ராம்
லியோ ஆடியோ விழா ரத்தாகியிருக்கிறது. இதற்கு முன் நடந்த இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசியது என்ன? ஒரு ரிவைண்ட்.
புலி
எனக்கு உண்மையா ஒருத்தரை நேசிக்க தெரியும் பொய்யா ஒருத்தரை வெறுக்க தெரியாது.
மெர்சல்
Negativityஐ ignore பண்ணிட்டு உங்க வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இருங்க. கத்தி கத்தி பாத்துட்டு tired ஆகிருவாங்க.
அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் ஆசையா பழகுவாங்க அன்பா இருந்தோம்னா பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க. நான் அன்பா இருக்குறேன்னு நினைக்குறேன் அதுனாலதான் எனக்கு இத்தனை உண்மையான நண்பர்கள்.
சர்க்கார்
உசுப்பு ஏத்துறவன் கிட்ட உம்முன்னும் கடுப்பு ஏத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்
பிகில்
அவுங்கள மாதிரி ஆகணும் இவுங்கள மாதிரி ஆகணும்னு வராதீங்க அதுக்கு தான் அவுங்களே இருக்காங்களே நீங்க நீங்களாவே வாங்க. யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க உங்களோட அடையாளத்தை இந்த உலகத்துக்கு பதிவு பண்ணிட்டு போங்க.
மாஸ்டர்
நதி மேல சில பேர் விளக்குகளை ஏத்தி வணங்குவாங்க சில பேர் பூக்களை தூவி வரவேற்பாங்க சில பேர் கல் எறிஞ்சு விளையாடுவாங்க. ஆனா, அந்த நதி அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும்.
நதி மாதிரிதான் வாழ்க்கையும் வணங்குறவுங்களும் இருப்பாங்க, வரவேற்கிறவங்களும் இருப்பாங்க, நம்மளை எதிர்க்கிறவங்களும் இருப்பாங்க. நம்ம நம்ம வேலையை பாத்துட்டு அந்த நதி மாதிரியே போய்கிட்டே இருக்கனும்.
உண்மையா இருக்கணும்னா சில நேரம் ஊமையா இருக்க வேண்டியதா இருக்குங்க
பீஸ்ட்
எதுவா இருந்தாலும் நாம தான் இறங்கி விளையாடுறவங்களா இருக்கணும் இல்லனா கை தட்டி உற்சாக படுத்தறவங்களா இருக்கணுமே தவிர வெறுமென விமர்சனம் பண்றவங்களா மட்டுமே இருக்கக்கூடாது
வாரிசு
தேவையான விமர்சனமும் தேவை இல்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓடவைக்கும்
ஜெயிக்கணும்னு நினைக்குற எல்லார்க்கு உள்ளேயும் ஒரு போட்டியாளர் இருக்கனும் அந்த போட்டியாளர் நீங்களா மட்டும் தான் இருக்கனும்
லியோ
——– ———– ———- ———————————- ——– —
————————– ——– ——– ——- ——.
லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒருவேளை நடந்து இருந்தால் இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசி இருப்பார் என்று யூகித்து நீங்களே விடுபட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்.