலிவுட்டுக்கு போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த நயன்தாரா அட்லீ பாலிவுட்டுக்குள் நுழையும் முதல் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஷாரூக்கானுக்கு ஜோடி என்பதால், நயன்தாரா உற்சாகமாக ‘ஜவான்’ படத்தில் கமிட்டானார்.
படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றாலும், நயன்தாரா வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது அட்லீ மீது ஏக வருத்தமாம். நயன்தாராவை வைத்து ஷூட் செய்த காட்சிகளில் பல காட்சிகளை, எடிட்டிங்கில் அட்லீ தூங்கிவிட்டாராம். இதனால் திபீகா படுகோன் இடம்பெற்ற காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போன்று ஆகிவிட்டது.
திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.
இதை முன்பே தெரிந்து கொண்டதால்தான் நயன்தாரா ’ஜவான்’ ப்ரமோஷன்களுக்கு பெரிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். மும்பையில் நடைபெற்ற ‘ஜவான்’ வெற்றி விழாவிலும், நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
இந்த வருத்தத்தினால்தான் ‘ஜவான்’ பெரிய ஹிட்டாக அமைந்த பிறகும் கூட, பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க படங்களை நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் இதுபோல் அடுத்தப்படங்களில் நடந்துவிடக்கூடாது என்று நயன்தாரா யோசிக்கிறாராம்.
இந்த பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், நயன்தாராவுக்கு இப்போது 40 வயது. இதனால் பாலிவுட்டில் அவருக்கேற்ற மவுசை காட்டுவகையில் கதாபாத்திரங்கள் அமையுமா என்பதும் கேள்விக்குறிதான். அதனால் தென்னிந்திய சினிமாவில் இப்போது இருக்கும் மார்க்கெட்டை தக்கவைத்து கொள்வதே புத்திசாலித்தனம் என நயன்தாரா யோசிப்பதாகவும் கூறுகிறார்கள்.