No menu items!

National Crush – த்ருப்தி டிம்ரி!

National Crush – த்ருப்தி டிம்ரி!

சந்தேகமே வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இன்ஸ்டாக்ராம் ஃபீட்களில் இவரது வீடியோக்கள்தான் ஆக்ரமித்து இருக்கும்.

இன்றைக்கு இன்ஸ்டாக்ராமில் மூழ்கிக் கிடக்கும் இளையதலைமுறையினர், தங்களது ஸ்மார்ட்ஃபோனில் மேலே கீழே தட்டிவிடும் ரீல்களில் இவரது வீடியோக்கள் இல்லாமல் இருக்காது என்று அடித்துச் சொல்லுமளவிற்கு இளசுகளைக் கவர்ந்திழுத்து இருக்கிறார் த்ருப்தி டிம்ரி.

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் ‘அனிமல்’ படத்தில் இவரது நடிப்பையும், அழகையும் பார்த்து கிறங்கிப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

’அனிமல்’ படத்தில் இவரது ஸோயா கதாபாத்திரத்தைப் பார்த்த ரசிகர்கள், த்ருப்தி டிம்ரியை ‘நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா’ என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ’அனிமல்’ படத்தில் இடம்பெற்ற இவரது வைரல் காட்சிதான் இந்த கொண்டாட்டங்களுக்கும் காரணம்.

ஹை வோல்டேஜ் கரண்ட்டை போல், லட்சக்கணக்கான இதயங்களில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த த்ருப்தி டிம்ரி யார்?

இவர் உத்தரக்காண்ட்டின் ருத்ராப்ராயக்கில் பிறந்த மூக்குத்தி அழகி. பிப்ரவரி 23, 1995-ல் பிறந்தவர். இப்போது த்ருப்திக்கு 29 வயது. பள்ளிப்படிப்பை உத்தரக்காண்டில் முடித்தவர், பட்டப்படிப்பில் சோஷியாலஜி படிப்பதற்காக டெல்லிக்குக் கிளம்பினார். பட்டப்படிப்பை முடித்ததும், ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு புனேவுக்கு சென்றார். ஃப்லிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் நடிப்புப்பயிற்சி பெற்றார்.

சினிமாவில் அதிர்வை உருவாக்க, சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், புத்திசாலித்தனமாக விளம்பரத் துறை பக்கம் கவனத்தைத் திருப்பினார். வசீகரமானவர்களை வளைத்துப் போடும் மாடலிங் துறை, இவரையும் இம்மியளவுக் கூட யோசிக்காமல் இழுத்துக்கொண்டது.

அம்மாக்களின் அழகைக் கொண்டாடும் சந்தூர் சோப் விளம்பரத்தில் த்ருப்தி டிம்ரி நடித்தார். யார் இந்த அசத்தல் அம்மா என்று வாயைப் பிளந்தது மாடலிங் உலகம். ஆனால் அதேநேரத்தில் பாலிவுட்டும் இவரை அடையாளம் கண்டுக்கொண்டது.

2017-ல் பாலிவுட் ஸ்டூடியோவில் நடிகையாக கேமரா முன் நின்றார். அது ஒரு காமெடி படம். ’போஸ்டர் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியான படத்தில் சன்னி தியோல், பாபி தியோல் நடித்திருந்தார்கள். இந்தப்படம் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. இதனால் ஸ்ரீதேவி நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த ‘மாம்’ படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடித்தார். இந்த வாய்ப்புகள் எதுவுமே த்ருப்திக்கு மனதிருப்தியைக் கொடுக்கவில்லை.

அடுத்து 2018-ல் ஒரு வழியாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு. ‘லைலா மஜ்னு’ படத்தின் நாயகி ஆனார். இந்த வாய்ப்பும் கூட இவருக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கதாநாயகிக்கான ஆடிஷனில் இவரை முதலில் வேண்டாமென சொல்லிவிட்டார்கள். ஆனால் த்ருப்தி இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் க்ரஷ் ஆக வேண்டுமென்ற விதியின் விளையாட்டாலோ என்னவோ, கதாநாயகியாக ஒப்பந்தமானார். அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், அநேகமாக த்ருப்தி டிம்ரி சினிமாவை விட்டு விலகியிருப்பார்.

