No menu items!

Kollywood-டின் லேட்டஸ்ட் காதல் ஜோடி

Kollywood-டின் லேட்டஸ்ட் காதல் ஜோடி

முதலில் மறுப்பார்கள். பிறகு மெளனம் காப்பார்கள். அடுத்து நல்ல நண்பர்கள் என்பார்கள். இறுதியாக காதல் என சொல்வார்கள்.

இதுதான் கோலிவுட்டின் பாரம்பரியமிக்க காதல் டிசைன்.

இதில் காதல் திருமணம் செய்து கொண்ட பல ஜோடிகள் அடங்குவர்.

லேட்டஸ்ட்டாக இப்படி ஒப்புக் கொண்டிருப்பது கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்.

இந்த ஜோடி ஒருவழியாக செட்டிலாகிவிட்டார்கள். அப்படியென்றால் அடுத்து எந்த ஜோடி?

இந்த கேள்விக்கான பதிலாக இருப்பவர்கள் ’பாய்ஸ்’ பட புகழ் சித்தார்த் மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ அதிதி

பல வகைகளில் இவர்களை வளைத்து கொண்டிருக்கும் ஊடகங்கள் சொல்வது என்னவென்றால், இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்காத போதும் கூட அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்கிறார்கள் என்பதுதான்.

அடுத்தும் அதிதியின் பிறந்த நாளுக்கு சித்தார்த்தும் அதிதியும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது சமூக ஊடக கணக்கில் ஏற்றிவிட்டு வாழ்த்துகளையும் பகிர்ந்திருக்கிறார் சித்தார்த். அத்தோடு விட்டாரா அதுதான் இல்லை. ‘என் இதயத்தின் இளவரசி’ என்று கமெண்ட்டில் ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார்.

‘உன்னுடைய எல்லா கனவுகளும், பெரியது, சிறியது, இன்னும் மனதில் தோன்றாத கனவுகள் என எல்லா கனவுகளும் நிஜமாக வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். உனக்காக நான் எப்பொழுதும் இருக்கிறேன்’ என்று சாடைமாடையாக சொல்லியதைப் பார்த்து சினிமா ஊடகங்கள் கண் சிமிட்டுகின்றன.

பாலிவுட்டின் சோஹா அலிகான், சமந்தா, ஷ்ருதி ஹாஸன் என இவரது முந்தைய காதல் கணக்கில் சில நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டாலும் எதுவும் சீஸ் ஆன கார் இன்ஜின் போல ஒரு கட்டத்திற்கு பிறகு நகரவில்லை.

தற்போது சிங்கிள் ஆக இருக்கும் இருவரும் வழக்கம் போல் மெளனம் காக்கிறார்கள்.

இனி நண்பர்கள் என குட்பை உடன் பிரிவார்களா இல்லை காதலர்கள் என இணைவார்களா என்பது அவர்களுக்கு மட்டும் விடை தெரிந்த கேள்வி.

‘Varisu’ விஜயை கலாய்க்கும் நெட்டிசன்கள்

’தளபதி விஜயின் மாஸ் டான்ஸை பார்க்க தயாராக இருங்கள். திரையரங்கில் ஒருத்தர் கூட உட்கார்ந்தபடி பாட்டை பார்க்கப் போவது இல்லை. அந்தளவிற்கு ஃபயராக இருக்கும்’

இப்படி டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் சமூக ஊடகமொன்றில் ஒரு மெஸேஜ்ஜை தட்டிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ‘ரஞ்சிதம்மா’ பாடலின் ப்ரோமோ வெளியானது.

’ரஞ்சிதமே’ பாடலில் விஜய் காலை வளைத்து ஆடும் மூவ்மெண்டை ப்ரோமோவில் காட்டியிருந்தார்கள்.

இதைப் பார்த்து விஜயை ரசிகர்கள் கொண்டாட, மறுபக்கம் நெட்டிசன்கள் கலாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

’ஒவ்வொருத்தரும் தளபதியோட டான்ஸையும், ஜானி மாஸ்டர் கோரியோக்ராஃபியையும் ட்ரோல் பண்றாங்க. ஆனா நான் தளபதியோட புலி பட ஓபனிங் சாங் டான்ஸையே பொறுத்துகிட்டவன்’

‘என்னடா 30 செகண்ட் ப்ரோமோவுக்கு இப்படி அழுவுறீங்க. ஃபுல் வீடியோவுல ராஷ்மிகாவோட டான்ஸ், எக்ஸ்ப்ரஷன் எல்லாம் இருக்குமே. அப்போ என்ன பண்ணுவீங்க’

இப்பவே தெரியுதுடா

என்னடா தெரியுது

நெல்சன் = வம்சி
அரபிக்குத்து = ரஞ்சிதமே
பீஸ்ட் = வாரிசு.’

’டேய் ஜானி… என்னடா ஸ்டெப் இது… எங்க அண்ணாவ திருப்பி கொடு டா..டேய்..’

’தளபதி ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் போட்டாரு பாரு எஃப்.டி.எஃப்.எஸ். தெறிக்கப் போகுது’

எது அவரு பேண்ட்ல போன பல்லிய உதறிவிட்டாரே அதுவா’

இப்படி பல கமெண்ட்களை வைத்து ஜானி மாஸ்டரை கலாய்த்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

மறுபக்கம், சிவகார்த்திகேயனுக்கு வைத்த டான்ஸ் மூவ்மெண்ட்களை தளபதிக்கு வைத்தது சரியா என்கிற ரீதியிலும் ஜானி மாஸ்டரிடம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Samantha -வை கண்டுகொள்ளாத முன்னாள் கணவர்

சமந்தாவுக்கு மயோசைடிஸ் பிரச்சினை இருப்பதை அறிந்து ரசிகர்களும், நட்சத்திரங்களும் இன்னும் ’கெட் வெல் சூன்’ என ஒரு பாஸிட்டிவ்வான எண்ணத்தை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தனியாக வசித்து வரும் சமந்தாவை நாக சைதன்யா சந்தித்து பேசினார் என்று ஒரு தகவல் வெளியானது.

விசாரித்த வகையில் அந்த செய்தி உண்மையல்ல. பொய். யாரோ கிளப்பி விட்டது என்கிறார்கள்.

சமந்தா தன்னுடைய ஆட்டோ இம்யூன் பிரச்சினை குறித்து சொல்லிய போதே, முன்னாள் கணவர் நாக சைதன்யா ஆறுதல் சொன்னாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இன்று வரை சமந்தாவுக்கு ஒரு மெஸேஜ் அல்லது போன் கால் கூட நாக சைதன்யா பண்ணவில்லையாம். அதேபோல் ‘சமந்தா இன்றும் கூட எங்கள் குடும்பத்துடன் நல்ல உறவில் இருக்கிறார். என்றென்றும் அவர் மீது எங்கள் அன்பு குறையாது’ என்று ஸ்டேட்மெண்ட் விட்ட சமந்தாவின் மாமனார் நாகார்ஜூனாவும் கூட ஆறுதல் கூறவில்லை. நேரில் சென்று பார்க்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...