No menu items!

வெப் சிரீஸை காப்பியடித்த லோகேஷ் கனகராஜ்?

வெப் சிரீஸை காப்பியடித்த லோகேஷ் கனகராஜ்?

கமல் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘விக்ரம்’ அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இன்று இளம் ஹீரோக்களை விட பிஸியாகி இருக்கிறார் கமல் ஹாஸன். விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் காட்டிய ஆக்‌ஷன் அந்தளவிற்கு இருந்தது.

லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால், இந்தளவிற்கு பெயர் வாங்கிய ‘விக்ரம்’ படத்தின் கதை ஒரு வெப் சிரீஸின் ஒரு குறிப்பிட்ட எபிசோட்டிலிருந்து அப்படியே காப்பியடிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான்.

‘Better Call Saul’ என்ற வெப் சிரீஸ் 2015-ல் வெளியானது. இந்த வெப் சிரீஸில் இடம்பெற்ற ஒரு எபிசோட்டில், ஒரு நடுத்தர வயது எக்ஸ் போலீஸ் இருப்பார். அவருடைய மகனும் போலீஸ்தான். ஊழலில் ஊறிப்போன போலீஸ் அதிகாரிகளுக்கு ட்ரக் கேங்களுடனும் தொடர்பு இருக்கிறது. இந்த சூழலில் மகன் நேர்மையாக இருக்க போராடுகிறார். இதனால் போலீஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மகனை கொன்றுவிடுகிறார்கள்.

இதனால் அப்பாவுக்கு வாழ்க்கையே நரகமாகி போய்விடுகிறது. குடிக்க ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்து மருமகளுக்கு அவர் மீது வெறுப்பாக இருக்கிறது.

சரி இவரை ஏன் விட்டுவைக்கவேண்டுமென, அப்பாவையும் கொல்ல போலீஸ் திட்டமிடுகிறது. அவரை தூக்கி கொண்டு வருகிறார்கள். அப்போதுதான் அப்பா குடிக்காரர் இல்லை. அப்படி நடித்து அவர்களை தன் இடத்திற்கு வரவைத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. தவறான பாதையில் போய் கொண்டிருக்கும் அந்த போலீஸ் அதிகாரிகளை கொன்றுவிடுகிறார் அப்பா.

அந்த சம்பவத்திற்கு பிறகு மாமனார் நல்லவர் என்பது மருமகளுக்கு தெரிய வருகிறது. தனது பேரக்குழந்தை பாதுகாப்பாக வைத்திருப்பதே தாத்தாவின் மிஷன் ஆக மாறிவிடுகிறது.

இப்படியாக அந்த வெப் சிரீஸ் விறுவிறுப்பாக இருக்கிறது.

இந்த கதையின் தாக்கம் ‘விக்ரம்’ படத்திலும் இருப்பதை பார்த்தாலே புரியும்.

அடடா லோகேஷ் கனகராஜ் இப்படி பண்ணிவிட்டாரே. இப்போ லியோ கதையை எங்கிருந்து எடுத்திருப்பார் என இணையத்தில் பெரும் விவாதமே போய் கொண்டிருக்கிறது.


தமன்னாவுக்கு காதலரை விட 2 மடங்கு சொத்து!

சினிமா நட்சத்திரங்களுக்கு இருக்கும் மவுசை போலவே, அவர்களுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பும் எகிறிக்கொண்டேதான் போகிறது. இதனால் யார் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை அவ்வபோது பிஸினெஸ் மீடியாவில் அலசி ஆராய்வது வழக்கம்.

அப்படிதான் இப்போது தமன்னா – விஜய் வர்மா விஷயத்திலும் நடந்திருக்கிறது.

விஜய் வர்மா, ஹைதராபாதைச் சேர்ந்தவர். நானி நடித்த ‘நேனு லோக்கல்’ படத்தில் நடித்தவர் பிறகு ஹிந்திப்படங்களில் நடிக்க மும்பைக்கு கிளம்பினார்.