2020-ல். விராட் ஹோலியின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘புல்புல்’ படத்தில் த்ருப்தி டிம்ரி அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மட்டுமில்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்துவதில் காட்டிய நுணுக்கமும் இவரது பெயரைப் போலவே ரசிகர்களுக்கு பெரும் திருப்தியாக அமைந்தது.

யார் இந்த புது வரவு என்று ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே பிரபல இணையதளமான ரீடிஃப் இவரை ’2020-ம் ஆண்டின் சிறந்த பாலிவுட் நடிகைகள்’ பட்டியலை வெளியிட்டது. த்ருப்திக்கு இதில் 8-வது இடம்.

அடுத்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட ’2020-ம் ஆண்டின் மிக அதிக விரும்பப்படும் 50 நடிகைகள்’ பட்டியலிலும் த்ருப்தி டிம்ரி இடம்பிடித்தார். இதில் 20-வது நடிகையாக இவரை பட்டியலிட்டு இருந்தார்கள்.

இதேவேகத்தில் அவர் நடித்த வெப் ஒரிஜினலுக்கு ஃப்லிம்ஃபேர் ஒடிடி விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. 2021-ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ‘போர்ப்ஸ் ஏஷியாவின் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்கள் பட்டியலில் த்ருப்தி டிம்ரிக்கும் ஒரு இடம் கொடுத்து போர்ப்ஸ் கெளரவித்தது.

இப்படி அந்தப் பட்டியல், இந்தப்பட்டியல் என த்ருப்திக்கு ஏதாவது ஒரு இடம் கிடைத்தாலும், சரியான கதாபாத்திரங்கள் அமையவில்லை. ஆனால் அவருடைய இத்தனை வருட காத்திருப்புக்கு ஏற்றவகையில் அமைந்திருந்தது ‘அனிமல்’ பட கதாபாத்திரமும், அந்த நெருக்கமான காட்சியும்.

தனது முதல் க்ரஷ் ரன்பீர் கபூர்தான் என்று பேட்டிகளில் கூறிய த்ருப்தி டிம்ரி, அதே ரன்பீருடன் ஆடையின்றி தோன்றிய அந்த ஒரே காட்சி அவரை இந்தியா முழுவதிலும் பிரபலமாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் த்ருப்தியை நேஷனல் க்ரஷ் ஆக கொண்டாட வைத்திருக்கிறது. ‘அனிமல்’ வெளியான சில நாட்களிலேயே அவரது இன்ஸ்டாக்ராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை கட்டுக்கடாங்கமல் பல லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.

நேஷனல் க்ரஷ் ஆகியிருக்கும் த்ருப்தி டிம்ரி இப்போது விராட் கோலியின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் காமேஷ் ஷர்மாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.

இந்த காமேஷ் ஷர்மா தனது சகோதரி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து க்ளீன் ஸ்லேட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 2013-ல் தொடங்கியிருந்தார். இந்த நிறுவனம்தான் த்ருப்தி டிம்ரி நடித்த புல் புல் திரைப்படத்தை தயாரித்தது என்பது கூடுதல் தகவல்.

‘புல் புல்’ பட ஷூட்டிங்கின் போது ஸ்பாட்டில் சந்தித்த த்ருப்திக்கு காமேஷ் மேல் ஒரு காதல் உணர்வு. அதேபோல் காமேஷூக்கு த்ருப்தி மேல் காதல் கலந்தது. இவர்களது காதலை 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதுதான் ஊருக்கு சொன்னார்கள்.

ஆனால் இடையில் என்ன நடந்த து என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையெல்லாம் தேடிப்பிடித்து சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி விட்டார்கள். அதேபோல் இருவரும் ஒருவருக்கொருவர் அன்ஃபாலோ செய்தும் விட்டார்கள்.

‘ஊரே உன்னைப் பத்திதான் பேசும். ஆனா உனக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செய்’ என்று ஒரு கமெண்ட்டையும் தட்டிவிட்டார் த்ருப்தி டிம்ரி.

அந்த சந்தோஷம் ஒரு நடிகையாக பிரபலமடைவது. அந்த சந்தோஷத்தை இன்று த்ருப்தி டிம்ரி அடைந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...