No menu items!

மணிரத்னம் – கமல் பட ஹீரோயின் – நீண்டநாள் ஆசை நிறைவேறுமா?

மணிரத்னம் – கமல் பட ஹீரோயின் – நீண்டநாள் ஆசை நிறைவேறுமா?

விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்த ‘லியோ’ ‘வெளியாக வேண்டுமென்பதற்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும் தங்களது படங்களைப் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தன. ஒரு வழியாக லியோ’ பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஓய ஆரம்பித்திருக்கிறது.

இதனால் அடுத்தது என்ன என்ற தகவல் வேட்டைகளில் ஊடகங்களும், நெட்டிசன்களும் மும்முரம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நவம்பர் 7-ம் தேதி மணிரத்னமும், நானும் இணையவிருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது என்று அறிவித்துவிட்டார்.

கமலின் இந்த அறிவிப்பினால் இப்போது பேசுப்பொருளாகி இருக்கிறது கமல் – மணி ரத்னம் ஆகிய இருவரும் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவிருக்கும் படம். இது கமல் நடிக்கவிருக்கும் 234-வது படம். இதனால் இப்படத்திற்கு KH234 என்று தற்காலிமான பெயரை வைத்திருக்கிறார்கள்.

கமலுக்கு ஜோடி யார் என்பதே இன்டர்நெட்டை கலக்கும் இப்போதைய பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. இந்தப் படம் குறித்து மணிரத்னம் கூறியப் போதே, மணி ரத்னத்தின் ஃபேவரிட் ஐஸ்வர்யா ராய்தான் ஹீரோயின் என்று ஒரு யூகம் கிளம்பியது. சில நாட்களில் த்ரிஷாதான் கமலுக்கு ஜோடி என்று பேச்சு அடிப்பட ஆரம்பித்தது.

ஆனால் இப்போது கமலுக்கு ஜோடி நயன்தாராதான். அதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது என்றும் கூறுகிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. அநேகமாக நவம்பர் 7-ம் தேதி மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பிலிருந்து இப்படம் குறித்த அறிவிப்பும், நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகலாம்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மணி ரத்னம் ராவணன் படமெடுத்த போதே, அதில் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். தமிழில் விக்ரமின் மற்றும் ஹிந்தியில் அபிஷேக் பச்சனின் தங்கையாக நயனைதன் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினாராம். ஆனால் அப்போது அது நிறைவேறாமல் போக, ப்ரியா மணி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அதனால் இந்த முறை எப்படியாவது நயன்தாராவை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறுகிறார்கள்.


ரஜினியுடன் மோதும் ப்ரித்விராஜ்!

‘லியோ’ வெளியான நாளில் இருந்து நாலைந்து நாள் காத்திருந்து மக்களுடைய ரியாக்‌ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்வேன். இதில் பண்ணிய தவறை இனி பண்ண மாட்டேன். அடுத்து ரஜினி 171 பட வேலைகள் இருக்கின்றன. அடுத்த வருடம் ஏப்ரலில் ஷூட்டிங்கை தொடங்க வேண்டும். அதனால் தலைவர் பட வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

அவர் சொன்ன மாதிரியே இப்போது, ரஜினி படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

இந்த முறை ரஜினியுடன் மோதும் வில்லன் யார் என்று லோகேஷ் கனகராஜ் முதலிலேயே முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

லோகேஷ் கமலுடன் இணைந்த ‘விக்ரம்’ படத்தில் ப்ரித்வி ராஜைதான் முதலில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தாராம். அதாவது சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ப்ரித்வி ராஜ் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அப்போது ப்ரித்வி ராஜூக்கு வேறு பட ஷூட்டிங் இருந்ததால் சொன்ன மாதிரி நடிக்க முடியவில்லை. ஆனால் அதற்குள் சூர்யா ஓகே சொன்னதால், ப்ரித்வி ராஜ் நடிக்க முடியாமலேயே போனது.

அதனால் இந்த முறை ரஜினி171-ல் ப்ரித்வி ராஜை நடிக்க வைக்க லோகேஷ் தரப்பு விரும்புகிறதாம். இதனால் ரஜினியுடன் ப்ரித்வி ராஜ் மோதுவது ஏறக்குறைய முடிவாகிவிட்டதாம்.


தெளிவான ரூட்டில் கார்த்தி!

இங்கே யார் கழுகு யார் காகம் என்ற பஞ்சாயத்து ரஜினி, விஜய் ரசிகர்களிடையே இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இதனால் ரஜினி – விஜய் – அஜித் இவர்கள் மூவருக்கும் இடையில் யாருடைய படம் அதிக வசூலாகி இருக்கிறது என்ற போட்டியை நெட்டிசன்கள் உருவாக்கிவிட்டார்கள்.

ஆனால் இந்த மூவருக்குப் பின்னால் யார் என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

ரஜினி, அஜித் விஜய் அடுத்து விக்ரம், சூர்யா, என்று சொல்லப்பட்டாலும் இவர்கள் இருவருக்குமே 100 கோடிக்கு மேல் வசூலாகும் ஒரு கமர்ஷியல் ஹிட் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான படங்கள் இவர்கள் இருவருக்கும் அமையவும் இல்லை. இவர்கள் ஒப்புக்கொண்ட படங்கள் வசூலில் அந்த இலக்கை அடையவும் இல்லை.

ஆனால் கார்த்தி மிகத்தெளிவாக அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்த சந்தோஷத்தில் இருக்கும் கார்த்தி, அடுத்தடுத்து தனது படங்களை உறுதி செய்திருக்கிறார்.

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜப்பான்’ கார்த்தியின் 25-வது படம். இதையடுத்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹிட்டடித்த ’சர்தார் 2’ படத்திலும், இதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களையும் பெரும் பட்ஜெட்டில் எடுத்து, பான் – இந்தியப் படமாக வெளியிடும் திட்டத்தோடு இப்பொழுதே வேலைகளை ஆரம்பித்து விட்டார்களாம். 2025-ல் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக முன்னிறுத்து திட்டத்தோடு கார்த்தி படங்களைப் பார்த்து பார்த்து ஒப்புக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...