பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஜோடி கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா.
இவர்கள் திருமணத்தை தாண்டி இவர்கள் இருவருக்கும் இருக்கும் ப்ராண்ட் மதிப்பு பற்றிதான் அதிகம் செய்திகள் அடிப்படுகிறது.
சித்தார்த் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி இருக்கலாம் என்றும் கியாரா அத்வானியின் மதிப்பு ஏறக்குறைய 25 கோடி என்றும், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருப்பதால் இந்த ஜோடியின் சொத்து மதிப்பு சுமார் 125 கோடி வரை இருக்கலாம் என்கிறது. பாலிவுட் வட்டாரம்.
2012-ல் ’ஸ்டூடெண்ட் ஆஃப் த இயர்’ [Student of the Year] படம் மூலம் அறிமுகமான சித்தார்த், வீட்டு உபயோகப் பொருட்கள், லைஃப் ஸ்டைல் நிறுவனங்கள் , ஸ்மார்ட்ஃபோன் விளம்பரங்களிலும் அதிகம் நடித்து வருகிறார்.
இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்க சித்தார்த் 3 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். சினிமாவில் நடிக்க 6 முதல் 8 கோடி வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.
’பாலிவுட் கிங்’ ஷாரூக்கானின் மனைவி கெளரி கான் இண்ட்டீரியர் டிசைன் செய்த 3 பெட்ரூம் ஃப்ளாட்டில் வசிக்கிறார் சித்தார்த்.2.26 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், 66.97 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் எம்.எல். 350 சிடிஐ கார் என இரண்டு காஸ்ட்லி கார்கள் இவர் வசம் உள்ளன.
கியாரா அத்வானி விளம்பரங்களில் நடிக்க 1 முதல் 1.5 கோடி வாங்குகிறாராம். சினிமாவில் நடிக்க 3 கோடி கேட்கிறாராம்.
கியாரா அத்வானி மெர்சிடிஸ் பென்ஸ் இ220 டி கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 60 லட்சம். மும்பையில் காஸ்ட்லியான ப்ளானெட் கோத்ரேஜ் ஸ்கைஸ்க்ராபரில் 15 கோடி மதிப்புள்ள ஃப்ளாட்டில் கியாரா அத்வானி வசிக்கிறார்.
இப்படியொரு லைஃப் ஸ்டைலில் இருக்கும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதால், இருவருமே புகழ்பெற்ற நட்சத்திரங்களாக இருப்பதால், இந்த ஜோடியும் ரன்வீர் – தீபிகா படுகோன், விராத் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடிகளைப் போல ஸ்டார் ஜோடிகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
தள்ளிப் போகும் இந்தியன் – 2 ரிலீஸ்!
ஒரு படத்தை முடித்த பிறகே, அடுத்தப் படத்தை இயக்குவது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பாணி. அப்போதுதான் முழுக்கவனமும் அந்தப் படத்தின் மீது இருக்கும். கதையும், திரைக்கதையும் கேட்கும் அம்சங்களை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களை முழுமையாக கொடுக்க முடியும் என்பதால்தான் இதை தனது கொள்கையாகவே வைத்திருந்தார் ஷங்கர்.
ஆனால் இப்பொழுது ஷங்கருக்கு கடும் நெருக்கடியாம்.
காரணம் ’இந்தியன் -2’ மற்றும் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கிவரும் ‘ஆர்.சி.15’ ஆகிய இரு படங்களின் ஷுட்டிங் மாறி மாறி நடைபெற்று வருவதான்.
முதலில் ஷங்கர் இயக்க ஆரம்பித்தது ‘இந்தியன் – 2’ படம்தான். இப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகள். பட்ஜெட் பிரச்சினை, ஷுட்டிங்கின் போது நடந்த விபத்தில் அப்படக்குழுவை சேர்ந்த டெக்னிஷியன் மரணம் இப்படி தொடர் பிரச்சினைகள்.
இதனால் இந்தியன் – 2 ஷூட்டிங்கில் ப்ரேக் ஏற்பட, தெலுங்குப் பக்கம் கிளம்பினார் ஷங்கர். அப்படி ஆரம்பித்ததுதான் ராம் சரணின் ஆர்.சி. 15.
இப்படத்தின் ஷூட்டிங் ஜரூராக போய்கொண்டிருந்த போதே, கமலின் ’விக்ரம்’ வெற்றி இந்தியன் – 2 தலையெழுத்தை அப்படியே மாற்றிவிட்டது. கமலுக்கு கிடைத்திருக்கும் மவுசை வைத்து ‘இந்தியன் – 2’ வை வெளியிட லைக்கா முழுவீச்சில் இறங்கிவிட்டது.
இதனால்தான் இரு படங்களின் ஷூட்டிங்கையும் நடத்த வேண்டியதாயிற்று. இப்படி இரு படங்களின் ஷூட்டிங்கையும் மாற்றி மாற்றி வைப்பதால், நாட்கள் இழுத்துக்கொண்டே போகிறதாம். இப்படியே ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போவதால், இந்த இருபடங்களின் ரிலீஸூம் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.
ஷங்கர் படங்களில் ஷூட்டிங் எவ்வளவு நாட்கள் பிடிக்குமோ அதைவிட அதிக நாட்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்கு ஆகும். இன்னும் ஷூட்டிங் முடியாததால், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளை முடிக்கவே இந்த வருட இறுதியாகிவிடும்.
இதனால் அடுத்தவருடம்தான் இந்த இரண்டுப் படங்களும் வெளியாகும் என்கிறார்கள். பொங்கலுக்கு ‘இந்தியன் – 2’ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்!
வெற்றிமாறன் இதுவரையில் இயக்கியப் படங்கள் எல்லாமே தமிழ்ப்படங்கள்தான். அதிலும் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என தனுஷூடன் இணைந்து பண்ணிய படங்கள்தான் அதிகம்.
இப்பொழுது முதல் முறையாக தெலுங்குப் படம் இயக்குவது பற்றி வெற்றிமாறன் யோசித்து வருகிறார் என்ற கிசுகிசு சமீபத்தில் கிளம்பியது.
இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டாக இருக்கும் இந்தப் படத்திலும் தனுஷ் இருக்கிறார். அவருடன் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட புகழ் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருக்கிறார்.
கதை, திரைக்கதை இரண்டும் இப்படத்தை இரண்டுப் பாகங்களாக எடுத்தால்தான் அதற்கான வீரியம் இருக்கும் என்று தீர்மானிக்க வைத்திருக்கிறது.
முதல் பாகத்தில் தனுஷீன் ஆடுகளமாகவும், இரண்டாம் பாகம் ஜூனியர் என்.டி.ஆரின் அதகளமாகவும் இருக்கும் என்றும் அந்த கிசுகிசுவுக்கு கூடுதலாக தூபம் போடப்பட்டது.
ஆனால் இதில் உண்மை இல்லை என்கிறார்கள். தெலுங்குப் படமாக குறிப்பிட்டது விடுதலை படத்தின் தெலுங்கு ரீமேக்தான். அதனால் இந்த படத்திற்கு வாய்ப்பே இல்லை.
காரணம் கமலுக்கு வெற்றிமாறன் சொல்லிய கதை ஓகே ஆகும் பட்சத்தில், வெற்றிமாறன் கமலுடன் இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். கமல் இந்தியன் – 2 படத்தை முடித்தப் பிறகே அடுத்த பட த்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியும்.