இப்போது ஹிந்திப் படங்கள், வெப் சிரீஸ்களில் நடித்துவரும் விஜய் வர்மாவுக்கு 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

தமன்னா தனது 17 வயதிலேயே நடிக்க வந்தவர். தொடர்ந்து ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்திருக்கும் தமன்னா தனது நடிப்பின் மூலம் சேர்த்த சொத்தின் மதிப்பு 120 கோடிகளாம்.

இந்த வகையில் பார்த்தால் காதலர் விஜய் வர்மாவின் சொத்து மதிப்பை விட தமன்னாவுக்கு 6 மடங்கு அதிக சொத்து இருக்கிறதாம்.


2023-ல் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் & வெப் சிரீஸ்கள்

சினிமா பற்றிய தகவல்களை அள்ளிக்கொடுக்கும் புகழ்பெற்ற ஐஎம்டிபி [IMDb] இணையதளம், 2023-ம் ஆண்டில் இதுவரையில் வெளியான இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களில் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை பற்றிய பட்டியலை [Most Popular movies and web series] வெளியிட்டு இருக்கிறது.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இதுவரையில் வெளிவந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஷாரூக்கான் – திபீகா படுகோன் நடித்திருக்கும் ‘பதான்’. இதற்கு அடுத்து சல்மான் கான் நடித்திருக்கும் ’கிஸி கா பாய் கிஸி க்கா ஜான்’ [‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’] படம் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘த கேரளா ஸ்டோரி’ [‘The Kerala Story’] இப்பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது.

இந்த மூன்றுப்படங்களை அடுத்து, நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களைப் பெற்றிருக்கும் படங்கள் முறையே ‘து ஜூதி மேய்ன் மக்கார்’ [‘Tu Jhoothi Main Makkaar’], ராஷ்மிகா மந்தானா நடித்த ‘மிஷன் மஞ்சு’ [‘Mission Majnu’], ‘சோர் நிஹல் கே பாகா’ [‘Chor Nikal Ke Bhaga’] ஆகிய படங்கள் பிடித்திருக்கின்றன.
இவற்றுக்கு அடுத்து ’ப்ளடி டாடி’ [Bloody Daddy’], ’சிர்ஃப் ஏக் பன்ந்தா காஃபி ஹை’ [Sirf Ek Bandaa Kaafi Hai’] ஆகிய படங்களும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களை விஜயின் ’வாரிசு’ மற்றும் ’பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும்’ பெற்றிருக்கின்றன.

திரையரங்குகளில் வெளியான படங்களுடன், ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆன படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப் சிரீஸ்களை பொறுத்தவரை முதலிடத்தை நம்மூர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘பர்ஸி’ [Farzi] பிடித்திருக்கிறது.

ஏடாக்கூடமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்த ‘த நைட் மேனேஜர்’ [‘The Night Manager’] மற்றும் ‘ரானா நாயுடு’ [‘Rana Naidu’ ] வெப் சிரீஸ்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக இப்பட்டியலில் வந்திருக்கின்றன.
’ஜூப்ளி’ [‘Jubilee’], ‘அசுர்’ – வெல்கம் டு டார்க் சைட் [Asur: Welcome To Your Dark Side’], தமன்னாவின் காதலர் என பரபரப்பாகி இருக்கும் விஜய் வர்மா நடித்திருக்கும் ’தஹாத்’ [‘Dahaad’], ’சாஸ் பஹூ அவுர் ஃப்ளெமிங்கோ’ [Saas, Bahu Aur Flamingo’], ‘டாஸா கபார்’ [Taaza Khabar’], ‘தாஜ் – டிவைடட் பை ப்ளட்’ [‘Taj: Divided By Blood’] மற்றும் ‘ராக்கெட் பாய்ஸ்’ [‘Rocket Boys’] ஆகியன ஐந்தாவது இடத்திலிருந்து பத்தாவது இடம் வரை வரிசையாக இடம்பெற்றிருக்கின்றன.

வெப் சிரீஸ்களை பொறுத்தவரையில் எந்த தமிழ் வெப் சிரீஸூம் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...