ஐசியூ-வில் அட்மிட் ஆகும் காட்சியிலும் போது கூட பக்காவாக மேக்கப் போட்டு கொண்டு நடிக்கும் நடிகையும் இருக்கிறார் என்று நயன்தாராவை மறைமுகமாக கிண்டலடித்த மாளவிகா மோகனனின் ஃப்ளாஷ் பேக் கொஞ்சம் தீவிரமானது.
மும்பை வில்சன் கல்லூரியில் மாளவிகா மோகனன் படித்த போது, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ‘சப்பல் மாருங்கி’ என்ற இயக்கத்தில் மும்முரமாக இருந்திருக்கிறார்.
மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு சிறுமியும், பெண்களும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெண்களைப் பார்த்தாலே ‘ஐயிட்டம்’ என்று அவர்களை கிண்டலடிப்பது இப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மாதிரியான கமெண்ட்களுக்கெல்லாம் பெண்கள் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் போய்விடுகிறார்கள்.
பேருந்திலோ அல்லது நெருக்கடியான சூழலிலோ ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொடும் போது, பிரச்சினையைக் கருதி அவள் அமைதியாக இருந்தால் அவளுக்கு சம்மதம் என்று நினைக்கிறார்கள். ஒரு ஆண் தொட்ட பிறகு ஒன்று செய்யவில்லை மேலும் மேலும் தொடலாம் என்று அவர்களே முடிவுசெய்துவிடுகிறார்கள். இது சில சமயங்களில் கற்பழிப்பு, ஆடைகளை களைவது வரை போய்விடுகிறது.
இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு மற்றொருவர் செய்வது செளகரியமாக இல்லை என்றால் அவர்களிடம் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று தைரியமாக சொல்லவேண்டும்.
நான் நடிக்க வந்தப்பிறகு இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது.
இந்த விஷயத்தில் பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் இதை படமாக எடுத்தால், நான் அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறேன்’ என்கிறார் மாளவிகா மோகனன்.