No menu items!

என் உலக அழகியே – காதல் உச்சத்தில் நயன் – விக்னேஷ் சிவன்

என் உலக அழகியே – காதல் உச்சத்தில் நயன் – விக்னேஷ் சிவன்

காதலின் உச்சத்தில் இருக்கிறது நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி

2015ல் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பழக்கம் ஒருவரை ஒருவர் விட முடியாத அளவு காதலாகி, திருமணத்துக்கு முன்பே ஒரே வீட்டில் வசிக்கும் அளவு நெருக்கமாகி இந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி திருமணமும் நடந்தது.

திருமணம் முடிந்ததும் கேரளாவில் நயனின் பெற்றோரை சந்தித்துவிட்டு முதல் ஹனிமூனுக்கு தாய்லாந்து கிளம்பினார்கள். அங்கே சில நாட்கள் தேன் நிலவை கொண்டாடிவிட்டு இந்தியா திரும்பினார்கள். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிஸியாக நயன் ஷூட்டிங்கில் பிஸியானார்.

இப்போது மீண்டும் ஸ்பெயினுக்கு இரண்டாம் தேனிலவுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதியும் படங்கள் வைரலாகி இளசுகளின் தூக்கத்தைக் கெடுக்கின்றன.

ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ இது போன்ற பல வரிகள் நயனைப் புகழ்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார்.

உலகின் சிறந்த காதல் ஜோடி என்ற பட்டம் விரைவில் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கிடைக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...